Type Here to Get Search Results !

TNPSC 25th MARCH 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழுவுக்கு 2 எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ரவீந்திரநாத் போட்டியின்றி தேர்வு

  • மதுரையில் எய்ம்ஸ் சிறப்பு மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா 2019-ல் முடிந்த பிறகும் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. இதற்கு அதற்கான நிர்வாகக்குழு அமைக்கப்படாமல் இருப்பதும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. 
  • நாட்டிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கான சட்டம் 1959-ன் படி, அதன் ஒவ்வொரு மருத்துவமனையின் நிர்வாகக் குழுவிலும் இரண்டு எம்.பி.க்களும் நியமிக்கப்பட வேண்டும்.
  • இந்நிலையில் மதுரை எய்ம்ஸுக்கு 2 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பை நாடாளுமன்றம் கடந்த பிப்ரவரி 12-ல் வெளியிட் டது. மக்களவை உறுப்பினர்களில் மதுரையின் சு.வெங்கடேசன், விருதுநகரின் மாணிக்கம் தாகூர், தேனியின் ஓ.பி.எஸ்.ரவீந்திரநாத் ஆகியோர் இப்பதவிக்கு நாடாளு மன்றத்தில் மனு தாக்கல் செய் திருந்தனர்.
  • இந்நிலையில் கடைசி நேரத்தில் சு.வெங்கடேசன் தனது மனுவை வாபஸ் பெற்றார். இதனால், காங்கிரஸின் கொறடாவான மாணிக்கம் தாகூரும், அதிமுகவின் ஒரே மக்களவை எம்.பி.யான ரவீந்திரநாத்தும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். 

தொடங்கியது 'ஒலிம்பிக் சுடர்' ஓட்டம்

  • ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கு முன்னோட்டமாக பராம்பரிய ஒலிம்பிக் சுடர் ஓட்டம் நேற்று தொடங்கியது. 
  • அணு உலை வெடிப்பு, ஆழிப்பேரலை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டதுதான் ஜப்பானின் வடக்குகிழக்கு நகரம் புகுஷிமா. அந்த நகரில் நடைபெற்ற விழாவில் ஒலிம்பிக் சுடர் ஓட்டம் தொடங்கியது. 
  • முதலில் ஜப்பான் கால்பந்து வீராங்கனை அசுசா இவாஷிமிசு ஒலிம்பிக் சுடரை ஏற்றினார். தொடர்ந்து விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் ஒலிம்பிக் சுடரை ஏந்தி ஓடுகின்றனர்.
  • விழாவில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தலைவர் செய்கோ ஹஷிமோடோ, விளையாட்டு பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். 
  • கொரோனா பீதிக்கு இடையில் கடுமையான விதிமுறைகளுடன் ஒலிம்பிக் சுடர் தொடர் ஓட்டம் 121 நாட்களுக்கு ஜப்பானின் முக்கிய நகரங்களின் வழியாக செல்லும். இறுதியில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோ நகரை சென்றடையும். 
  • கொரோனா பீதி, ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்க வேண்டிய ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. 
  • ஆனால் பண்டைய ஒலிம்பிக் போட்டிகள் நடந்த கிரீசில் இருந்து வழக்கம் போல் ஒலிம்பிக் சுடர் கடந்த ஆண்டு மார்ச் மாதமே ஜப்பான் வந்து சேர்ந்து விட்டது. 
  • இயற்கை, செயற்கை பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்பட்ட புகுஷிமாவில் இருந்து ஒலிம்பிக் சுடர் ஓட்டம் தொடங்கியிருப்பது, 
  • அந்நாட்டு மக்களிடையே புதிய நம்பிக்ைகயை ஏற்படுத்தியுள்ளது. கூடவே தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் இந்த ஆண்டு கட்டாயம் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பும் உலகம் முழுவதும் உருவாகி உள்ளது.

அடுத்த நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 12.8% ஆக உயரும் ஃபிட்ச் கணிப்பு

  • அடுத்த நிதி ஆண்டின் வளர்ச்சி விகிதம் 11 சதவீதமாக இருக்கும் என முதலில் ஃபிட்ச் கணித்திருந்தது. தற்போது, சூழல் மேம்பட்டிருப்பதால் வளர்ச்சி விகிதத்தை ஃபிட்ச் உயர்த்தி இருக்கிறது. 
  • இந்தியாவைபோல துருக்கியும் வேகமாக வளர்ச்சி அடையும் நாடு என ஃபிட்ச் வகைபடுத்தி இருக்கிறது. 2020-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பொருளாதாரம் வேகமாக மீண்டு எழுந்தது. 
  • எதிர்பார்க்கப்பட்டதை விட வேகமான வளர்ச்சி இருந்ததால் 11 சதவீதத்தில் இருந்து 12.8 சதவீதமாக வளர்ச்சி இருக்கும் என கணித்திருக்கிறோம் என ஃபிட்ச் தெரிவித்திருக்கிறது.
காப்பீட்டுத் துறையில் 74% அந்நிய நேரடி முதலீடு
  • காப்பீட்டுத் துறையில் (insurance sector) அந்நிய நேரடி முதலீட்டை (foreign direct investment) 74 சதவீதமாக உயர்த்த வழிவகுக்கும் காப்பீட்டு சட்டத் திருத்த மசோதா (2021) மக்களவையில் மார்ச் 22 அன்று நிறைவேற்றப்பட்டது 
  • இதன்மூலம் காப்பீட்டுச் சட்டம் 1938 மீண்டும் திருத்தப்பட்டு (Insurance (amendment) Bill 2021) காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீத்தில் இருந்து 74 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel