Type Here to Get Search Results !

TNPSC 11th FEBRUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

'பாபர்-3' ஏவுகணை சோதனை வெற்றி

  • நிலம் மற்றும் நீர் பரப்பில் இருந்து 450 கி.மீ. சென்று எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் உள்ள 'பாபர்-3' ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக நடந்தது.
  • இந்த வெற்றிக்கு பாக். ஜனாதிபதி ஆரிப் ஆல்வி பிரதமர் இம்ரான் கான் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் சுபேர் மகமூத் ஹயாத்உள்ளிட்டோர் பாராட்டுதெரிவித்துள்ளனர்.
  • கடந்த ஜன. 20ல் 2750கி.மீ. துாரத்திற்கு அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று இலக்கை தாக்கும் திறனுள்ள 'ஷாஹீன் - 3' ஏவுகணை சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.இதைத் தொடர்ந்து கடந்த 3ம் தேதி 'கஸ்நவி' ஏவுகணையின் சோதனை நடைபெற்றது. 
  • 290 கி.மீ. துாரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் இந்த ஏவுகணை சோதனையும் வெற்றி பெற்றது. கடந்த மூன்று வாரங்களில் மூன்று ரக ஏவுகணை சோதனைகள் வெற்றிகரமாக நிகழ்த்தப் பட்டன.

செவ்வாய் கோளின் சுற்று வட்டப்பாதையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் விண்கலம்

  • "அல் அமல்' அல்லது "ஹோப்' (நம்பிக்கை) எனப் பெயரிடப்பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் விண்கலம் ஜப்பானின் தானேகசிமா தீவில் உள்ள ஏவுதளத்திலிருந்து கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் ஏவப்பட்டது.
  • அரபு நாடுகளில் முதல் விண்வெளித் திட்டமான இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை நோக்கி 49.50 கோடி கி.மீ. பயணம் செய்து அதன் சுற்றுவட்டப்பாதையை அடைந்துள்ளது.
  • 200 மில்லியன் டாலர் (ரூ.1,496 கோடி) மதிப்பீட்டிலான இத்திட்டம் 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. பொறியாளர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட 135 பேர் கொண்ட குழுவினர் இத்திட்டப் பணியில் ஈடுபட்டனர்.
  • செவ்வாய் கோளின் வளிமண்டலம் மற்றும் நீர் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ள இந்த விண்கலம் எதிர்வரும் மே மாதம் செவ்வாய் கோளில் இந்த விண்கலம் தரையிறக்கப்படும் என அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலக பாரா தடகளம் இந்தியாவுக்கு தங்கம்
  • துபையில் நடைபெறும் சர்வதேச பாரா தடகள கிராண்ட்ஃ ப்ரீ போட்டியில் முதல் நாளான வியாழக் கிழமை இந்தியாவுக்கு 2 தங்கம் உள் படம் பதக்கங்கள் கிடைத்தது
  • இதில் ஆடவருக்கான வட்டு எறி தல் பிரிவில் (எஃப்-44) இந்தியாவின் தேவேந்தர் குமார் தனது 2-ஆவது முயற்சியில் 50.61 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார் அதே பிரிவில் மற்றொரு இந்தியரான பிரதீப் 41.77 மீட்டர் தூரம் எறிந்து 2 ஆம் இடம் பிடித்தார்.
  • மகளிருக்கான நீளம் தாண்டுதலில் (எஃப்46/47) இந்தியாவின் நிமிஷா சுரேஷ் 5.25 மீட்டர் தூரம் கடந்து தங்கத்தை தனதாக்கினார். சர்வதேச போட்டியில் தேவேந்தர், நிமிஷாவுக்கு இது முதல் பதக்கமாகும்
  • இவர்கள் தவிர ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் (டி64) பிர ணவ் தேசாய் 11.76 விநாடிகளில் பந்தய இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். 
  • ஆடவருக் கான வட்டு எறிதல் பிரிவில் (எஃப்-52) வினோத் குமார் 18.52 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். மகளிருக் கான 1500 மீட்டர் ஓட்டத் தில் (டி-11)ரக்ஷிதா ராஜ நிமிடம் 22.15 விநாடிக ளில் இலக்கை எட்டி வெண் கலப் பதக்கம் வென்றார்
மொழி சிறுபான்மையினருக்கான சமூக பொருளாதார மேம்பாட்டுக் கழகம் உருவாக்கம்: தமிழக அரசு உத்தரவு
  • மொழி சிறுபான்மை பொருளாதார யினருக்கான சமூக - பொருளாதார மேம்பாட்டுக்கான தனி கழகத்தை  தமிழக அரசு உருவாக்கியுள்ளது
  • இதற்கான உத்தரவை பிற்படுத்தப்பட் செய்யும். சிறுபான்மையினர் நலத்துறைடோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டார். 
  • தமிழகத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது மற்றும் சௌராஷ்டிர மொழிகளைப் பேசும் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், பல்வேறு பிரச்னைகளைச் நிர்வாக இயக்கநர், திறன் மேம்பாட்டுக் சந்தித்து வருகின்றனர்
  • விரும்பும் மொழியில் கல்வி, வேலை வாய்ப்பு, வணிகம் ஆகியவற்றில் பிரதிநிதித்துவம் கிடைப்பதிலும், பொருளாதார வாய்ப்புகளிலும் அவர்கள் பின் தங்கி உள்ளனர். இந்தப் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு மொழி சிறுபான்மையினர் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை உருவாக்கிட தமிழக அரசு முடிவு செய்தது. 
  • இதன்படி, ரூ.9 கோடி மூலதனத்தில் இந்த கழகம் உருவாக்கப்படுகிறது. வர்த் தகவங்கிகள் போன்ற நிறுவனங்களிடம் இருந்து இந்தக் கழகங்கள் கடன்களைப் பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இந்தக் கழகமானது 16 பேரைக் கொண்டு இயங்கும்.
  • இதன் தலைவரை அரசு நியமனம் இயக்குநர் இந்தக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருப்பார். நிதித் துறை செயலாளர், பிற்படுத்தப்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை செயலாளர், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை இயக்குநர், தொழில் மற்றும் வர்த்தகத் துறை இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், ஆவின் நிர்வாக இயக்குநர், ஊரக வாழ்வாதார இயக்க கழக நிர்வாக இயக்குநர், நகராட்சி நிர்வாக ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கழகத்தின் இயக்குநர்களாக இருப்பர்
  • மேலும், மொழி சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த நான்கு பேரை இயக்குநர்க ளாக அரசு நியமிக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel