Sunday, 28 February 2021

TNPSC 27th FEBRUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

எரிசக்தி, சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை பிரதமர் மோடிக்கு சர்வதேச விருது

 • அமெரிக்க, பிரிட்டிஷ் தகவல் சேவை நிறுவனமான ஐஎச்எஸ் மார்கிட் லிமிடெட் சார்பில் ஆண்டுதோறும் எரிசக்தி மாநாடு நடத்தப்படுகிறது. 
 • இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 6,000-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் துறை தலைவர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த மாநாட்டின்போது சர்வதேச அளவில் எரிசக்தி, சுற்றுச்சூழல் துறையில் சிறந்து விளங்குவோருக்கு விருது வழங்கப்படும்.
 • கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற இருந்த மாநாடு ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு எரிசக்தி மாநாடு (செராவீக் 2021) காணொலி வாயிலாக நாளை தொடங்குகிறது.
 • மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சர்வதேச எரிசக்தி, சுற்றுச்சூழல் தலைமை விருது வழங்கப்பட உள்ளது. "பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் வறுமை ஒழிப்பு திட்டங்களை அதிவேகமாக அமல்படுத்தி வருகிறார். 50 கோடி இந்தியர்கள் பயன் அடையும் வகையில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். 
 • 35 கோடி ஏழைகளுக்கு ஜன்தன் வங்கிக் கணக்குகளை தொடங்கி கொடுத்துள்ளார். இதன்மூலம் மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மானியத் தொகை செலுத்தப்படுகிறது.
 • அமைப்புசாரா துறையை சேர்ந்த 42 கோடி பேர் பயன் அடையும் வகையில் ஓய்வூதிய திட்டம், இலவச சமையல் காஸ் இணைப்பு திட்டம், 18,000 குக்கிராமங்களுக்கு மின்சார வசதி, ஏழை குடும்பங்களுக்கு 1.25 கோடி வீடுகள், விவசாயிகளுக்கு நிதியுதவி, மின்னணு வேளாண் சந்தை, தூய்மை இந்தியா திட்டம், நீர்வழிப் போக்குவரத்து, உதான் விமான சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தியுள்ளார்.
 • சர்வதேச எரிசக்தி உற்பத்திக் கூடமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. அதேநேரம் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் மரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கு பிரதமர் மோடி முன்னுரிமை அளித்து வருகிறார். 
 • பருவநிலை மாறுபாட்டை தடுக்க உறுதி பூண்டுள்ளார். அவரது முயற்சியால் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு உதயமாகியுள்ளது" என்று செராவீக் 2021 எரிசக்தி மாநாடு அறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டிருக்கிறது.
 • எரிசக்தி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை உரையாற்ற உள்ளார். அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் ஜெனிபர், அமெரிக்க சுற்றுச்சூழல் சிறப்பு பிரதிநிதி ஜான் கெர்ரி, கொலம்பிய அதிபர் இவான் டுகே மார்கஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தலைவர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர்.

ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் ஆனார் முகேஷ் அம்பானி
 • சீனாவின் அலிபாபா நிறுவனத் தலைவர் ஜாக்மாவிடமிருந்து கைப்பற்றிய ஆசியாவின் பெரும் பணக்காரர் இடத்தை தொழிலதிபர் முகேஷ் அம்பானி கடந்த 2 ஆண்டுகளாகத் தக்கவைத்திருந்தார். இந்நிலை யில் கடந்த டிசம்பரில் அம் பானியைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு வந்தார் சீன தொழிலதிபர் சாங் ஷான் ஷன்.
 • கடந்த ஒரு வாரமாக சர்வதேச பங்குச் சந்தைகள் மோசமான வர்த்தகத்தை எதிர்கொண்டன. இதில் சீன தொழிலதிபர் சாங் ஷான்ஷனின் நோங்க்ஃபு ஸ்பிரிங் நிறுவனத்தின் மதிப்பு 20 சதவீதம் சரிந்தது.
 • முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு பாதிக்காமல் 80 பில்லியன் டாலராக இருந்தது. இதுவே ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற இடத்தை அம்பானி மீண்டும் பிடிக்க காரணமாக அமைந்தது.
ரூ.140 லட்சம் கோடி கரோனா நிதி: அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல்
 • அமெரிக்காவில் கரோனா நிவாரணத்துக்காக 1.9 லட்சம் டாலா் (சுமாா் ரூ.140 லட்சம் கோடி) நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மசோதாவுக்கு அந்த நாட்டின் நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம், அதிபா் ஜோ பைடனின் இந்த நிவாரணத் திட்டத்துக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.
 • கரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், நிறுவனங்கள், மாகாணங்களுக்கு இந்தத் தொகையை நிவாரணமாக அளிக்க வகை செய்யும் அந்த மசோதாவுக்கு ஆதரவாக 219 வாக்குகளும் எதிராக 212 வாக்குகளும் பதிவாகின. ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் ஏறத்தாழ தங்களது கட்சிகளின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப வாக்குகளை அளித்திருந்தனா்.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a comment