Type Here to Get Search Results !

TNPSC 8th FEBRUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக தொடரை வென்றது பாகிஸ்தான்

  • தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், 95 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. 
  • பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி மொத்தம் 120 புள்ளிகளை தட்டிச் சென்றது. ஹசன் அலி ஆட்ட நாயகன் விருதும், முகமது ரிஸ்வான் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

114 ஆண்டுகளுக்குப்பின் புதிய வரலாறு படைத்த அஸ்வின் & இசாந்த் சர்மா புதிய மைல்கல்

  • அஸ்வின் வீசிய முதல் பந்திலேயே ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து ரோரி பர்ன்ஸ் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தியபோது, உலகக் கிரிக்கெட்டில் புதிய வரலாற்றைப் படைத்தார். அதாவது, கடந்த 114 ஆண்டுகளாக 2-வது இன்னிங்ஸ் தொடக்கத்தில் முதல் ஓவர் முதல் பந்தில் எந்த சுழற்பந்துவீச்சாளரும் விக்கெட் வீழ்த்தியதில்லை.
  • இந்த சாதனையை 14 ஆண்டுகளுக்குப்பின் அஸ்வின் நிகழ்த்தி புதிய வரலாற்றைப் பதிவு செய்துள்ளார். கடைசியாக கடந்த 1907-்ம ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் பெர்ட் வோக்லர் 2-வது இன்னிங்ஸில் முதல் ஓவரில் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • ஆட்டத்தின் 15-வது ஓவரை இசாந்த் சர்மா வீசினார். இசாந்த் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி லாரன்ஸ் 18 ரன்னில் வெளியேறினார். இந்த விக்கெட்டை வீழ்த்தியபோது, இசாந்த் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டினார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 300 விக்கெட்டுகளை எட்டிய 3-வது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும், ஒட்டுமொத்தமாக 6-வது இந்திய வீரர் எனும் சிறப்பைப் பெற்றார்.

ஜனவரி மாத சிறந்த வீரர் ரிஷப் பந்த் ஐசிசி அறிவிப்பு

  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜனவரியில் நடைபெற்ற 2 டெஸ்ட் ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த் ஐசிசியின் ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • ஜனவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி டெஸ்டில் 97 ரன்களும், பிரிஸ்பேனில் 89 ரன்களும் எடுத்து இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்வதற்கு முக்கியப் பங்காற்றினார்.
  • மாதத்தின் சிறந்த வீரர்/வீராங்கனை என்கிற பெயரில் புதிய விருதை ஐசிசி அறிமுகம் செய்துள்ளது. இதில் ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரர்கள் பரிந்துரையில் இந்திய அணியின் ரிஷப் பந்த், இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் ஆகியோரது பெயர்கள் இருந்தன. 

அரசின் வரவுகளை மின்செலுத்துச் சீட்டு மூலம் பெறும் நடைமுறையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
  • 'அரசுப் பணிகள் திறம்பட மற்றும் செவ்வனே நடைபெற நிதி மற்றும் மனிதவள மேலாண்மையை ஒருமைப்படுத்தி ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் கடந்த 10.1.2019 அன்று தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள கருவூலம் மற்றும் சம்பளக்கணக்கு அலுவலகங்களில் தற்போது 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் நேரடியாக இணையத்தின் வாயிலாக பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பிக்கின்றனர்.
  • மேலும், சுமார் 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினிமயமாக்கப்பட்டு சம்பளப் பட்டியல், பதவி உயர்வு, பணி மாறுதல்கள், விடுப்பு போன்ற மற்ற விவரங்கள் உடனுக்குடன் பதிவிடப்பட்டு வருகிறது.
  • இந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டமானது, டிஜிட்டல் ஒப்பம் மற்றும் பயோமெட்ரிக் முறை மூலம் உறுதிப்படுத்தும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாகும்.
  • ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் அடுத்த கட்டமாக, கருவூலத்தில் பெறப்படும் அரசின் வருவாய் இனங்களை மின்வரவாக மின் செலுத்துச்சீட்டு மூலமாக நேரடியாக பெறுவதற்கான நடைமுறையை தமிழ்நாடு முதல்வர் தொடங்கி வைத்தார்.
  • இதன்மூலம், பொதுமக்கள் / அரசு துறை நிறுவனங்கள் / உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை அரசுக்கு செலுத்த வேண்டிய வரவினங்களை, மின்வரவுகளாக 24 மணிநேரமும் தங்குதடையின்றி இணையத்தின் மூலம் (www.karuvoolam.tn.gov.in) செலுத்த வசதிகள் ஏற்படுத்தப்படுவதால், அரசு நிகழ்நேர வருவாயை உடனுக்குடன் பெற இயலும்.
  • இச்சேவைகளுக்காக, பாரத ஸ்டேட் வங்கி, பரோடா வங்கி, இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய நான்கு வங்கிகளை திரட்டல் வங்கிகளாக தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • இவற்றில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பரோடா வங்கி ஆகிய இரு வங்கிகள் இத்திட்டத்தில் ஒருங்கிணைப்பு பணிகளை முடித்துள்ள நிலையில் இவ்விரு வங்கிகளின் வாயிலாக முதற்கட்டமாக அரசின் வருவாய்கள் பெறப்பட்டு, அரசின் ரிசர்வ் வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வங்கிகளில் நேரடியாக பணம் செலுத்தும் திட்டமும் சிறிது காலத்திற்கு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்'.
ராஜஸ்தானில் இந்திய - அமெரிக்க கூட்டு ராணுவப் பயிற்சி தொடக்கம்
  • ராஜஸ்தான் மாநில மேற்கு பகுதியில் உள்ள மகாஜன் துப் பாக்கி சுடும் களத்தில் 16-ஆவது இந்தியா - அமெரிக்கா கூட்டு ராணு வப் பயிற்சி யூத் அபியாஸ்' திங்கள்கிழமை தொடங்கியது
  • இந்திய ராணுவப் படையின் காலாட் படை தளபதி முகேஷ் பன் வாலா, அமெரிக்க படையை வரவேற்று, பயிற்சியின்போது, இரு நாட்டு படைகளும் இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். 
  • இப்பயிற்சியில் ராணுவத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டரான டபிள்யுஎஸ்ஐ ருத்ரா, எம்ஐ-17, ஸ்ட்ரைக்கர் வாக னங்கள் உள்பட பல வான்வழி தாக்குதல் வாகனங்கள் பயன்படுத்தப்படு கின்றன. இப்பயிற்சி பிப்ரவரி 21-ஆம் தேதி வரை நடைபெறும்.
  • இதேபோல், கடந்த ஜனவரி மாதம் இந்தியா - பிரான்ஸ் படையின் கூட்டுப் பயிற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel