பிச்சாண்டார்கோயிலில் முதலாம் ராஜேந்திரசோழனின் கல்வெட்டு
- உத்தமர்கோயில் என்றும் பிச்சாண்டார் கோயில் என்றும் அழைக்கப்படும் இந்த ஊரில் இந்திய தொல்லியல் துறையால் 1902-ம் ஆண்டில் படியெடுக்கப்பட்ட ராஜேந்திர சோழனின் மகனான முதலாம் ராஜாதிராஜனின் 30-வது ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று இருந்தது. இந்த கல்வெட்டே இந்த கோயிலின் பழமையான கல்வெட்டு என கருதப்பட்டிருந்தது.
- கோயிலும் அந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என ஒரு கருத்து இருந்தது. இந்த கல்வெட்டில் கூட இந்த ஊரின் பெயர் உத்தமர்கோயில் என்று இல்லை.
- ஆனால், திருமங்கையாழ்வார் தம் பாசுரத்தில் ''பேரானைக் குறுங்குடியெம் பெருமானை, திருதண்கால் ஊரானைக் கரம்பனூர் உத்தமனை'' எனப் பாடுகிறார்.
- எனவே, இத்தலத்தின் பெயர் திருக்கரம்பனூர் எனவும் இங்குள்ள பெருமாள் பெயர் உத்தமர் எனவும் அறிய முடிகிறது. பின்னாளில் வைணவர்களால் இவ்வூரின் பெயர் ''உத்தமர் கோயில்'' என்றே அழைக்கப்பட்டு வந்து அப்பெயரே இன்றும் நிலைத்து விட்டதை அறியலாம்.
- ஆனால், பிச்சாண்டார்கோயில் என்ற மற்றொரு பெயர் எப்போதிலிருந்து அழைக்கப்பட்டது என்ற சான்றுகள் இல்லாமல் இருந்தது. இந்த கோயிலில் குடமுழுக்கையொட்டி, திருப்பணி செய்யப்பட்டபோது அகற்றப்பட்ட பிற்கால கட்டுமானங்களுக்கு அடியில் கல்வெட்டுகள் மிகவும் அழுக்கடைந்து வீணாகும் நிலையில் இருந்ததை, உத்தமர்கோயில் செயல் அலுவலர் ஜெய்கிஷண், யாதும் ஊரே யாவரும் கேளிர் அமைப்பிடம் தெரிவித்தார்.
- அப்போது, இங்கு முதலாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த கல்வெட்டு முதலாம் ராஜேந்திரனின் 16-வது ஆட்சியாண்டு கல்வெட்டாகும். அதாவது 1028-ம் ஆண்டு. இந்த கல்வெட்டிலிருந்து இக்கோயில் இவராலேயே கட்டப்பட்டது என உறுதியாக கூறலாம்.
- இந்த கல்வெட்டில் ராஜேந்திர சோழனின் கங்கை படையெடுப்பு, ஈழம், வங்காளதேசம், கலிங்கம், பாண்டிய, சேர நாட்டு, சாளுக்கிய நாட்டு படையெடுப்பின் வெற்றிகளை கூறி, அதன்பின் இந்த ஊர் ராஜாஸ்ரிய வளநாட்டு, பாச்சில் கூற்றத்து, திருக்கரம்பனூர் என்றும், இக்கோயிலிலுள்ள சிவன் மூலஸ்தானத்து ''பிச்சதேவர்'' என்றும் அழைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து இக்கோயிலின் இறைவன் பெயர் ''பிச்சதேவர்'' என அறியலாம். பிச்சதேவர் என்றால் பிக் ஷாடனரை குறிக்கும். மேலும், இக்கோயிலுக்கு விடப்பட்ட நிலங்கள் குறித்தும் கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எனவே, இந்த ஊரிலுள்ள சிவன்கோயிலை சைவர்கள் பிச்சாண்டார்கோயில் என்றும், வைணவர்கள் உத்தமர்கோயில் என்றும் அழைத்து வந்ததை அறியலாம். காலப்போக்கில் இவ்வூரின் ஆதிபெயரான திருக்கரம்பனூர் மறைந்து இன்று இப்பெயர்களில் அழைத்து வரப்படுகிறது என அறிய முடிகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஸ்டேடியம் பெயர் மாற்றம்
- புதிய அம்சங்களுடனும், நவீன வசதிகளுடனும் உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா ஸ்டேடியம் தயார்படுத்தப்பட்டுள்ளது.
- இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி இங்கு நடைபெற்று வருகிறது. இந்த ஸ்டேடியத்தை, இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முன்னிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
- 63 ஏக்கர்களில் பரந்து விரிந்துள்ள இந்த அரங்கத்தில், ஒரே நேரத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டிகளை கண்டு ரசிக்கலாம். 800 கோடி ரூபாய் செலவில் லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனம், இந்த அரங்கத்தை கட்டி முடித்துள்ளது.
- உலகின் மிகச்சிறந்த மற்றும் பெரிய கிரிக்கெட் மைதானம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள நிலையில், அந்த பெயரை இனி, சர்தார் படேல் மைதானம் பெற்று இருந்தது.
- இந்த நிலையில், சர்தார் படேல் எனப் பெயரிடப்பட்டிருந்த இந்த அரங்கம், நரேந்திர மோடி விளையாட்டரங்கு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிட்சின் இரு முனைக்கும் ரிலையன்ஸ் என்ட் (Reliance End) மற்றும் அதானி என்ட் (Adhani End) என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
ஐ.நா. தூதராக லிண்டா தாமஸ் அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
- ஐ.நா. அமைப்புக்கான புதிய அமெரிக்கத் தூதராக லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்டு நியமிக்கப்பட்டுள்ளதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
- இதுகுறித்து அந்தச் சபையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், லிண்டா தாமஸ் நியமனத்துக்கு ஆதரவாக 78 பேரும், எதிராக 20 பேரும் வாக்களித்தனா்.
- 68 வயதாகும் லிண்டா தாமஸ், வெளியுறவுப் பணிகளில் 35 ஆண்டு கால அனுபவம் மிக்கவா். ஆப்பிரிக்கா உள்பட 4 கண்டங்களில் அவா் அமெரிக்காவுக்காக வெளியுறவுச் சேவையாற்றியிருக்கிறாா்.
- அவரது நியமனம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சா் அந்தோணி பிளிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அரங்கில் அமெரிக்காவின் தலைமைத்துவத்தை மேம்படுவதற்கான அதிபா் ஜோ பைடனின் நோக்கத்துக்கு உதவும் வகையில், ஐ.நா.தூதராக லிண்டா தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளதற்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.
அரசு தொடர்பான பரிவர்தனையில் தனியார் வங்கிகளுக்கு இருந்த தடை நீக்கம்
- இதுவரை அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகளை பொதுத் துறை வங்கிகள் மட்டுமே மேற்கொண்டு வந்த நிலையில், தனியார் வங்கிகளுக்கு இருந்த தடையை மத்திய நிதி அமைச்சர் நீக்கியுள்ளார்.
- இந்திய பொருளாதார வளர்ச்சி, வாடிக்கையாளர்களுக்கு வசதி, அரசின் சமூகத் துறை முயற்சிகளை மேம்படுத்துவது, வாடிக்கையாளர்களுக்கு வசதி ஏற்படுத்துவது போன்றவற்றில் இனி தனியார் வங்கிகள் சம பங்களிப்பாளர்களாக இருப்பார்கள்.
- வங்கித் துறையில் நவீன தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை செயல்படுத்துவதில் தனியார் துறை வங்கிகள் முன்னணியில் இருக்கின்றன.
- தற்போது அவை இந்திய பொருளாதார வளர்ச்சியில் சமபங்கு வகிக்கும். அரசு வணிகங்களை மேற்கொள்ள தனியார் வங்கிகளுக்கு இருந்த தடை நீக்கப்பட்டதன் மூலம், அவற்றிற்கு அங்கீகாரம் வழங்க ரிசர்வ் வங்கிக்கு இனி எந்த தடையும் இல்லை. அரசாங்கம் தனது முடிவை ரிசர்வ் வங்கிக்கு தெரிவித்துள்ளது.
100 ஆவது டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா
- இங்கிலாந்து அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற்று வரும் தனது 100 ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா.
- இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.