Type Here to Get Search Results !

TNPSC 21st FEBRUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ஆஸி. ஓபன் டென்னிஸ் 9வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்

  • ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். 
  • இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் டானில் மெட்வதேவுடன் (4வது ரேங்க்) நேற்று மோதிய ஜோகோவிச் 7-5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 
  • அந்த செட்டில் மெட்வதேவ் ஓரளவு ஈடுகொடுத்து விளையாடியதால், அடுத்தடுத்த செட்கள் கடும் போராட்டமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 
  • ஆனால், தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி மெட்வதேவை திணறடித்த ஜோகோவிச் 7-5, 6-2, 6-2 என நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி ஆஸி. ஓபனில் 9வது முறையாகவும், தொடர்ச்சியாக 3வது முறையாகவும் சாம்பியன் பட்டம் வென்று ஆதிக்கத்தை நிலைநாட்டினார்.
  • 2019 யுஎஸ் ஓபன் பைனலில் நடாலிடம் தோற்று கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் வாய்ப்பை வீணடித்த அவர், தற்போது ஆஸி. ஓபன் பைனலில் ஜோகோவிச்சிடம் தோற்று 2வது இடத்துடன் திருப்தி அடைந்தார். 
  • ன்னிஸ் அரங்கில் ரோஜர் பெடரர் (39 வயது, சுவிஸ்.), ரபேல் நடால் (34 வயது, ஸ்பெயின்), ஜோகோவிச் (33 வயது) மூவரும் கடந்த 15 ஆண்டுகளாக கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் செலுத்தி வரும் ஆதிக்கம் தொய்வின்றி தொடர்கிறது. 
  • அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் வரிசையில் பெடரர், நடால் இருவரும் தலா 20 பட்டங்களுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ள நிலையில், ஜோகோவிச் 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்துடன் அடுத்த இடத்தில் உள்ளார்.
பெண் கணித மேதை கேப் கேத்தரின் ஜான்சன்க்கு கவுரவம்
  • அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, 'நாசா' வின் முதல் கறுப்பின பெண் கணித நிபுணரான, கேத்தரின் ஜான்சனை கவுரவிக்கும் வகையில், அவரது பெயரில் விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. 
  • கேத்தரின் ஜான்சன் உருவாக்கிய கணக்குகளை அடிப்படையாக வைத்தே, முதல் முறையாக அமெரிக்கர்கள் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டனர்.'ஹிடன் பிகர்' என்ற, 2016ல் வெளியான சினிமாவில், கேத்தரின் வாழ்க்கை வரலாறு விவரிக்கப்பட்டுள்ளது. 
  • கடந்தாண்டில், தன், 101வது வயதில் அவர் உயிரிழந்தார்.கடந்த, 1962, பிப்., 20ல், அமெரிக்காவின் ஜான் கிளென், விண்வெளிக்கு பறந்தார். அதன், 59வது ஆண்டு தினத்தில், விண்வெளியில் ஆய்வு செய்யும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ள விண்கலத்துக்கு, கேத்தரின் ஜான்சன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் முதல்வர் எடப்பாடி அடிக்கல்

  • ரூ.14,400 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட உள்ள காவிரி- தெற்கு வெள்ளாறு - வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரில் நடந்தது. 
  • துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். 
  • காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தால் கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் விவசாயிகள் பயனடைவார்கள். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 65 சதவிகிதம் பேர் விவசாயிகள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel