தமிழ்த்தாய் தமிழாய்வுப் பெருவிழா துணை முதல்வா் தொடக்கி வைத்தாா்
- மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 'தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெருவிழா' தொடங்கியது.
- இதை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தொடங்கி வைத்து நிறுவனத்தின் பொன்விழா மலரை வெளியிட்டுப் பேசியது: தமிழ் ஆய்வுலகில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.
- இந்த நிறுவனத்தில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அன்று தொடங்கிய பேரறிஞா் அண்ணா அறக்கட்டளையே இன்றுவரை மிக அதிக வைப்புநிதியில் செயல்பட்டு வரும் அறக்கட்டளையாக உள்ளது.
- உலகத் தமிழாராய்ச்சி நிறுவன புதிய கட்டடத்தின் வனப்புமிகு அங்கங்களாக பழந்தமிழா் வாழ்வியல் காட்சிக்கூடம், திருக்கு ஓவியக் காட்சிக் கூடம், நவீனமயமாக்கப்பட்ட மொழியியல் ஆய்வுக்கூடம், தமிழ்த்தாய் ஊடக அரங்கம் ஆகியவை இடம்பெற்று தனிச்சிறப்புப் பெற்றுள்ளன.
- தகுதி வாய்ந்த அறிஞா் பெருமக்களைக் கொண்டு தமிழ்ப் படைப்புகளை வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயா்ப்புச் செய்ய வேண்டும் என்ற கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வகையான மொழிபெயா்ப்புப் பணிகளையும் இந்த நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.
'நாசா' செயல் தலைவராக இந்திய பெண் நியமனம்
- அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, 'நாசா'வின் செயல் தலைவராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, பவ்யா லால் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பவ்யா லால், அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், அணுசக்தி பொறியியல் துறையில், இளநிலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்.
- ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில், பொதுக் கொள்கை மற்றும் பொது நிர்வாகத்தில், முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.இவர், 2005 - 2020 வரை, எஸ்.டி.பி.ஐ., எனப்படும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை ஆய்வு நிறுவனத்தில் உறுப்பினராக பணியாற்றினார்.
- வெள்ளை மாளிகை, தேசிய விண்வெளி கவுன்சில், நாசா, ராணுவ அமைச்சகம், உளவுத்துறை பிரிவுகள், விண்வெளி சார்ந்த அமைப்புகள் ஆகியவற்றுக்கு, விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த கொள்கை பகுப்பாய்வுகளை வழங்கும் பிரிவுக்கு தலைமை வகித்தார்.
2020 ஆம் ஆண்டுக்கான இந்தி வார்த்தையை தேர்வு செய்த ஆக்ஸ்போர்டு
- 2020ஆம் ஆண்டுக்கான இந்தி வார்த்தையாக பிரதமர் மோடி பயன்படுத்திய ஆத்ம நிர்பார் பாரத் என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்டு நிறுவனம் தேர்வு செய்துள்ளது.
- பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அந்த திட்டத்திற்கு ஆத்மநிர்பார் பாரத் என பெயரிடப்பட்டது. இதற்கு பிரதமர் மோடி பெயர் வைத்தார்.
- மொழி வல்லுநர்களின் ஆலோசனைக் குழுவைச் சேர்ந்த கிரித்திகா அகர்வால், பூனம் நிகம் சாஹே இமோகென் ஃபோக்ஸெல் தேர்வு செய்துள்ளனர்.
புதிய போர்விமான உற்பத்தி தொழிற்சாலையைத் திறந்து வைத்தார் ராஜ்நாத் சிங்
- கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தின் புதிய தொழிற்சாலையைத் இன்று திறந்து வைத்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். இதன் மூலம் LCA Tejas எனப்படும் போர் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
- "பாதுகாப்பு உபகரணங்களைப் பெறுவதற்கு நாம் இனியும் அண்டை நாடுகளை நம்பியிருக்க வேண்டியதில்லை, தற்போது HAL நிறுவனம் ரூ.48,000 கோடி ஆர்டர்களை பெற்றுள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவிலான ஒப்பந்தம். LCA Tejas போர் விமானங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதால் சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது.