டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியானது / TNPSC GROUP 1 PRELIMINARY EXAM 2021 RESULT PUBLISHED
TNPSCSHOUTERSFebruary 10, 2021
0
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியானதை அடுத்து இந்த தேர்வை எழுதியவர்கள் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு உதவி ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 66 காலி பணியிடங்களுக்கு கடந்த ஜனவரி மாதம் மூன்றாம் தேதி நடைபெற்றது
இந்த குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் சற்று முன் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து ஆன்லைனில் அந்த தேர்வை எழுதிய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய முடிவுகளை பார்த்து வருகின்றனர்
மேலும் டிஎன்பிஎஸ்சி முதன்மை தேர்வு நடைபெறும் தேதி குறித்த தகவலும் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதன்மைத் தேர்வுகள் மே மாதம் 28ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு செய்துள்ளது
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த முதன்மைத் தேர்வுகளை எழுத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.