12 துறைமுகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம்: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்
- சென்னை, தூத்துக்குடி உட்பட நாட்டில் உள்ள 12 பெரிய துறைமுகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப் பட்டது.
- குஜராத், ஒடிசா, விசாகப்பட்டினம், மும்பை, மேற்கு வங்கம், சென்னை, எண்ணூர், தூத்துக்குடி, கோவா உட்பட நாட்டில் உள்ள 12 பெரிய துறைமுகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கும் மசோதா, கடந்த ஆண்டு செப்டம்பரில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப் பட்டது.
- இதைத் தொடர்ந்து இந்த மசோதா, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்மீது நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்குச்சீட்டு முறையில் நடந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 84 வாக்குகளும், எதிராக 44 வாக்குகளும் பதிவாயின.
- பொதுத்துறை நிறுவனமான ஹிந் துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமி டெட் (ஹெச்ஏஎல்) நிறுவனத்துடன் அமெரிக்காவைச் சேர்ந்த லாக் ஹீட் மார்ட்டின் நிறுவனம் ஒப்பந் தம் செய்துள்ளது. இரு நிறுவனங்களும் இணைந்து விமான தயாரிப்பில் ஈடுபட இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது.
- விமானப் படைக்குத் தேவை யானவிமானங்களைத்தயாரிக்கும் பணியில் ஹிந்துஸ்தான் ஏரோநாட் டிக்கல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த லாக் ஹீட் மார்ட்டின் நிறுவனமும் அதி நவீன போர் விமானங்களைத் தயாரிக்கிறது.
- இவ்விரு நிறுவனங்களும் ஒன்றிணைந்துள்ளதால் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன விமானங்களைத் தயாரிக்க வழி ஏற்பட்டுள்ளது ஆசியாவில் மிகப் பெரிய விமான தயாரிப்பு நிறுவனமான ஹெச்ஏஎல்-லுடன் ஒப்பந்தம் செய்துள்ளது,
- பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
- பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உர உற்பத்தி நிறு வனத்துக்கு ரூ.100 கோடி நிதியுதவி அளிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த நிதியுதவியானது யூரியா உற்பத்தியை ஆண்டுக்கு 3.90 லட்சம் டன் அளவுக்கு அதிகரிக்க உதவும்
- இதன் மூலமாக, அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தேயிலைத் தோட்டங்களுக்கு உரம் குறித்த நேரத்தில் கிடைப் பது உறுதி செய்யப்படும். அந்த உர உற்பத்தி நிறுவனத்தில் 580 பணியாளர்களை நிரந்தரமாகப் பணியில் அமர்த்துவதற்கும், 1,500 பணியாளர்களைத் தற்காலிகமாக அமர்த்துவதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது
- உர உற்பத்தி நிறுவனம் வாயிலாக மேலும் 28,000 பேர் பலனடைவர். இது தற்சார்பு இந்தியா திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு உதவி புரியும்.
- பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உர உற்பத்தி நிறுவனத்தின் சார்பில் அஸ்ஸாமின் நம்ரூப் பகுதியில் இரண்டு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
- இந்தியாவில் நிறுவப்பட்ட பழைமையான ஆலைகள் என்பதாலும், பழைமையான தொழில்நுட்பத்தாலும் அங்கு குறைந்த செலவில் உரத்தை உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
- அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் சிறப்பாகக் காணப்பட்டாலும் இந்தக் குறைபாடு காணப்படுகிறது. ஆலையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சில இயந்தி ரங்களை மாற்ற வேண்டியுள்ளது; சில நிறுவனங்களைப் பழுதுபார்க்க வேண்டியுள்ளது. அதன் காரணமாகவே அந்நிறுவனத்துக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
- வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியை உறுதி செய்வதில், பிரம்ம புத்திரா பள்ளத்தாக்கு உர உற்பத்தி நிறுவனம் முக்கியப் பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது
- தேசிய ஜூனியர் தடகள சாம் பியன்ஷிப் போட்டியில் தமி ழக வீரர் பிரவீண் சித்திரவேல், மும்முறை தாண்டுதல் போட்டி யில் முதலிடம் பிடித்தார்
- தேசிய துப்பாக்கி சுடுதல் தேர்வு போட்டியில் திவ் திவ் யான்ஷ் சிங் பவார் ஆடவருக் கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் டி4 பிரிவில் 253.1 புள்ளிகள் பெற்று வென்றதுடன், உலக சாதனை புள்ளியை முறியடித் தார்.
- பிரான்ஸில் நடைபெறும் தட கள போட்டியில் எத்தியோ பிய வீராங்கனை குடாஃப் செகே, உள்ளரங்கு 1,500 மீட்டர் ஓட்டத்தில் பந்தய இலக்கை 3 நிமிடம் 53.09 விநாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார்.
- இத்தாலியன் கோப்பை போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முதல் அணியாக ஜுவென் டஸ் தகுதிபெற்றது.