கொரோனா தடுப்பூசி 3வது இடத்தில் இந்தியா
- இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. நாட்டில் 57.75 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
- இதன் மூலம், உலகளவில் அதிகளவில் தடுப்பூசி போடப்பட்ட பயனாளர்களை கொண்ட நாடுகளில், இந்தியா 3வது இடம் பிடித்துள்ளது.
- முதல் 2 இடங்களில் முறையே அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளன. இந்தியாவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 80 பேர் இறந்துள்ளனர். இது, கடந்த 9 மாதங்களில் மிகக் குறைந்த உயிரிழப்பாகும்.
சிறந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி
- 2018 - 19ம் ஆண்டு சிறந்த பள்ளிக்கான விருது, பரங்கிப்பேட்டை ஒன்றியம், அத்தியாநல்லுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தேர்வு செய்யப்பட்டு, தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது.
- இதற்கான விருதை கடலுார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ்நிர்மலா வழங்கினார்.இதில் சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலர் மோகன், கடலூர் மாவட்ட முதன்மை அலுவலக நேர்முக உதவியாளர்கள் முருகன், கிரிஜா, பரங்கிப்பேட்டை வட்டார கல்வி அலுவலர்கள் நடராஜன், மணிவாசகன், அத்தியாநல்லூர் தலைமை ஆசிரியை கபிலா, உதவி ஆசிரியர்கள் ஸ்ரீபிரியா, வாணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
'டாக்டர் ஆபஜெ அப்துல் கலாம் விண்வெளி ஆராய்ச்சி பேலோட் க்யூப்ஸ் சவால் 2021'
- ஹவுஸ் ஆஃப் கலாம், ராமேஸ்வரம் மற்றும் விண்வெளி மண்டல இந்தியா (Space Zone India ) மற்றும் திமார்ட்டின் குழுமம் மற்றும் டாக்டர் ஆ ப ஜெ அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை டாக்க்டர் ஆபஜெ அப்துல் கலாம் விண்வெளி ஆராய்ச்சி பேலோட் க்யூப்ஸ் சவால் 2021" ஐ நடத்தி உள்ளன.
- STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) மீதான ஆர்வத்தை மேம்படுத்துவதற்கும், அதற்கான அறிவைப் பயிற்றுவிப்பதற்கும், 6 ஆம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் அறிவியல் மாணவர்கள் இணைந்து 100 ஃபெமிடோ வகை செயற்கைக்கோள்களை வடிவமைத்து ஒற்றை உயரமான அறிவியல் பலூன் (ஹீலியம் பலூன்) வழியாக ஏவினார்கள்
- 100 ஃபெமிடோ செயற்கைக்கோள்களும் 2021 பிப்ரவரி 7 ஆம்தேதி காலை 10:30 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து வானில் செலுத்தப்பட்டது.
- 6 நாட்கள் ஆன்லைன்வகுப்புகள் மற்றும் ஒருநாள் பயிற்சி பட்டறை மூலம் மாணவர்களுக்கு செயற்கைக்கோள் வடிவமைப்பு பற்றி பயிற்சி கொடுக்கப்பட்டது. ஒரு நாள் பயிற்சி பட்டறை (Hands- on experience traning)நிகழ்வானது. கோவை கேபிஆர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில் ஜனவரி 21 அன்று நடைபெற்றது. சென்னையில் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஜனவரி 22 மற்றும் 23 தேதிகளில் நடைபெற்றது.