உற்பத்தி சார்ந்த சலுகைத் திட்டம் குறித்து மாநாடு
- உற்பத்தி சார்ந்த சலுகைத் திட்டம் குறித்து காணொலி காட்சி மாநாடு நடந்தது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: மேக் இன் இந்தியா திட்டத்தை கடந்த 7 ஆண்டுகளாக அரசு தீவிரமாக செயல்படுத்தி வரு கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் உற்பத்தித் துறை மிகவும் முக்கியமானது.
- அதிக அளவிலான உற்பத்தி மூலமே அதிக அளவிலான வேலை வாய்ப்பு உருவாக்கமும் சாத்திய மாகும். வளர்ச்சியடைந்த நாடு கள் அனைத்துமே உற்பத்தியை அதிகரித்த நாடுகளாக்தான் உள்ளன.
- இந்தியாவும் இதே வழியில் அத்தகைய அணுகுமுறையை கடைபிடிக்கிறது. அதிகபட்ச சிரத்தையுடன் பழுதில்லாத பொருட்கள் உற்பத்தி மூலமே சர்வதேச சந்தையில் போட்டியிட முடியும். சர்வதேச அளவில் போட்டியிடுவதற்கான பொருட் களை உற்பத்தி செய்வதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்.
- நமது பொருட்களின் உற்பத்தி செலவு, தரம் மற்றும் அதன் உழைப்பு உள்ளிட்டவை சர்வதேச சந்தையில் மற்ற நாடுகளின் தயாரிப்பை விட சிறப்பானதாக இருக்க வேண்டும்.
- அத்தகைய தன்மையை எட்ட நீண்ட காலம் ஒருங்கிணைந்து உழைத்தால் மட்டுமே எட்ட முடியும். நமது தயாரிப்புகள் எளிதில் உபயோகிக்கும் தன்மை கொண்ட வையாகவும், நவீனமானதாகவும், கட்டுபடியாகும் விலையிலும், இருக்க வேண்டும்.
- பட்ஜெட் போடுவது மற்றும் கொள்கை வகுப்பது மட்டுமே அரசின் செயல்பாடுகளாக இருக்க கூடாது. இதில் நாட்டு மக்கள் அனைவரின் பங்களிப்பும் இருந்தால் மட்டுமே வளர்ச்சி இலக்கை எட்ட முடியும்.
- கடந்த ஆண்டு கரோனா பரவ லால் ஏற்பட்ட தேக்க நிலையை ஏற்றுக் கொண்டாலும், அதனால் ஏற்பட்ட புதிய வாய்ப்புகளை நாம் பயன்படுத்தி விரைவான வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டும்.
- உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு ஒரு துறைக்கு அளிக்கப்பட்டால் அதன் பலன் அனைத்துத் துறைகளுக்கும் கிடைக்கும். குறிப்பாக ஆட்டோமொபைல் துறை மற்றும் பார்மா துறைக்கு உற்பத்தி அடிப்படையில் ஊக்க சலுகை அளிக்கப்பட்டால் அதனால் வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலை குறையும்.
- எரிசக்தித் துறையானது நவீன பேட்டரி மூலம் மேலும் நவீனமயமாகியுள்ளது. வேளாண் துறையிலும் உற்பத்தி சார்ந்த சலுகைகள் அளிக்கப்படுவது நல்ல பலனை அளிக்கிறது. இது ஜவுளி மற்றும் உணவு பதப்படுத்தல் துறைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- முன்பெல்லாம் தொழில் துறைக்கு ஊக்க சலுகையானது உள்ளீடு பொருட்களுக்கு மானியம் வழங்குவதாக இருந்தது. இப்போது உற்பத்தி அடிப்படையில் வழங்கப்படுகிறது.
எஸ்.எப்.டி.ஆர். எனப்படும் திட எரிபொருள் குழாயுடன் கூடிய ஏவுகணை தொழில்நுட்பம் வெற்றிகரமாக பரிசோதனை
- ஒடிசாவில் எஸ்.எப்.டி.ஆர். எனப்படும் திட எரிபொருள் குழாயுடன் கூடிய ஏவுகணை தொழில்நுட்பம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
- தொலைதுார ஏவுகணைகளை மேம்படுத்த உதவும் எஸ்.எப்.டி.ஆர். எனப்படும் திட எரிபொருள் குழாயுடன் கூடிய ஏவுகணை தொழில்நுட்பம் டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப்பட்டது.
- இந்த தொழில்நுட்பம் ஒடிசாவின் பலாசோரில் உள்ள ஏவு தளத்தில் இருந்து பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பரிசோதனையை வெற்றிகரமாக முடித்த டி.ஆர்.டி.ஓ. மற்றும் இந்திய விமானப் படைக்கும் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.