ஐ.நா அமைதிக் குழுவுக்கு 2 லட்சம் டோஸ் கொரோனா இந்தியா தடுப்பூசிகள்
- 'கோவிஷீல்டு' மற்றும் 'கோவாக்சின்' தடுப்பூசிகள், நம் நாட்டில் தயாரிக்கப்பட்டு, பல நாடுகளுக்கும் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
- இதுவரை, 70 நாடுகளுக்கு, ஆறு கோடி டோஸ், கொரோனா தடுப்பூசிகளை, இந்திய அரசு வழங்கியுள்ளது. ஐ.நா.,வின் அமைதிக் குழுவுக்கு, இரண்டு லட்சம் டோஸ் தடுப்பூசிகளை பரிசாக வழங்க உள்ளதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,
- சமீபத்தில் அறிவித்தார்.உலகம் முழுவதிலும் இருந்து, 121 நாடுகளைச் சேர்ந்த, 85 ஆயிரத்து, 782 பேர், ஐ.நா., அமைதிக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.இவர்களுக்காக, இரண்டு லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை, இந்திய அரசு அனுப்பிவைக்கிறது.
வங்கதேச சுதந்திர தின பொன் விழா 2021
- பாகிஸ்தானிலிருந்து பிரிந்து, 1971ல், வங்கதேசம் தனி நாடாக உருவானது. இதில் இந்தியாவுக்கு பெரும் பங்கு உள்ளது. இந்திய ராணுவத் தின் உதவியுடன் தான், வங்கதேசம் உருவானது.
- ஆண்டுதோறும், வங்கதேசத்தின் சுதந்திர தின விழா, மார்ச் 26ல்,தேசிய தின விழாவாக கொண்டாடப்படுகிறது. வங்கதேசம் தனி நாடாக உருவாகி, 50 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை முன்னிட்டு, சுதந்திர தின பொன் விழாவை சிறப்பாக கொண்டாட, அந்த நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
- இதையொட்டி, தலைநகர் தாகாவில் நடக்கும் விழாவில் பங்கேற்க, பிரதமர் மோடிக்கு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்தார். இதை, பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.
- கொரோனா பரவலை தடுக்க, கடந்த ஆண்டு மார்ச் 25ல், நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின், பிரதமர் மோடி, எந்த வெளிநாட்டு பயணத்தையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், ஒரு ஆண்டுக்குப் பின், முதல் வெளிநாட்டு பயணமாக வங்கதேசத்துக்கு சென்றார்.
- ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் செல்வதற்காக, மத்திய அரசு சார்பில், 'போயிங் 777' விமானம், சமீபத்தில் வாங்கப்பட்டது. இந்த விமானத்தில் பிரதமர் மோடி முதல் முறையாக, வங்கதேசத்துக்கு சென்றார்
- தாகா விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வரவேற்றார். அந்நாட்டு தேசிய கீதம் முழக்கத்துடன், பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
- தாகாவில் நடந்த சுந்திர தின பொன் விழா மற்றும் வங்கதேச தந்தை முஜிபுர் ரஹ்மானின் நுாற்றாண்டு விழாவில், ஷேக் ஹசீனாவுடன், பிரதமர் மோடி பங்கேற்றார்.
- விழாவில், வங்கபந்து தேசிய அருங்காட்சியகத்தை, ஹசீனாவுடன் இணைந்து, பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
- பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்பு கூட்டணியனது (Coalition for Disaster Resilient Infrastructure (CDRI) நாடுகள், ஐ.நா. முகமைகள், பலதரப்பு வளர்ச்சி வங்கிகள், தனியார் துறை மற்றும் கல்வியாளர்களின் ஓர் உலகளாவிய தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது.
- இது பேரிடர் நெகிழ்திறன்மிக்க கூட்டணியாகும். 23 செப்டம்பர் 2019-ல் தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- உயர் வளிமண்டல பரப்பில் நிலவும் காற்று மற்றும் பிளாஸ்மா தொடர்பான ஆய்வுக்காக இஸ்ரோ சார்பில் வெற்றிகரமாக ஏவப்பட்டது
- சிறிய ரக ஆய்வு சாதனங்களை புவியின் தாழ்ந்த "சவுண்டிங் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தவும், வளிமண்டலம் அயனிகள் ராக்கெட்” தொடர்பான விண்வெளி ஆய்வுக்கும் சவுண்டிங் ராக்கெட்கள் பயன்படுத்தப்படுகின்றன
- இஸ்ரோவிடம் ஆர்எச்-200, ஆர்எச்-300, ஆர்எச்-560 என 3 விதமான சவுண்டிங் ராக்கெட்கள் உள்ளன. இது 2 நிலைகளைக் கொண்டது. இவற்றின் மூலம் 100 கிலோ வரையிலான ஆய்வுக் கருவிகளை அதிகபட்சம் 475 கி.மீ தூரம் கொண்ட புவியின் சுற்றுப் பாதையில் நிலைநிறுத்த முடியும்.
- அதன்படி கடந்த 1965-ஆம் ஆண்டு முதல் இதுவரை இஸ்ரோ சார்பில் 100க்கும் மேற்பட்ட சவுண்டிங் ராக்கெட்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டடுள்ளன. அந்த வரிசையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ சார்பில் ஆர்எச்-560 (RH-560) ரக சவுண்டிங் ராக்கெட் கடந்த மார்ச் 12-ஆம் தேதி வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.