Type Here to Get Search Results !

TNPSC 9th FEBRUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

2020 எல்ஜிபி ஃபார்முலா 4 நேஷனல் ரேசிங் சாம்பியன்: சென்னையை சேர்ந்த சந்தீப் குமார் சாதனை

  • சென்னையை சேர்ந்த இளம் கார் பந்தய வீரரும் வழக்கறிஞருமான சந்தீப் குமார், 2020 எல்ஜிபி ஃபார்முலா 4 நேஷனல் ரேசிங் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
  • கோவை கரி மோட்டார் வேகப்பாதையில் எல்ஜிபி ஃபார்முலா 4 பிரிவில், எஃப்.எம்.எஸ்.சி.ஐ. ஜே.கே.டயர் தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 

நீர் மேலாண்மைக்கான கல்வெட்டு

  • உடுமலை அருகே, நீர் மேலாண்மைக்கான பழங்கால கல்வெட்டை, வரலாற்று ஆய்வு நடுவத்தினர், ஆய்வு செய்து, ஆவணப்படுத்தினர்.
  • சென்னிமலைபாளையத்தில், கண்டறியப்பட்ட கல்வெட்டு மிக பழமை வாய்ந்ததாகும். இவ்வகை புடைப்பு கல் சிற்பங்கள், கொங்கு நாட்டில், அவிநாசி மற்றும் பழநியில், ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது.
  • இவை தேவார பதிகத்தோடு தொடர்புடையதாகும். 'இப்பகுதியில், நீர் மேலாண்மை சார்ந்த, பெரிய அளவிலான நீர்த்தேக்கம் இருந்திருக்கலாம். நீர்த்தேக்கத்தை பராமரிக்க, மடையர்கள் எனப்படும் மடை திறப்பாளர்கள், அரசர்களால் நியமிக்கப்பட்டிருக்கலாம்.
  • மேலும், 'புரைக்காடு சோலைப்புக்கொளியூர் அவிநாசியே கரைக்கான் முதலையை பிள்ளை தரச்சொல்லு காலனையே,' என்று, இறைவனுக்கு, சுந்தரர் உத்தரவிட்டு, முதலையுண்ட பாலகனை மீட்டது குறித்த, சங்க கால பாடலின் வரிகளை வெளிப்படுத்துவதாக, கல்வெட்டு சிற்பங்கள் அமைந்துள்ளன.

வாழும் கலை ரவிசங்கருக்கு சர்வதேச துாதர் விருது

  • 'வாழும் கலை' அமைப்பைச் சேர்ந்த ரவிசங்கருக்கு 'சர்வதேச குடிமக்களின் துாதர்' என்ற கவுரவ விருதை அமெரிக்க பல்கலை அறிவித்துள்ளது.
  • அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலையின் ஆன்மிகம் சொற்பொழிவு மற்றும் சேவை மையம் 'சர்வதேச குடிமக்களின் துாதர்' என்ற கவுரவ விருதை இந்தாண்டு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • உலகளவில் மனித நேயம் சகோதரத்துவம் ஒற்றுமை அமைதி ஆகியவற்றுக்கு பாடுபடுவோருக்கு இந்த விருது வழங்கப்படும். இந்த வகையில் வாழும் கலை அமைப்பைச் சேர்ந்த ரவிசங்கருக்கு சர்வதேச குடிமக்களின் துாதர் விருது வழங்கப்படுவதாக நார்த் ஈஸ்டர்ன் பல்கலை அறிவித்துள்ளது.

சென்சஸ் பணிகளுக்கு ரூ.8,754 கோடி நிதி ஒதுக்கீடு மத்திய உள்துறை அமைச்சகம்

  • நாடு முழுவதும் பத்தாண்டுக்கு ஒருமுறை சென்சஸ் எடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு கடைசியாக சென்சஸ் எடுக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த ஆண்டில் சென்சஸ் எடுக்கப்பட உள்ளது. 
  • இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.இந்நிலையில் 2021 சென்சஸ் பணிகளுக்காக ரூ.8,754 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஏ.சி மற்றும் எல்.இ.டி., துறைகளுக்கு ரூ.6,238 கோடி நிதிக் குழு ஒப்புதல்

  • கொரோனாவால் பாதிக்கப்பட்ட உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், ஏற்றுமதியை மேம்படுத்தவும் "உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை" என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. 
  • தொலைத் தொடர்பு, ஆட்டோமொபைல், மருந்துகள் உள்ளிட்ட 10 முக்கிய உற்பத்தித் துறைகள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டன. இத்துறைகளின் ஊக்கத்தொகைக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • உற்பத்தி மற்றும் ஏற்றுமதியின் கேந்திரமாக இந்தியாவை மாற்றுவதில் இது ஒரு முக்கிய படியாகும். பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வின் ஒரு பகுதியாகவும் இத்திட்டம் உள்ளது. 
  • இது பல துறைகளில் முதலீட்டை ஈர்க்கும், மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என அரசு கூறியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் முதலீடு மற்றும் உற்பத்தி இலக்கை பூர்த்தி செய்பவர்களுக்கு, அவர்களின் உற்பத்தி மதிப்பில் 4% முதல் 6% வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். 
  • இந்நிலையில் ஏ.சி., மற்றும் எல்.இ.டி., துறைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ரூ.6,238 கோடிக்கு செலவின நிதிக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவையின் வரைவுக் குறிப்பு வர்த்தக அமைச்சரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 
  • அவர்களின் அனுமதிக்கு பிறகு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel