Type Here to Get Search Results !

TNPSC 23rd MARCH 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

உலகளவில் காற்றின் தரம் பற்றிய ஆய்வறிக்கை 2020

 • ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த, ஐ.க்யூ ஏர் (IQ Air) என்ற நிறுவனம், 2019-20-ஆம் ஆண்டில், உலகளவில் காற்றின் தரம் பற்றி ஆய்வு (World Air Quality Report) மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 • அதில், உலகில் மிகவும் மாசடைந்த 30 நகரங்களில், நகரங்கள், இந்தியாவில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது உலகில் மிகவும் மாசடைந்த நகரமாக, சீனாவின் சின்ஜியாங் நகரம் உள்ளது. 
 • இதற்கு அடுத்த, 9 இடங்களை, இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காஜியாபாத், புலந்த்ஷர் பிஸ்ரக், ஜலால்பூர், நொய்டா, கிரேட்டர் நொய்டா கான்பூர், லக்னோ ஆகிய நகரங்களும், ராஜஸ்தான் மாநிலத்தின் பிவாரி மற்றும் தலைநகர் டில்லி ஆகியவை இடம்பெற்றுள்ளன சர்வதேச அளவில் மிகவும் மாசடைந்த தலைநகர்களில் (most polluted capital of the World), டில்லி முதலிடத்தில் உள்ளது
புதிய ஸ்பெக்ட்ரோகிராப் கருவி
 • பிரபஞ்சத்தின் தொலைதூரத்திலிருந்து வரும் ஒளியின் மூலத்தைப் பதிவு செய்வதற்காக குறைந்த செலவில் "ஸ்பெக்ட்ரோகிராப்” (Spectrograph) கருவியை இந்திய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். 
 • இந்த கருவிக்கு 'ஆரிஸ்-தேவஸ்தால் (Aries-Devasthal' Faint Object Spectrograph & Camera) என பெயரிடப்பட்டுள்ளது தொலைதூரத்தில் உள்ள விண்மீன் திரள்கள், விண்மீன் திரள்களைச் சுற்றியுள்ள கருந்துளைகள், சூப்பர் நோவாக்கள் போன்ற காஸ்மிக் வெடிப்புகள், அதிக ஆற்றல் வாய்ந்த காமா கதிர் வெடிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஸ்பெக்ட்ரோகிராப் கருவிகளை விஞ்ஞானிகள் பயன்படுத்தி வருகின்றனர். 
 • உத்தரகண்ட் மாநிலம், நைனிடாலில் உள்ள ஆர்யபட்டா அப்சர்வேஷனல் சயின்ஸ் ஆராய்ச்சி மையம் (ஆரிஸ்)” (Aryabhatta Research Institute of observational sciences) வடிவமைத்துள்ள இந்தக் கருவி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கருவியை விட இரண்டரை மடங்கு விலை குறைவானது. 
 • நாட்டில் தற்போது உள்ள வானியல் ஸ்பெக்ட்ரோகிராப் கருவிகளில் இதுதான் பெரியது. நைனிடாலில் உள்ள 3.6 மீட்டர் நீளம் கொண்ட ஆப்டிகல் தொலைநோக்கியில் (Devasthal Optical Telescope) இக்கருவி அண்மையில் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது
 • ரூ.4 கோடி மதிப்பிலான இக்கருவியை நைனிடாலில் உள்ள ஆரிஸ் மையத்தின் விஞ்ஞானி அமிதேஷ் ஓமர் தலைமையிலான குழுவினர் வடிவமைத்துள்ளனர்
ஜம்மு காஷ்மீரில் உலகின் உயரமான ரயில்வே பாலம்
 • ஜம்மு காஷ்மீரில் செனாப் ஆற்றின் மேல், ரூ.1,250 கோடி மதிப்பில் 1315 மீட்டர் நீளத்தில் 17 இடைவெளி பகுதிகளைக் கொண்ட உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் (World's highest Railway Bridge) அமைக்கப்பட்டு வருகிறது. 
 • இந்தப் பாலத்தின் மொத்த நீளத்தில் 476 மீட்டர் ஆற்றின் மீது கட்டப்பட்டு வருகிறது. பாலத்தின் அதிகபட்ச உயரம் கடல் மட்ட அளவிலிருந்து 359 மீட்டராக உள்ளது. இந்தப் பாலம் 266 கி.மீ. வேகத்தைத் தாங்கக் கூடியது. 
 • மேலும் இதன்  ஆயுட்காலம் 120 ஆண்டுகள் பிரான்சில் உள்ள ஈ.பில் டவர் உயரம் 304 மீட்டர் ஆகும். இதன்மூலம் இந்த ரயில்வே பாலத்துக்கு உலகின் மிக உயரமான கட்டுமானம் என்ற பெருமை கிடைத்துள்ளது
சுரங்கத் தொழிலில் தனியார் நிறுவனங்கள் மசோதா நிறைவேற்றம் 
 • சுரங்கத் தொழிலில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் "சுரங்கம் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு மற்றும் கட்டுப்பாடு) சட்டத் திருத்த மசோதா (Mines and Minerals (Development and Regulation) Amendment Bill) மாநிலங்களவையில் மார்ச் 22 அன்று நிறைவேற்றப்பட்டது
 • தற்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுரங்கத் துறையின் பங்களிப்பு சுமார் 1.75 சதவீதமாக உள்ளது. இனி இது 2.5 சதவீதமாக அதிகரிக்கும்
இந்தியக் கடற்படையில் இணையும் "ஐஎன்எஸ் துருவ்” கப்பல் 
 • ஐஎன்எஸ் துருவ் (INS Dhruv) கப்பலானது முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள "பெருங்கடல் கண்காணிப்பு” கப்பல் (Ocean Surveillance Ship) ஆகும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம், தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றால் இந்தக் உருவாக்கப்பட்டுள்ளது 
 • இந்துஸ்தான் ஷிப்யார்ட் விசாகப்பட்டினத்தில் இக்கப்பல் கட்டமைக்கப்பட்டுள்ளது அதிநவீன மின்னணு ரேடார்கள் கப்பல் நிறுவனத்தால் பொருத்தப்பட்டுள்ளதால் இந்தியப் பகுதிகளைக் கண்காணிக்கும் செயற்கைக்கோள்களை எளிதில் அடையாளம் கண்டு ராணுவத்துக்கு தகவல் அளிக்க முடியும்
 • மேலும், இந்தியாவை நோக்கி வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளையும் ஐஎன்எஸ் துருவ் கப்பல் கண்டறிந்துவிடும். மேலும், இந்திய-பசிபிக் பிராந்திய நாடுகளில் பயன்படுத்தப்படும்
 • ஏவுகணைகளின் உண்மையான திறனையும் இக்கப்பலால் மதிப்பிட முடியும். ஐஎன்எஸ் துருவ் கப்பல் இந்தியக் கடற்படையில் இணையும் பட்சத்தில் பெருங்கடல் கண்காணிப்பு கப்பல்களைக் கொண்ட 6-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் தற்போது வரை அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மட்டும்தான் இந்தக் கண்காணிப்பு ரக கப்பல்கள் இருக்கின்றன
தேசிய சீனியர் தடகளம்: தமிழகத்துக்கு இரு தங்கம் 
 • பஞ்சாப் மாநிலம், பட்டியாலாவில் நடைபெற்று வரும் பெடரேஷன் கோப்பை சீனியர் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் (24th Federation Cup Senior Athletics Championships) ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டுதலில் தமிழகத்தின் பி.வீரமணி (14.57 விநாடிகள்) முதலிடம் பிடித்தார். 
 • அதேபோல், மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழகத்தின் சி.கனிமொழி 13.63 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel