Type Here to Get Search Results !

TNPSC 4th FEBRUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

145 நாடுகளுக்கு தடுப்பூசி, 'சீரம் - யுனிசெப்' ஒப்பந்தம்

  • உலகளவில், 145க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வினியோகிப்பது தொடர்பாக, இந்தியாவின், சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக, 'யுனிசெப்' எனப்படும், ஐ.நா., குழந்தைகள் நல நிதியம் அறிவித்துள்ளது.
  • யுனிசெப், 'கோவக்ஸ்' திட்டத்தின் கீழ், கொரோனா தடுப்பூசி மருந்தை கொள்முதல் செய்து, ஏழை நாடுகளுக்கு வழங்க உள்ளது. சீரம் நிறுவனத்தின், 'கோவிஷீல்டு' மற்றும் 'நோவாவேக்ஸ்' கொரோனா தடுப்பூசி மருந்துகளை நீண்ட கால அடிப்படையில் கொள்முதல் செய்ய யுனிசெப் ஒப்பந்தம் செய்துள்ளது.
  • 110 கோடி, 'டோஸ்' தடுப்பூசி மருந்தை கொள்முதல் செய்து, 145 நாடுகளில் உள்ள, ஏழை மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு செலுத்த உள்ளோம். 
  • ஒரு டோஸ் தடுப்பூசி மருந்தின் சராசரி விலை, 225 ரூபாய் ஆக இருக்கும். இந்த திட்டத்திற்கு ஏராளமான அமைப்புகள் நிதியுதவி செய்துள்ளன. கோவக்ஸ் திட்டத்தில், அமெரிக்காவின் பைசர் - பயோடெக் கூட்டு நிறுவனத்திடம், நடப்பு முதல் காலாண்டில், 12 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து பெறப்பட்டு, 18 நாடுகளுக்கு வழங்கப்படும்.
  • மொத்தம், 4 கோடி டோஸ் தடுப்பூசி மருந்து கொள்முதல் செய்யப்படும். கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து, அமெரிக்க சுகாதார கழகம் ஆராய்ந்து வருகிறது. ஒப்புதல் அளித்த பின், ஆப்கன் முதல், ஜிம்பாப்வே வரை, தடுப்பூசி மருந்து வினியோகிக்கப்படும். 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க குடியரசு தலைவருக்குதான் அதிகாரம்

  • பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர்தான் முடிவு செய்ய முடியும் என தமிழக ஆளுநர் விளக்கமளித்து இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதன்மூலம் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு அளித்த பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளார்.
  • முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சுவிட்ச் டெல்லி பிரசாரத்தை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்
  • மாநில பொது போக்குவரத்தில் மின்சார பேட்டரியில் இயங்கும் 1,000 பஸ் (இ-பஸ்) கொள்முதல் செய்யப்படும் என அறிவித்த முதல்வர் கெஜ்ரிவால், அரசின் இ-வாகன கொள்கையை கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் வெளியிட்டார். 
  • கொள்முதல் செய்யப்படும் பஸ் தாழ்தள வசதியுடன் ஏ.சி., உள்ளிட்ட நவீன சாதனங்களுடன் மின்சார பேட்டரியில் (இ-பஸ்) இயங்கும் என தெரிவித்தார். 
  • மேலும், இ-பஸ்களை சார்ஜிங் செய்வதற்கான மையங்கள் அமைக்கும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதையடுத்து, பஸ் கொள்முதல் செய்யும் ஒப்பந்தபுள்ளி வெளியிடப்பட்டு இருப்பதையும் அவர் உறுதி செய்தார்.
  • இந்த சூழலில், இ-வாகனங்களை டெல்லியில் ஊக்குவிக்கும் நடவடிக்கையாக 'சுவிட்ச் டெல்லி' பிரசாரத்தை கெஜ்ரிவால் துவக்கினார். 

பல்வேறு மாவட்டங்களில் ரூ.535 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 5,503 அடுக்குமாடி குடியிருப்புகள் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

  • தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், சென்னை, வேலூர், திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 535 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5,503 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,084 கோடி கடனுதவி திட்டம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

  • ''தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (4.2.2021) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 20,186 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 1,083.96 கோடி ரூபாய் மற்றும் 317 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு 277.79 கோடி ரூபாய், என மொத்தம் 1,361.75 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் அடையாளமாக, 7 மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.
  • மகளிர் சுய உதவிக் குழுக்கள் வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் பெறவும், வங்கிகளுடன் வலுவான நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு வருமானம் ஈட்டக்கூடிய பொருளாதாரத் தொழில்களைத் தொடங்கி நடத்திடவும், அதிக அளவு கடன்களைத் தொடர்ச்சியாகப் பெறவும் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புத் திட்டம் வழிவகை செய்கிறது.
  • தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19.3.2020 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், 2019-20ஆம் ஆண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 13 ஆயிரத்து 301 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
  • இதைக் கருத்தில் கொண்டு, 2020-21ஆம் ஆண்டு 14 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்தார். ஆனால், அந்த இலக்கினையும் கடந்து இதுவரையில் 15,653.04 கோடி ரூபாய் வங்கிக்கடன் தொகை 3,82,121 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகை, கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட கடன் தொகையினைவிட அதிகமானதாகும்.
  • மேலும், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மகளிர் சுய உதவிக்குழுகளுக்கு 48,737.40 கோடி ரூபாய் கடனுதவியாக வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. அரசால் 2011ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலத்திற்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 81,582.65 கோடி ரூபாய் வங்கிக் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel