இந்திய வம்சாவளி மருத்துவர்கள் மாநாட்டில் முதியோர் நல மருத்துவர் நடராசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
- உலகளவில் உள்ள இந்திய வம்சாவளி மருத்துவர்கள் மாநாடு, காணொலி மூலம் கடந்த 27, 28-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் இந்தியா மற்றும் சுமார் 50 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு மருத்துவர்கள் பங்கேற்றனர்.
- 35-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இதில் 6 மருத்துவர்களுக்கு சிறந்த சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.
- முதியோர் நல மருத்துவர் வ.செ.நடராசனுக்கு, முதியோர் நலத் துறையில் கடந்த 40 ஆண்டுகளாக சேவை செய்ததற்காக 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கப்பட்டது.
- அத்துடன் வாழ்த்து மடல், நினைவுப் பரிசு மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது. இந்தத் தொகையை அவர் தனது டாக்டர் வ.செ.நடராசன் முதியோர் நல அறக்கட்டளைக்கு' அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சமீபத்தில் மஹாராஷ்டிராவின் சோலாப்பூர், கர்நாடகாவின் விஜய்புரா இடையே செல்லும் என்.எச்., 52-ல் 25.54 கிலோ மீட்டருக்கு ஒற்றை வழி சாலை அமைத்து உலக சாதனை
- தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சமீபத்தில் மஹாராஷ்டிராவின் சோலாப்பூர், கர்நாடகாவின் விஜய்புரா இடையே செல்லும் என்.எச்., 52-ல் 25.54 கிலோ மீட்டருக்கு ஒற்றை வழி சாலை அமைத்து உலக சாதனை படைத்துள்ளது.
- இந்த சாலை ஆனது அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட பெங்களூரு - சித்ரதுர்கா - விஜய்புரா - சோலாபூர் - அவுரங்காபாத் - இந்தூர் - குவாலியர் சாலையின் ஒரு பகுதியாகும். அதில் தற்போது விஜய்புரா - சோலாபூர் இடையே 110 கி.மீக்கு நான்கு வழிச்சாலை அமைத்து வருகின்றனர்.
- அக்டோபர் 2021-ல் இச்சாலைப் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர். அதில் உலக சாதனை முயற்சியாக 25.54 கி.மீ சாலையை 500 ஊழியர்கள் 18 மணி நேரத்தில் அமைத்துள்ளனர்.
- இத்தகவலை நெடுஞ்சாலைகள் துறைக்கான மத்திய அமைச்சர் கட்கரி உறுதிப்படுத்தினார். இந்த விரைவுப் பணி லிம்கா சாதனை புத்தகத்தில் சேர்க்கப்பட உள்ளது.
2021ம் ஆண்டின் முதல் விண்வெளி பயணம்
- 2021ம் ஆண்டின் முதல் விண்வெளிக்கான பயணத்தினை இஸ்ரோ வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. இன்று ஏவப்பட்ட PSLV -c51 ராக்கெட் 19 முக்கிய செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு ஆந்திர மாநிலம் சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து விண்வெளி கொண்டு சென்றுள்ளது.
- காலை சரியாக 10:30 மணிக்கு ஏவப்பட்ட இந்த ராக்கெட் பிரேசிலின் 637 கிலோ எடைகொண்ட அமேஜோனியா செயற்கைக்கோளை கொண்டு சென்றுள்ளது. அத்துடன் புவியை கண்காணிக்கும் செயற்கைக்கோளும் அனுப்பப்பட்டுள்ளது.
- பிரேசிலின் அமேஜோனியா செயற்கைக்கோள், அமேசான் காடுகளின் அழிவை கண்காணிக்கவும், அது குறித்த தகவல்களை பயனாளர்களுக்கு துல்லியமாக வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
- இதனுடன் IN-SPACe நிறுவனத்தின் செயற்கைக்கோள்களும், இஸ்ரோவின் 14 செயற்கைக்கோள்களும் என மொத்தமாக 19 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன.
- IN-SPACe தொகுதியில், அமெரிக்காவின் ஸ்பேஸ் பிஇஇ, மெக்சிகோவின் தயாரிப்பில் உருவான நானோகனெக்ட் செயற்கைக்கோள்களும், ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா, யுனிட்டி சாட் சார்பில் 3 செயற்கைக்கோள் போன்றவை இந்த தொகுதியில் அடங்கியுள்ளபட்டு.
- இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவன நியூஸ்பேஸ் இந்தியா சார்பில் முதல் முறையாக வர்த்தக ரீதியாக பிரேசிலின் செயற்கைக்கோள் ஏவப்படுகிறது. இத்துடன் பிரதமர் மோடியின் உருவம் பொறித்த படம் ஒன்றும், டிஜிட்டல் முறையிலான பகவத் கீதையும் ஏவப்பட்டது.
- இந்த பணியை சிறப்பாக செய்துள்ள பிஎஸ்எல்வியின் 53வது ராக்கெட், புறப்பட்ட 17 நிமிடங்களில் பிஎஸ்4 என்ஜின் செயல்பாடு நிறுத்தப்பட்டு, பிரேசிலின் செயற்கைக்கோளை நிலைநிறுத்திவிடும்.
- பின்னர், 58 நிமிடங்களுக்கு பின்னர் மீதமுள்ள 18 செயற்கைக்கோள்களையும் அடுத்த 4 நிமிடங்களில் நிலை நிறுத்தும். மொத்தமாக 2 மணி நேரம் 8 நிமிடம் பயணிக்கும் என்று சொல்லப்படுகின்றது.
- நான்கு படிநிலைகளைக் கொண்ட இந்த பிஎஸ்எல்வி ராக்கெட்டில், முதல் மற்றும் மூன்றாவது படிநிலைகளில் திட எரிபொருளும், இரண்டாவது மற்றும் நான்காவது படிநிலைகளில் திரவ எரிபொருளும் பயன்படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.