Type Here to Get Search Results !

TNPSC 1st FEBRUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

தமிழகம் முழுவதும் 9.69 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச தரவு அட்டை திட்டம் முதல்வர் தொடங்கி வைத்தார்
  • 'கரோனா பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் நலனுக்காக இணையவழி வகுப்புகளை கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. 
  • இந்த இணைய வழி வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9.69 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு 4 மாதங்களுக்கு தினசரி 2 ஜிபி தரவு (டேட்டா) கிடைக்கும் விதமாக, எல்காட் நிறுவனம் மூலம் இலவச தரவு அட்டைகள் (டேட்டா கார்டு) வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கடந்த 8-ம் தேதி அறிவித்தார்.
  • இதன்படி, இணைய வழி வகுப்புகள் மூலம் சிறந்த முறையில் கல்வி கற்க, அரசு மற்றும்அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள், கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச தரவு அட்டைகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
காணாமல் போன குழந்தைகளை மீட்க 'ஆபரேஷன் ஸ்மைல்' திட்டம்
  • சென்னை பெருநகரில் சாலையோரம் சுற்றித் திரியும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், கடத்தப்பட்ட குழந்தைகள், பாதுகாப்பும் பராமரிப்பும் தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவும் வகையில் 'ஆபரேஷன் ஸ்மைல்' என்ற திட்டத்தை சென்னை காவல்ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்.
  • அதன்படி சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் அந்தந்த துணை ஆணையர்களின் தலைமையில் ஓர் உதவி ஆணையர் கண்காணிப்பில், 2 ஆய்வாளர்கள், குழந்தை நல காவல் அதிகாரி, குழந்தை நலகுழுமம் உள்ளிட்டவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 
  • மீட்கப்படும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்துஉதவிகளையும் இந்த தனிப்படையினர் செய்து கொடுப்பார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel