சர்வதேச விண்வெளி நிலையத்தில் காணப்பட்ட பாக்டீரியாவுக்கு தமிழக விஞ்ஞானியின் பெயர்
- அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளால் விண்ணில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு இடங்களில் இருந்து 4 இன பாக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆய்வுப் பணியில் நாசாவுடன் ஹைதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
- இதில் ஒரு வகை பாக்டீரியா, மெத்திலோரூப்ரம் ரோடீசியனம் ஆக அடையாளம் காணப்பட்டாலும் மற்ற வகை பாக்டீரியாக்கள் அடையாளம் காணப்படாமல் இருந்தது.
- இந்நிலையில் தற்போது புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள ஒரு வகை பாக்டீரியாவை தமிழகத்தின் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியராக இருக்கும் சையத் அஜ்மல் கான் பெயரில் 'மெத்திலோ பாக்டீரியம் அஜ்மலி' என்று அழைக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
- உருளை வடிவிலான இந்த பாக்டீரியா, வளிமண்டல நைட்ரஜன் வாயுவை தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்கள் பயன்படுத்தக் கூடிய வடிவமாக மாற்றுவது, தாவர வளர்ச்சி, தாவர நோய்க்கிருமிகளுக்கு எதிரான செயல்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடையது ஆகும்.
- எனவே இந்த பாக்டீரியா விண்வெளியில் பயிர்களை வளர்ப்பதற்கான திறவுகோலை கொண்டிருக்க லாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
சுகாதார பணியாளர்களுக்கு தேசிய ஆணையம்
- மருத்துவ துணைநிலை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் மருத்துவ பணியின் ஒரு அங்கமாவர். டாக்டர்களுக்கு இணையான பங்களிப்பு இவர்களுடையது.
- இன்னும் சொல்லப்போனால் அவர்களது பணியைவிட இவர்களது பணி மேலானது என்று கூற வேண்டும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே புதிய மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த மசோதா ஏற்கெனவே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- சுகாதார பணி மற்றும் துணை மருத்துவப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், டெக்னீஷியன்கள், ரேடியோகிராபர், டயடீஷியன் ஆகியோர் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் மிகச் சிறப்பாக பணியாற்றினர். கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள்வதில் டாக்டர்களின் பணிக்கு இணையாக இவர்களது பங்களிப்பும் இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
- இந்த மசோதா கொண்டு வருவதன் நோக்கமே, இந்தப் பணிகளில் ஈடுபடுவோருக்கென தகுதிகளை வரையறுத்து அத்தகைய தகுதிபடைத்தவர்கள் இப்பணியில் ஈடுபட வைப்பதே இந்த மசோதாவின் நோக்கம் என்று ஹர்ஷ்வர்தன் கூறினார்.
- அனைத்து பணியாளர்களுக்கு மான தகுதி வரையறை, சர்வதேச விதிமுறைகளின்படி வகுக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும்யூனியன் பிரதேசங்களின் பிரதி நிதிகள் ஆணையத்தில் இடம்பெற வழியேற்படுத்தப்பட்டுள்ளது.
- இதன் மூலம் ஒவ்வொரு பிரிவுபணியாளர்களுக்கும் தகுதியை வரையறுப்பதற்கு பொதுவான வரம்பு நிர்ணயிக்க வழியேற்படும். மாநிலங்களில் இதற்கான ஆணையம் இதை செயல்படுத்தும். இதன் மூலம் நோயாளிகளை அணுகும் போக்கு ஒரே சீரானதாக இருக்கும் என்றார்.
துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம், ராஜ்ய சபாவில் நிறைவேறிய டெல்லி என்சிடி மசோதா
- டெல்லியில் முதல்வரை விட துணை நிலையில் ஆளுநருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் தேசிய தலைநகர் டெல்லி (திருத்த) மசோதா-2021 (என்சிடி மசோதா) மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
- இதன் காரணமாக இனி முக்கிய முடிவுகளை எடுக்க துணை நிலை ஆளுநரிடம் முதல்வர் அனுமதி கேட்க வேண்டும். அதாவது முதல்வரிடம் துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அங்கு முக்கிய முடிவுகள் எதுவாக இருந்தாலும் எடுக்கப்படும். இரண்டு நாட்கள் முன் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின் தற்போது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
'ஐ.சி.ஜி., வஜ்ரா' நாட்டுக்கு அர்ப்பணிப்பு
- ராணுவ அமைச்சகத்துக்கும் சென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளி 'எல் அன்ட் டி' கப்பல் கட்டும் நிறுவனத்திற்கும் இடையே 2015ல் ஏழு ஆழ்கடல் ரோந்துக் கப்பல் கட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதுவரை ஐந்து கப்பல்கள் கட்டப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
- தற்போது ஆறாவது கப்பலான வஜ்ரா சென்னைத் துறைமுகத்தில் நடந்த நிகழ்வில் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இந்த கப்பலை முப்படைகளின் தளபதி பிபின்ராவத் நாட்டுக்காக அர்ப்பணித்தார்.
- இந்த ரோந்துக் கப்பல் 98 மீட்டர் நீளமும் 15 மீட்டர் அகலமும் உடையது. கப்பலின் மொத்த எடை 2100 டன். 5000 கடல் மைல் தொலைவுக்கு செல்லும் திறன் உடையது. இரட்டை டீசல் இன்ஜின்களால் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
- மேலும் 12.7 மி.மீ. ரக துப்பாக்கிகள் மற்றும் இரட்டை இன்ஜின் பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
- இந்த ஹெலிகாப்டர் ரோந்துக் கப்பலின் செயல்பாட்டுத் திறன் கண்காணிப்பு தேடுதல் மற்றும் மீட்புத்திறனை அதிகரிக்கும். துாத்துக்குடியில் உள்ள கடலோர காவல்படை தளத்தில் இந்த ரோந்துக் கப்பல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.