ரூ.12,400 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள் பிரதமர் தொடங்கி வைத்தார்
- தூத்துக்குடி வஉசி துறைமுகம் சார்பில்ரூ.42 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள 8 வழிச்சாலை பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.
- தூத்துக்குடி வஉசி துறைமுகச் சாலையில் அனல்மின் நிலைய ரவுண்டானா அருகே இருந்த நான்குவழிச் சாலை பாலம் மற்றும் அதனையொட்டியுள்ள ரயில்வே மேம்பாலம் ரூ.42 கோடியில் 8 வழிச்சாலை பாலமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
- கோவையில் நடைபெற்ற விழாவில் இந்தப் பாலத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- துறைமுகத்தில் ரூ.20 கோடியில் 5 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட தரைதள சூரிய மின்சக்தி ஆலை அமைக்கும் திட்டத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
- நெய்வேலியில் 1,000 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல் மின் திட்டம் ரூ.7,800 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 65 சதவீதத்துக்கும் கூடுதலான மின்சாரம் தமிழகத்துக்கே கிடைக்கும்.
- மதுரை அருகே ராஜாக்கூரில் கட்டப்பட்ட 1088 அடுக்குமாடி வீடுகளும் அடக்கம். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் ரூ.89.75 கோடியில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரூ.8.25 லட்சத்தில் தலா 400 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள 1088 வீடுகள் மதுரை மாநகரில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசிப்போருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பயனாளிகள் பங்குத்தொகை ரூ.19.03 கோடி ஆகும்.
ஜோ பிடன் உத்தரவிட்ட முதல் இராணுவ நடவடிக்கை
- சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு படைகளை தாக்க அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில் ஈராக்கில் நடந்த ஒரு ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக அமெரிக்க ராணுவ தலைமயகமான பென்டகன் கூறியுள்ளது.
- அமெரிக்கா அதிபராக பதவியேற்ற பின் ஜோ பிடன் உத்தரவிட்ட முதல் இராணுவ நடவடிக்கை இது என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவு காரணமாக சிரியாவில் அதிரடி தாக்குதல் அமெரிக்கா தொடங்கி உள்ளது.
- ஈரானிய ஆதரவுடைய போராளி குழுக்களை அழிக்கும் பொருட்டு அமெரிக்கா நேற்று சிரியாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்த மாத தொடக்கத்தில் ஈராக்கில் நடந்த ஒரு ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடத்தப்பட்டதாக பென்டகன் கூறியுள்ளது.
18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நிறைவு
- 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 18-ம் தேதி தொடங்கியது. இவ்விழாவில் 53 நாடுகளில் இருந்து 91 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இவ் விழாவை இம்முறை பிவிஆர் உடன் இணைந்து இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் வழங்கியது.
- இந்த திரைப்பட விழாவில் தமிழ்ப் படங்களுக்கான போட்டியில் 'லேபர்', 'கல்தா', 'சூரரைப் போற்று', 'பொன்மகள் வந்தாள்', 'மழையில் நனைகிறேன்', 'மைநேம் இஸ் ஆனந்தன்', 'காட்ஃபாதர்', 'தி மஸ்கிட்டோ பிலாசபி','சீயான்கள்', 'என்றாவது ஒருநாள்'(சம் டே), 'காளிதாஸ்', 'க/பெ ரணசிங்கம்', 'கன்னி மாடம்' ஆகிய 13தமிழ் திரைப்படங்கள் பங்கேற்றன.
- இதில் சிறந்த படமாக வெற்றிதுரைசாமி இயக்கி தயாரித்த 'என்றாவது ஒரு நாள்' (சம் டே) திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. இப்படத்துக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. சிறந்த தயாரிப்புக்கான ரூ.1லட்சத்துக்கான பரிசையும் இப்படம் வென்றது. மேலும், படத்தின் ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதும், ரூ.1 லட்சம் பரிசும் பெற்றார்.
- இரண்டாவது சிறந்த படமாக 'சீயான்கள்' திரைப்படம் தேர்வானது. இப்படத்தின் தயாரிப்பாளர் கரிகாலனும், இயக்குநர் வைகறைபாலனும் தலா ரூ.1 லட்சம் பரிசு பெற்றனர்.
- இதைத் தவிர சிறந்த நடிப்பு பங்களிப்புக்காக 'க/பெ ரணசிங்கம்' படத்தில் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் விருது பெற்றார்.
வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் சாத்தியமானது
- எதிர்கால சந்ததியினர் வளமுடன் வாழ, 'ஒவ்வொருவரும் ஐந்து மரங்களையாவது வளர்க்க வேண்டும்' என்பது, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் விருப்பம். அவரின் விருப்பத்தை பூர்த்தி செய்ய, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் உருவாக்கப்பட்டது.
- 'மரம் விவசாயிகளுக்கு சொந்தம்; சுத்தமான காற்று மக்களுக்கு சொந்தம்' என்ற கோஷத்துடன், 2015ல் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் துவங்கியது. ஆறு கட்டமாக, 551 இடங்களில், 2,282 ஏக்கர் பரப்பில் பசுமை வனம் உருவாக்கப்பட்டுள்ளன.
- ஆறு ஆண்டுகளில், 10 லட்சத்து, 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில், தனியார் அமைப்பு, நேர்த்தியான திட்டமிடல் மூலம், 87 சதவீத கன்றுகளை மரமாக வளர்த்தெடுத்துள்ளது.
- திட்டப்பணிகள், கோவை, சித்தார்த் பவுண்டேஷன் அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட செயல்வடிவம், ஆவணமாக்கப்பட்டுள்ளது.
- 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 240 வகையான மரம், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. சிறகடித்து பறக்கும், 65 வகை பட்டாம்பூச்சிகள், 41 வகை சிலந்திகள், 11 வகையான தட்டான் பூச்சிகளும், மரக்கன்று வளர்ந்த இடங்களில் காணப்படுகிறது.
- 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 240 வகையான மரம், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. சிறகடித்து பறக்கும், 65 வகை பட்டாம்பூச்சிகள், 41 வகை சிலந்திகள், 11 வகையான தட்டான் பூச்சிகளும், மரக்கன்று வளர்ந்த இடங்களில் காணப்படுகிறது.
கூகுள், முகநூலைக் குறிவைக்கும் சட்டம்: ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் நிறைவேற்றம்
- பிற ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளைப் பகிரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அதற்கான கட்டணத்தை அந்த ஊடக நிறுவனங்களுக்கு அளிப்பதைக் கட்டாயமாக்கும் சட்டத்தை ஆஸ்திரேலிய நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் சபை வியாழக்கிழமை நிறைவேற்றியது.
- இதையடுத்து, பிற ஊடகங்களின் செய்திகளைப் பகிா்ந்து வரும் அமெரிக்க தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான்களான கூகுள், முகநூல் ஆகியவை அதற்கான கட்டணத்தைச் செலுத்தியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
டெஸ்டில் 400 விக்கெட்களை வீழ்த்தி அஸ்வின் சாதனை
- இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாம் நாளான இன்று பேட்டிங் செய்த இந்திய அணி 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
- பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்து வருகின்றனர். இதில், 23வது ஓவர் மூன்றாவது பந்தை வீசிய அஸ்வின், இங்கிலாந்து வீரர் ஆர்சரை எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்க செய்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400வது விக்கெட்டை பதிவு செய்தார்.
- குறைந்த போட்டிகளில் 400 விக்கேட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் முரளிதரனுக்கு(72 போட்டிகள்) அடுத்தபடியாக அஸ்வின் 77 போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
- இதே ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸின் போது சர்வதேச போட்டிகளில் 600 விக்கெட்டுகளை கடந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.