Type Here to Get Search Results !

TNPSC 27th MARCH 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

இந்தியா வங்க தேசம் இடையே 5 ஒப்பந்தம் கையெழுத்து

  • வங்க தேச பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவாக இரு நாடுகளுக்கு இடையே சுகாதாரம், வர்த்தகம், எரிசக்தி, வளர்ச்சி ஒத்துழைப்பு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. 
  • மேலும் மனிதாபிமான முயற்சியாக வங்கதேசத்துக்கு 109 ஆம்புலன்ஸுகளுக்கான சாவியையும், 1.2 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிக்கான அடையாளப்பெட்டியையும் ஷேக் ஹசீனாவிடம் பிரதமர் மோடி வழங்கினார். பின்னர் மோடி-ஹசீனா இணைந்து இந்தியா, வங்கதேசம் இடையே புதிய பயணிகள் ரயிலை தொடங்கி வைத்தனர்.
  • இந்த ரயில் வங்கதேச தலைநகர் தாகாவிலிருந்து மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி வரை இயக்கப்படும். ஏற்கனவே இந்தியா, வங்கதேசம் இடையே மைடிரீ எக்ஸ்பிரஸ் (தாகா-கொல்கத்தா), பந்தன் எக்ஸ்பிரஸ் (குல்னா-கொல்கத்தா) ஆகிய 2 பயணிகள் ரயில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கட்டாயமாகிறது பிஐஎஸ் தரச்சான்று
  • கடைகளில் விற்பனை செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் மத்திய அரசின் பிஐஎஸ் தரச்சான்றிதழை கட்டாய மாகப் பெற வேண்டும் என்று இந்திய உண வுப் பொருள்கள் ஒழுங்காற்று அமைப்பான எஃப்எஸ்எஸ்ஏஐ உத்தரவிட்டுள்ளது
  • 2008ஆம் ஆண்டின் உண வுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், அனைத்து உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களும் உரிய உரிமமும் பதிவும் பெற்றே தங்களது நடவடிக்கைக ளைத் தொடங்க வேண்டும்.
  • அத்துடன், 2011-ஆம் ஆண்டில் அறிமு கப்படுத்தப்பட்ட விதிமுறைகளின்படி, இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் (பிஐ எஸ்) சான்றிதழைப் பெறாமல் எந்த நிறுவனமும் குடிநீர் பாட்டில்கள் மற்றும் கேன்களை விற்பனை செய்யக் கூடாது.
  • எனினும், எஃப்எஸ்எஸ்ஏஐ சான்றிதழை மட்டுமே பெற்றுக் கொண்டு ஏராளமான நிறுவனங்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைத் தயாரித்து விற்பனை செய்து வருவதாக எங்களுக்குத் தகவல்கள் வருகின்றன
  • எனவே, குடிநீர் தயாரிப்பதற்கான எஃப் எஸ்எஸ்ஏஐ சான்றிதழைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், பிஐஎஸ் தரச்சான்றிதழை கட்டாயமாகப் பெற்றிருக்க வேண்டும். 
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் விஜய்வீர்-தேஜஸ்வினி ஜோடிக்கு தங்கம்
  • தில்லியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நடைபெற்ற 25 மீ. ரேபிட் ஃபயர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் விஜய்வீர் சித்து  தேஜஸ்வினி ஜோடி 9-1 என்ற புள்ளிகள் கணக்கில் சகநாட்டவரான குருபிரீத் சிங் அசோக் பாட்டீல் ஜோடியை வீழ்த்தியது
  • உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி யில் 25 மீ. ரேபிட்ஃபயர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் விஜய்வீர் சித்து-தேஜஸ்வினி ஜோடி தங்கம் வென்றது. 
  • தகுதிச்சுற்றில் குருபிரீத் சிங்-அசோக் பாட்டீல் ஜோடி 370 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தபோதிலும், இறுதிச்சுற்றில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது
  • இதேபிரிவில் வெண்கலப் பதக்கத்துக்காக நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் கியான் செனாய்-ஷ்ரேயஸி சிங் ஜோடி 35-38 என்ற புள்ளிகள் கணக்கில் துருக்கியின் சஃபி சாரிடர்க்-யாவுஸ் இல்னாம் ஜோடியிடம் தோல்வி கண்டது
  • தற்போதைய நிலையில், இந்தியா 13 தங்கம், 8 வெள்ளி, 6 வெண் கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தப் போட்டி ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவடைகிறது. இந்தப் போட்டியில் 53 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel