Type Here to Get Search Results !

UNION BUDGET 2021 / மத்திய பட்ஜெட் 2021

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் கல்வித்துறைக்கான அறிவிப்புகள்

  • தேசிய கல்விக் கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி அனைத்து வசதிகளையும் கொண்டதாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
  • மாணவர்களை ராணுவத்தில் சேர தயார்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் சைனிக் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் புதிதாக 100 சைனிக் பள்ளிகள் தொடங்கப்படும்.
  • லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான லே-யில் மத்திய பல்கலைக் கழகம் தொடங்கப்படும்
  • மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 750 புதிய ஏகலைவா பள்ளிகள் தொடங்கப்படும்
  • அடுத்த 6 ஆண்டுகளில் ஆதிதிராவிட மாணவ - மாணவியருக்கு உதவும் வகையில் 35 ஆயிரத்து 219 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்
  • ஆதிதிராவிட மாணவர்களுக்கு 10ம் வகுப்புக்குப் பிந்தைய கல்விக்கான திருத்தியமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • தேசிய ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்த ஐந்தாண்டுகளில் 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவம்

  • 2021-22ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.4.78 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அறிவித்தார். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் (2020-21) பாதுகாப்பு துறைக்கு ரூ.4.71 லட்சம் கோடி (ராணுவ ஓய்வூதியம் உள்பட) ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
  • ஓய்வூதியத்தை தவிர்த்து பார்த்தால், 2021-22ம் நிதியாண்டுக்கு பாதுகாப்பு துறைக்கு ரூ.3.62 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 3.37 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. ஆக, இந்த பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி அதிகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
'மினி' பட்ஜெட்டின் தொடா்ச்சி
  • மத்திய அரசு செயல்படுத்திய சிறப்புத் திட்டங்கள் அனைத்தையும் 'மினி' பட்ஜெட் எனக் கடந்த மாதம் 29-ஆம் தேதி குறிப்பிட்டிருந்த பிரதமா் நரேந்திர மோடி, வரும் 2021-22-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அவற்றின் தொடா்ச்சியாகவே கருத வேண்டுமென்று தெரிவித்திருந்தாா்.
  • இத்தகைய சூழலில், 2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். 
  • பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக தற்சாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசும், இந்திய ரிசா்வ் வங்கியும் (ஆா்பிஐ) இணைந்து ரூ.27.1 லட்சம் கோடி அளவிலான சிறப்புத் திட்டங்கள் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.
பட்ஜெட்டின் தூண்கள்
  • சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு, நிதி மூலதனம் மற்றும் கட்டமைப்பு, நாட்டு மக்களை உள்ளடக்கிய வளா்ச்சி, மனிதவளத்தின் வலிமை, புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி, அரசின் குறைந்தபட்ச தலையீடு மற்றும் அதிகபட்ச நிா்வாகம் ஆகிய 6 தூண்களை அடித்தளமாகக் கொண்டு, வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
137 சதவீதம் அதிகரிப்பு
  • சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறைக்காக ரூ.2,23,846 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 137 சதவீதம் (ரூ.94,452 கோடி) அதிகமாகும்.
  • அதேபோல், நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.5.54 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இது 37 சதவீதம் அதிகமாகும். மொத்த நிதியில் ரூ.1.18 லட்சம் கோடி நெடுஞ்சாலைத் துறைக்கும் ரூ.1.08 லட்சம் கோடி ரயில்வே துறைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அதிகரிக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு, மக்களின் தேவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆரோக்ய இந்தியா திட்டம்
  • நாட்டில் முதல், இரண்டாம், மூன்றாம் நிலை சுகாதார அமைப்புகளை மேம்படுத்துவதற்காக 'பிரதமரின் தற்சாா்பு ஆரோக்ய இந்தியா திட்டம்' செயல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா். 
  • அத்திட்டத்தின் கீழ் அடுத்த 6 ஆண்டுகளில் ரூ.64,180 கோடி செலவிடப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.
  • கரோனா தடுப்பூசிகளுக்காக ரூ.35,000 கோடி ஒதுக்கப்படுவதாகவும், தேவை ஏற்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா். 
  • தற்போது 5 மாநிலங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வரும் குழந்தைகளுக்கான நிமோனியா தடுப்பூசித் திட்டம், அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
மித்ரா திட்டம்
  • நாட்டில் 13 துறைகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1.97 லட்சம் கோடி செலவிடப்படும் என்று மத்திய அரசு பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது.
  • ஜவுளித்துறையில் அதிக அளவிலான முதலீடுகளை ஈா்ப்பதற்காகவும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும் மெகா முதலீட்டு ஜவுளி பூங்காக்கள் (மித்ரா) என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டில் 7 ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திட்டங்கள் விரிவாக்கம்
  • ரூ.1,41,678 கோடியில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தூய்மை இந்தியா (நகா்ப்புறம்) திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், 4,378 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ரூ.2,87,000 கோடியில் ஜல் ஜீவன் (நகா்ப்புறம்) திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நிதிப் பற்றாக்குறை
  • நடப்பு நிதியாண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் 3.5 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்துவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது 9.5 சதவீதமாக அதிகரிக்கும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அடுத்த நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 6.8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2025-26-ஆம் நிதியாண்டுக்குள் நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதத்துக்குள் குறைப்பதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
மூலதன செலவு
  • அடுத்த நிதியாண்டில் மத்திய அரசின் மூலதன செலவு ஜிடிபி-யில் 2.5 சதவீதமாக அதிகரிக்கும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். அரசின் மூலதன செலவு நடப்பு நிதியாண்டில் 2.3 சதவீதமாகவும், கடந்த நிதியாண்டில் 1.7 சதவீதமாகவும் இருந்தது.
முதன்முறையாக டிஜிட்டல் நிதிநிலை அறிக்கை
  • சுதந்திர இந்தியாவின் 74 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக காகிதப் பயன்பாடு அல்லாத 'டிஜிட்டல்' வடிவிலான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா்.
  • சிறிய அளவிலான தொடுதிரையுடன் கூடிய கணினியின் (டேப்) வாயிலாக பட்ஜெட் உரையை அமைச்சா் நிா்மலா சீதாராமன் வாசித்தாா். அதுபோல எம்.பி.க்களுக்கும் டிஜிட்டல் வடிவிலேயே பட்ஜெட் அறிக்கையும் அது தொடா்பான ஆவணங்களும் வழங்கப்பட்டன.
குறுகிய பட்ஜெட் உரை
  • 1 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு பட்ஜெட் உரையை அமைச்சா் நிா்மலா வாசித்தாா். இது அவரது குறுகிய கால பட்ஜெட் உரையாக அமைந்தது. 
  • கடந்த 2019-20-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையை 2 மணி நேரம் 17 நிமிடங்களுக்கும், நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையை சுமாா் 2 மணி நேரம் 40 நிமிடங்களுக்கும் அவா் வாசித்திருந்தாா்.
  • ரவீந்திர நாத் தாகூரின் கவிதையை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை அமைச்சா் நிா்மலா தொடக்கினாா். 
இரண்டு திருக்குறள்
  • பட்ஜெட் தாக்கலின் போது, இரண்டு திருக்குறள்களை மேற்கோள் காட்டி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். 
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு
  • விளக்கம்: பொருள் வரும் வழிகளை உருவாக்குவது, வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப் பிறர்கவராமல் காப்பது, காத்தவற்றை அறம், பொருள், இன்பம் நோக்கிச் செலவிடுவது என்னும் இவற்றில் திறமை மிக்கதே அரசு.
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து
  • விளக்கம்: நோய் இல்லாமை, செல்வம், விளைச்சல், மகிழ்ச்சி, நல்ல காவல் இவை ஐந்தும், ஒரு நாட்டிற்கு அழகு.
பட்ஜெட் ஹைலைட்ஸ்
  • விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு, இளைஞர் வேலை வாய்ப்பு, பெண்கள் அதிகாரம், அனைவருக்கும் கல்வி, ஆரோக்கியமான இந்தியா, உள்கட்டமைப்பு மேம்பாடு, ஒட்டுமொத்த வளர்ச்சி உள்ளிட்ட எட்டு முக்கிய அம்சங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது
  • கொரோனா தடுப்பூசிக்காக, 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு 
  • மேலும் இரு கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும்
  • கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்
  • விமான நிலையங்களின் பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்படும்
  • நாடு முழுதும், 11 ஆயிரத்து 500 கி.மீ., துாரத்திற்கு சாலை திட்டம்
  • நாடு முழுதும் அகல ரயில்பாதைகள், 2023க்குள் மின்மயமாகும்
  • பேருந்து வசதிகளை மேம்படுத்த, 18 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • நகர்ப்புற குடிநீர் வசதி திட்டத்திற்கு, 2.87 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு. 
  • அடுத்த ஐந்து ஆண்டுகளில், 2.86 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு
  • மேலும் ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு
  • பங்கு சந்தைகளை ஒழுங்குபடுத்த ஒருங்கிணைந்த புதிய சட்டம் உருவாக்கப்படும்
  • காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீடு, 74 சதவீதமாக அதிகரிப்பு
  • அரசு வங்கிகளுக்கு மூலதனமாக, 20 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும்
  • வங்கியின் டிபாசிட் கணக்குகளுக்கான காப்பீடு, ஒரு லட்சத்தில் இருந்து, 5 லட்சம் ரூபாயாகஅதிகரிப்பு
  • பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவனங்களின் பங்குகளை விற்க நடவடிக்கை
  • பங்கு சந்தைகளில் புதிய பங்கு விற்பனை மூலம், எல்.ஐ.சி.,யின் பங்குகளை விற்க திட்டம்
  • இரண்டு பொதுத்துறை வங்கி, ஒரு காப்பீட்டு நிறுவன பங்குகள் விற்பனை செய்யப்படும்
  • வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் தொடரும்
  • வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறை தொடரும்
  • சென்னை உள்ளிட்ட ஐந்து மீன்பிடி துறைமுகங்கள் விரிவுபடுத்தப்படும்
  • சாலையோர வியாபாரிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டம் விரிவுபடுத்தப்படும்
  • 100 புதிய சைனிக் பள்ளிகள் அமைக்கப்படும்
  • தேசிய மொழிகளை மொழிபெயர்க்க திட்டம். அரசின் அறிவிப்புகள், முக்கிய திட்டங்கள், அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்படும்
  • மின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க, 1,500 கோடி ரூபாய் சலுகை
  • சந்தைகளில் இருந்து, 12 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற திட்டம்
  • வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும், 'இ - நாம்' திட்டத்தில் 1.68 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்
  • இதுவரை இல்லாத அளவாக, 6.48 கோடி பேர், வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்
  • முதியோருக்கு வருமான வரியில் சலுகை. 75 வயதானவர்கள், ஓய்வூதியம், வட்டியை மட்டும் நம்பி உள்ள மூத்த குடிமக்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம்
  • வீட்டுக்கடன் வட்டிக்கு வருமான வரிச் சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு
  • வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சலுகை.
  • இவர்கள் நாடு திரும்பும் போது இரட்டை வரி விதிப்புக்கு ஆளாவதை தவிர்க்க நடவடிக்கை
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய, பழைய வாகனங்களை திரும்ப பெறும் கொள்கை அறிமுகம்
  • தங்கத்துக்கான இறக்குமதி வரி, 12.5 சதவீதத்தில் இருந்து, மீண்டும் 10 சதவீதமாக குறைப்பு.
  • தனிநபர் வருமான வரி சலுகை அறிவிப்பு இடம் பெறவில்லை.
ஆறு முக்கிய அம்சங்கள்
  • ஆறு முக்கிய அம்சங்களை அடிப்படையாக வைத்து, இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சுகாதாரம், உடல்நலன், உள்கட்டமைப்பு வசதிகள் உடைய பொருளாதார தலைநகராக நாட்டை உருவாக்குவது, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி, மனித மூலதனத்துக்கு புத்துயிர் அளிப்பது, புதுமை மற்றும் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, குறைந்தபட்ச அரசின் வாயிலாக அதிகபட்ச நல்லாட்சி வழங்குவது ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. 
பட்ஜெட் துளிகள்
  • நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் உரையில், மொத்தம் 10,934 வார்த்தைகள் இருந்தன. கடந்த முறை, 13 ஆயிரத்து, 275 வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன. 
  • 46 பட்ஜெட் உரையில், 'டாக்ஸ்' என்ற வார்த்தை அதிகபட்சமாக 46, முறையும், 'இன்பிராஸ்ட்ரச்சர்' என்ற வார்த்தை, 37 முறையும், 'ஹெல்த்' என்ற வார்த்தை, 24 முறையும் இடம் பெற்றிருந்தன.
வேளாண் 
  • 'கடனின் அளவு ரூ.16.5 லட்சம் கோடிக்கு அதிகரிப்பு: விவசாயிகளுக்கு போதிய அளவு வேளாண் கடன் வழங்கும் வகையில், நடப்பு நிதியாண்டில் ரூ.16.5 லட்சம் கோடி அளவுக்கு கடன் வழங்கும் அளவு அதிகரிக்கப்படுகிறது. 
  • மேலும் கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி மற்றும் மீன் வளர்ப்பு போன்ற வேளாண் சார்ந்த துறைகளுக்கும் இத்தகைய கடனை வழங்க அரசு கவனம் செலுத்தி வருகிறது.
  • ஊரக கட்டமைப்பு வளர்ச்சிக்கான நிதி 33% அதிகரிப்பு: ஊரக வளர்ச்சி மேம்பாட்டு நிதி ரூ.30,000 கோடியிலிருந்து ரூ.40,000 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.
  • வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியின் (நபார்டு) கீழ் செயல்படுத்தப்படும் நுண்பாசனத் திட்டத்திற்கான நிதி தற்போது ரூ.5,000 கோடி அளவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக ரூ.5,000 கோடி ஒதுக்கப்படுகிறது.
  • இ-நாம் திட்டத்தின் கீழ் 1.68 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். ரூ.1.14 லட்சம் கோடி அளவுக்கு இந்த இ-நாம் மூலம் வணிகம் நடைபெறுகிறது. இந்தத் திட்டம் வெளிப்படையாகவும், போட்டித்தன்மையுடனும் இருக்க 1000 மண்டிகள் இ-நாம்-வுடன் இணைக்கப்படுகிறது.
  • மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மையங்களை நவீன அளவில் மேம்படுத்த போதிய முதலீடுகள் செய்யப்படும். 5 பெரிய மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும். 
  • குறிப்பாக சென்னை, கொச்சி, விசாகப்பட்டினம், பாரதீப் மற்றும் பெட்டாகட் ஆகிய துறைமுகங்கள் மேம்படுத்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகளுக்கான மையங்களாக உருமாற்றப்படும். ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் மூலம் உள்நாட்டு மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மையங்கள் மேம்படுத்தப்படும்.
  • கடற்பாசியின் மதிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், கடலோரவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், வளர்ந்து வரும் துறையாக கடற்பாசி வளர்ப்பு திகழ்கிறது. அந்த வகையில், கடற்பாசி வளர்ப்பை மேம்படுத்தும் வகையில் தமிழகத்தில் பல்வகை பயன்பாட்டுக்கான கடற்பாசி பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் பெரிய அளவில் வேலைவாய்ப்பு உருவாகுவதோடு கூடுதல் வருவாயை ஏற்படுத்தும்.
  • கடந்த ஆண்டுகளில், விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதே இந்த அரசின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது. இந்த நோக்கம் தொடரும். அரிசி, கோதுமை, பயிர் வகைகள் போன்றவற்றின் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலை உற்பத்திச் செலவை விட ஒன்றரை மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது
வரிச்சலுகைகள்
  • வரி செலுத்துவோர் மற்றும் பொருளாதார நலனுக்காக, பெரு நிறுவனங்களின் வரி குறைப்பு உட்பட மத்திய அரசு பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது. 
  • கடந்த 2020ம் ஆண்டில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 6.48 கோடியாக உயர்ந்தது. இது கடந்த 2014ம் ஆண்டில் 3.31 கோடியாக இருந்தது.
  • மூத்த குடிமக்களுக்கான சலுகை: இந்த மத்திய நிதி நிலை அறிக்கையில், மூத்த குடிமக்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. 75-வது சுதந்திர ஆண்டில், 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வரித்தாக்கல் சுமையை குறைக்க, இந்த நிதிநிலை அறிக்கையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
  • ஓய்வூதியம் மற்றும் வட்டி வருமானம் மட்டும் உள்ள, 75 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
  • அவர்களின் வருமானத்தில் தேவையான வரியை, ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளே பிடித்தம் செய்து கொள்ளலாம்.
  • மலிவு விலை வீடுகள்/வாடகை வீடுகளுக்கான சலுகைகள்: வருமானவரி கணக்கு தாக்கலின் போது, மலிவு விலை வீடுகளுக்கான கடனில் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வட்டிக்கு வருமானத்தில் இருந்து விலக்கு அளிக்கும் சலுகை 2022, மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
  • மலிவு விலை வீடுகள் கட்டுவதை ஊக்குவிப்பதற்காக, இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், புலம் பெயர் தொழிலாளர்களுக்கான மலிவு விலை வாடகை வீடுகள் கட்டப்படுவதை ஊக்குவிக்க, மலிவு விலை வாடகை வீடு திட்டங்களுக்கு புதிய வரி விலக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு வரி சலுகைகள்: நாட்டில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு 2022 மார்ச் 31ம் தேதி வரை, விற்பனை வரி குறைப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் முதலீட்டை ஊக்குவிக்க, அந்த நிறுவனங்களுக்கான முதலீட்டுக்கு, மூலதன ஆதாய விலக்கு 2022 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
  • தொழிலாளர் நல நதிக்கான பங்களிப்பு குறித்த நேரத்தில் செலுத்த வேண்டும்
  • பல்வேறு நல திட்டங்களில் தொழிலாளர்களின் பங்களிப்பை, வேலை அளிக்கும் நிறுவனங்கள் தாமதமாக செலுத்துவதால், தொழிலாளர்களுக்கு நிரந்தர வட்டி/ வருவாய் இழப்பு ஏற்படுகிறது. 
  • இதனால், தொழிலாளர்களின் பங்களிப்பை, வேலை அளிக்கும் நிறுவனங்கள் தாமதமாக செலுத்த அனுமதிக்கப்படாது.
  • வருமான வரி கணக்கை மீண்டும் சரிபார்ப்பதற்கான கால வரம்பு குறைப்பு: வருமான வரி கணக்கு தாக்கலை மீண்டும் சரிபார்ப்பதற்கான காலம் தற்போது 6 ஆண்டுகளாக உள்ளது. இது இந்த நிதிநிலை அறிக்கையில் 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. 
  • வரி ஏய்ப்பு வழக்குகளில் ஓராண்டில், ரூ.50 லட்சம் அல்லது அதற்கு மேல் வருவாய் ஆதாரங்கள் மறைக்கப்பட்டிருந்தால், 10 ஆண்டுகள் வரை அந்த வருமானவரி கணக்கை மறு ஆய்வு செய்ய முடியும். ஆனால் இதற்கு முதன்மை தலைமை ஆணையரின் ஒப்புதல் பெற வேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel