வன்னியர் 10.5% உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்
- அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் புதியப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் சீர்மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது .
- மற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 2.5%. ஆனால் இந்த மாற்றம் தற்காலிகமானது தான் என்றும், 6 மாதங்களுக்கு பிறகு மசோதா மாற்றியமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார் .
சுய உதவிக்குழுவினர் கூட்டுறவு வங்கி, சங்கங்களில் பெற்ற கடன்கள் தள்ளுபடி பேரவையில் முதல்வர் அறிவிப்பு
- சுய உதவி குழுவினர் கூட்டுறவு வங்கி, சங்கங்களில் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
- கிராமப்புறங்களிலும், நகர்ப்புற குடிசைப் பகுதிகளிலும் வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெரும் பங்காற்றி வருகின்றன.
- இன்றைய அளவில் தமிழ்நாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
- இக்குழுக்களில் உள்ள பெண்கள், பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய குடும்பத்தை சார்ந்தவர்கள். இவர்கள் தங்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், சிறுதொழில் செய்யவும், கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று வருகின்றனர்.
- விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை, எளிய குடும்பங்கள் நகைக்கடன் பெற்று அதை திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலையை கருத்தில் கொண்டும்,
- இதுகுறித்து பெறப்பட்ட கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்தும், பொருளாதார வல்லுநர்களின் கருத்துப்படியும், கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பினால் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்று திரும்ப செலுத்துவதில் சிரமத்திற்குள்ளான ஏழை எளிய மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக அதிமுக அரசு, கூட்டுறவு நிறுவனங்களில் 6 சவரன் வரை அடகு வைத்து பெற்ற நகைக்கடன்களை தள்ளுபடி செய்கிறது.
பாம்பன் முதல் தூத்துக்குடி தேசிய கடல் பூங்காவாக அறிவிப்பு
- ராமேஸ்வரம் அருகே பாம்பன் முதல் துாத்துக்குடி வரை கடலில் 21 மன்னார் வளைகுடா தீவுகள்உள்ளன. இத்தீவுகளை சுற்றிலும் டால்பின், கடல் பசு, கடல் குதிரை, கடல்ஆமைகள் உள்ளிட்ட 450 வகை அரிய கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன.
- மேலும் மன்னார் வளைகுடா தீவுகளை சுற்றி வளரும் பவளப்பாறைகள் கடல் அரிப்பை தடுத்து தீவுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது. இத்தீவுகளை தேசியகடல் பூங்காவாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- இதன் காரணமாக தீவுகளில் மீனவர்கள், வெளிநபர்கள்தங்கவோ, மீன்பிடிக்கவோவனத்துறை தடை விதித்தது.அதேசமயம் 21 தீவுகளில் கடல் வாழ் உயிரினங்கள் குருசடை தீவில் உள்ளதால், இத்தீவுக்குள் உயிரியியல் ஆய்வு கூடம் அமைக்கப்பட்டது.
- இங்கு வனத்துறை அனுமதியுடன் உயிரியியல் ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். அரியவகை உயிரினங்கள் பாதுகாப்பு கருதி அதற்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு தடைவிதிக்கப்பட்டது.
மூன்றாவது காலாண்டில் ஜி.டி.பி., 0.4 சதவீதமாக அதிகரிப்பு
- நடப்பு நிதியாண்டில், தொடர்ந்து இரு காலாண்டுகளாக, நாட்டின், 'ஜி.டி.பி.,' எனும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீழ்ச்சியை கண்டு வந்த நிலையில், மூன்றாவது காலாண்டில், சற்று வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
- கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 0.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- கொரோனா பரவலை தடுக்கும் வகையில், ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், வளர்ச்சி, மைனஸ், 24.4 சதவீதமாக சரிவைக் கண்டது.
- இதன் தொடர்ச்சியான பாதிப்பால், இரண்டாவது காலாண்டில், வளர்ச்சி, மைனஸ், 7.3 சதவீதமாக வீழ்ச்சி கண்டது.இந்நிலையில், தடைகள் நீக்கப்பட்டதை அடுத்து, பொருளாதார செயல்பாடுகள் அதிகரிக்க துவங்கின. இதன் காரணமாக, மூன்றாவது காலாண்டில், வளர்ச்சி துவங்கி உள்ளது.
- மேலும் இவ்வலுவலகம், நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி, மைனஸ் 8 சதவீதமாக இருக்கும் என கணித்து, ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி, கடந்த ஜனவரி மாதத்தில், 0.1 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த ஜனவரியில், உரம், உருக்கு மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளில் வளர்ச்சி காணப்பட்டுள்ளது. நிலக்கரி, கச்சா எண்ணெய் ஆகிய துறைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது.
அயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம் மத்திய அரசு ஒப்புதல்
- அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து, அதற்கு 250 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது.
- அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.