பிளாஸ்டிக் வேஸ்டைக் அடையாளம் காணும் கருவி - ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு / Plastic Waste Identification Tool - Invented by Researchers, University of Hyderabad
TNPSCSHOUTERSFebruary 05, 2021
0
பிளாஸ்டிக் மற்றும் அதன் கழிவுப் பொருட்கள் உலகின் சாபக்கேடாக மாறியுள்ளது. இதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறன்றன.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் கழிவுகள் அதிகம் என்பதால், அவற்றை தமிழக அரசு ஏற்கனவே தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்குப் பிறகு மறுசுழற்சி செய்யலாம் என்றாலும், அவற்றின் மூலப்பொருட்களை தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
எந்தெந்த கலவைகளைக் கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக அறிந்து கொண்டால் மட்டுமே, அதற்கேற்ப அவற்றை மறுசுழற்சி செய்ய முடியும்.
அந்தவகையில் பிளாஸ்டிக் கழிவுபொருட்களை அடையாளம் காண்பதில் நடைமுறைச் சிக்கல் இருந்து வருகிறது. இந்த சிக்கலுக்கு விடையளிக்கும் விதமாக ஹைதராபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு ஆய்வாளர்கள் புதிதாக லேசர் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
அந்தக் கருவி எந்த வகை பிளாஸ்டிக் மற்றும் அவற்றின் தரத்தின் தெளிவாக கண்டறிகிறது. ஆய்வாளர்களின் கூற்றின்படி, 97 விழுக்காடு பிளாஸ்டிக் கழிவுகளை அடையாளம் காண, புதிய கருவி பயன்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜேந்தர் ஜன்ஜூரி , மற்றும் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் டாக்டர் மனோஜ்குமார் ஆகியோர் லேசர் - இன்டியூஸ்டு பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோ ஸ்கோபி முறையை பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகளின் தகவல்களை பெற்றுள்ளனர்.
தெலங்கானா மாநிலத்தின் நிர்மல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்த அவர்கள் புதிதாக கண்டுபிடித்த கருவியில் LIBS முறை மூலம் ஆய்வுக்குட்படுத்தினர்.
அப்போது, ஆச்சர்யப்படும் வகையில் 97 விழுக்காடு அளவு மறுசுழற்சிக்கு உட்படுத்த ஏதுவான பிளாஸ்டிக் கழிவுகளை கண்டறிந்துள்ளது. இது குறித்து பேசிய இருவரும், வரும் காலத்தில் பிளாஸ்டிக் மறுசுழற்சி அதிகரிக்கும்போது இந்த இயந்திரத்தின் தேவையும் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
அவர்கள் இருவரும் தங்களின் ஆய்வுக்கு 'Low-Cost Sorting of Plastic Waste என பெயரிட்டுள்ளனர். அந்த ஆய்வு Optical Society of America இதழில் வெளியாகியுள்ளது.