Type Here to Get Search Results !

தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் / TAMILNADU INTERMEDIATE BUDGET 2021 - 2022

 


  • தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை சட்டப் பேரவையில் துணை முதல்வர் ஓ.பன் னீர்செல்வம் தாக்கல் செய்தார். 
  • கோவையில் ரூ.6,683 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம், 6 முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் அறிமுகம், ரூ.1,580 கோடி யில் 2,700 புதிய பேருந்துகள் உள் ளிட்ட பலவேறு அறிவிப்புகள் இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. 
  • காப்பீடு திட்டத்தில் வறுமைக்கோட்டுக்குகீழ் வாழும் குடும்பத்தின் தலைவரது இயற்கை மரணத்துக்கு ரூ. 2 லட்சம், விபத்து மரணத்துக்கு ரூ.4 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கரோனா பொருந்தொற்று மீட்டெடுப்பு நட வடிக்கைககளுக்காக ரூ.13,352 கோடியே 85 லட்சம் செலவிடப் பட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டில் தமிழகம் 2.02 சதவீதம் நேர்மறை வளர்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • தமிழகத்தில் வறுமைக்கோட் டுக்குகீழ் வாழும் 55 லட்சத்து 67 ஆயிரம் தகுதியான குடும்பங்களில் குடும்பத் தலைவர் இயற்கை மரணம் அடைந்தால், 'புரட்சித்தலைவி அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம்' மூலம் ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். குடும்பத் தலைவர் விபத்தில் இறந்தால் 4 லட்சமும், நிரந்தர இயலாமை ஏற்பட்டால் ரூ.2 லட்சமும் காப்பீட்டுத் தொகை யாக வழங்கப்படும்.
  • கரோனா நிவாரணத்துக்காக மாநில பேரிடர் பொறுப்பு நிதியில் இருந்து ரூ.11,943 கோடியே 85 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. தமிழகத்துக்காக 15-வது நிதிக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள ரூ.1,360 கோடி போதுமானதாக இல்லை.
முக்கிய அம்சங்கள்
  • காவல்துறைக்கு இந்த ஆண்டு ரூ.9,567 கோடியே 93 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் 16 லட்சத்து 43 ஆயிரத்து 347 விவசாயிகள் செலுத்த வேண்டிய ரூ.12,110 கோடியே 74 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின்கீழ் புதிய இணை காப்பீட்டு முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்துக்காக ரூ.1,738 கோடியே 81 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இந்த நிதியாண்டில் ஊரக வளர்ச்சித் துறைக்காக ரூ.22,218 கோடியே 58 லட்சம், நெடுஞ்சாலைத் துறைக்காக ரூ.16,316 கோடியே 47 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் ரூ.1,580 கோடியில் 2,200 பிஎஸ்-6 வகை பேருந்துகளும், 800 மின்சார பேருந்துகளும் கொள்முதல் செய்யப்படும்.
  • கோவை மெட்ரோ ரயில் திட்டத்தில் 44 கி.மீ. நீளமுள்ள முதல்கட்டத்தை ரூ.6,683 கோடியில் அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வில் உள்ளது.
  • அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கணினி அறிவியல் அறிமுகப்படுத்தப்படும்.
  • முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கு ரூ.19,420 கோடியே 54 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சத்துணவு திட்டத்துக்காக ரூ.1,953 கோடியே 98 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மாநிலத்தின் மொத்த வரி வருவாய் இந்த நிதியாண்டில் 17.64 சதவீதம் குறைந்துள்ளது. மத்திய அரசின் வருவாயில், மாநிலங்கள் தங்கள் பங்கை பெறுவதற்கு, மேல் வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை அடிப்படை வரி வீதங்களுடன் இணைக்க மத்திய அரசை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
  • மாநில அரசின் ஒட்டுமொத்த வருவாய் பற்றாக்குறை ரூ.65,994 கோடியே 5 லட்சமாக உயர்ந்துள்ளது. கரோனா பெருந்தொற்றால் வருவாய் கடுமையாக குறைந்துள்ளதால், அரசு கடன்கள் பெறுவதை தவிர்க்க இயலாது. இதனால் நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும்.
  • மாநில சொந்த வரி வருவாய் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 641 கோடியே 78 லட்சமாக இருக்கும். மொத்த வருவாய் வரவினம் ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 991 கோடியே 96 லட்சமாக இருக்கும்.
  • தற்போதைய நிலவர அடிப்படையில் வருவாய் வரவினங்கள் ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்து 409 கோடியே 26 லட்சமாக இருக்கும். இதன் அடிப்படையில், வருவாய் பற்றாக்குறை ரூ.41,417 கோடியே 30 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மூலதன செலவு ரூ.43,170 கோடியே 61 லட்சமாக இருக்கும்.
  • சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நெடுஞ்சாலைத்துறைக்கு மட்டும் 18,750 கோடியும், சுகாதாரத்துறைக்கு 19420 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டம், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 6,448 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • 16 தொகுப்புகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, 4 தொகுப்புகளுக்கான ஒப்புதல்கள் வழங்கப்பட்டன. மீதமுள்ள தொகுப்புகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும். 
  • ஆசிய வளர்ச்சி வங்கியுடனான கடன் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்படும். இத்திட்டத்திற்காக, 2021-22ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், 1,274.09 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 133.87 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளில் சென்னை எல்லை சுற்றுச் சாலை திட்டம், 12,301 கோடியில் செயல்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் நிதியுதவியுடன் பகுதி-1யை செயல்படுத்துவதற்கு 2,673.42 கோடி ஒப்புதலை அரசு வழங்கியுள்ளது. 
  • இத்திட்டத்தின் 2ம் பகுதி மற்றும் 3ம் பகுதியை செயல்படுத்துவதற்காக, ₹4,899 கோடியில், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் சர்வதேச வளர்ச்சி நிதியம் ஆகியவற்றுடன் கடன் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்படவுள்ளது. 
  • இரண்டாம் பகுதியின் இரண்டு பொறியியல், கொள்முதல், கட்டுமான தொகுப்புகளுக்காக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கான ஒப்புதல் விரைவில் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக, 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் ₹2,248.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அடுத்த சில ஆண்டுகளில் 12 ஆயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். அவற்றில் 2 ஆயிரம் பேருந்துகள் மின்சார பேருந்துகளாக இருக்கும். முதல் கட்டத்தில் ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் 1580 கோடியில் 2200 பிஎஸ்-VI பேருந்துகளும், 500 மின்சார பேருந்துகளும் கொள்முதல் செய்யப்படும்.
  • பள்ளிகளில் மதிய சத்துணவு, பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், மடிக்கணினிகள், சீருடைகள், காலணிகள், பள்ளி புத்தகப்பைகள், கிரையான்கள், வண்ண பென்சில்கள், வடிவியல் பெட்டிகள் மற்றும் நிலவரைபடப் புத்தகங்கள், இலவசப் பேருந்து அட்டை மற்றும் விலையில்லா மிதிவண்டி வழங்குதல் போன்றவை தொடர்ந்து செயல்படுத்தப்படும். இந்தத் திட்டங்கள் தொடர்வதற்காக, 2020-21ம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் மொத்தம் ₹3,703.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்விச்சட்டம், 2009ன் படி, இதுவரை 5,61,111 குழந்தைகள் தனியார் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக, மொத்தம் ₹1,324.28 கோடி அரசால் தனியார் பள்ளிகளுக்கு திருப்பியளிக்கப்பட்டுள்ளது.
  • 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான அறிவியல் பாடத்திட்டத்தினை ஒரு பகுதியாக தகவல் தொழில்நுட்ப கல்வியை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்ெகாண்டுள்ளது. மேலும், 6029 அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைபள்ளிகளில் 530.13 கோடியில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவானது 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் தனிப்பாடமாக கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளிலும் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகப்படுத்தப்படும்
  • உயர்கல்வி படிக்கும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்விக்கட்டண சலுகை ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக, 2021-22ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உயர்கல்விக்காக மொத்தமாக 5,478.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ₹3,995 கோடியில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படுவதன் மூலம், 2021-22ம் கல்வியாண்டில் கூடுதலாக 1,650 மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021-22 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்காக ₹2,470.93 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறைக்கான ஒதுக்கீடு, 2020-21 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தில், 15,863.37 கோடியிலிருந்து 2020-21 திருத்த மதிப்பீடுகளில் 18,458.27 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒதுக்கீட்டை உயர்த்தி, 2021-22 ஆம் ஆண்டின் இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 19,420.54 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை 500லிருந்து 750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக, பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களிலிருந்து திரும்பி வந்தவர்கள் பதிவு செய்வதற்கான வலைதளங்களையும் உருவாக்கியுள்ளது. 2021-22 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்காக 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்ப்பதற்கு, சென்னை அருகிலுள்ள காவனூரில் நிதி தொழில்நுட்ப நகரத்தை, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம், தோராயமாக 260 ஏக்கரில் உருவாக்கி வருகின்றது. புதிய நிதி தொழில்நுட்ப கொள்கை இறுதி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம், நிதி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான உலகளவில் ஒரு மையமாக சென்னை உருவாக வழி வகுக்கும்.
  • தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கோவிட் தொற்றினால் மிகவும் பாதிப்படைந்துள்ளன. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவுவதற்கும், புத்துயிர் அளிப்பதற்கும், டாக்டர் சி.ரங்கராஜன் குழு விரிவான பரிந்துரைகளை அளித்துள்ளது. இப்பரிந்துரைகளின் மீது மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டாக்டர் சி.ரங்கராஜன் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்ெகாண்டு கடன் வழங்கும் நிறுவனமாக தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்படுத்துவதற்கும் அதன் செயல்பாடுகளை விரிவாக்குவதற்கும், கூடுதலாக 1000 கோடியை அரசு வழங்கும்.
  • மாற்றுத் திறனாளிகளுக்கான வாய்ப்புகள் மற்றும் வசதிகளை உறுதி செய்வதற்காக 1,700 கோடியில் RIGHTS என்ற சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்திற்கு, மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறையின் ஆய்வுக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், தற்போது உலக வங்கியின் பரிசீலனையில் உள்ளது.
  • அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம், வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 38.85 கோடி ஒதுக்கீட்டுடன், 2021-22 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
  • தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2021ம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவடைகிறது. மேம்படுத்தப்பட்ட சலுகைகளுடன் இத்திட்டம் நீட்டிக்கப்படும். தற்போதைய ஒட்டு மொத்த காப்பீட்டு தொகையான ₹4 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக அதிகரிக்கப்படும். குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கான காப்பீட்டு தொகை 7.5 லட்சத்தில் இருந்து ₹10 லட்சமாக உயர்த்தப்படும். மேலும், அரிய வகை நோய்கள் மற்றும் அசாதாரண நிகழ்வுகளுக்கு ₹20 லட்சம் மதிப்பில் காப்பீட்டு தொகை வழங்குவதற்கு ஒரு சிறப்பு ஒதுக்கீடு செய்யப்படும். பணமில்லா சிகிச்சை பெறுவதற்கான நடைமுறைகள் மேலும் ஒருங்கிணைக்கப்படும்.
  • உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை தொடர்ந்து தமிழ்நாடு 1,08,913 கோடி மொத்த முதலீட்டு மதிப்பில் 2,55,633 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் 166 திட்டங்களை ஈர்த்துள்ளது. கோவிட் தொற்றின் போது அனைத்திந்திய அளவில் அதிக எண்ணிக்கையில் முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. 1,69496 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் விதமாக 88,727 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கான 101 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முதல்வர் தலைமையின் கீழ் உயர்நிலைக்குழு 71,776 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் விதமாக 39,941 கோடி மதிப்பில் 62 முதலீட்டு திட்டங்களுக்கு விரைவில் அனுமதி வழங்கியுள்ளது.
  • தாம்பரம் வழியாக விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் நீட்டிப்பிற்கான விரிவான திட்ட அறிக்கையும், தாம்பரத்திலிருந்து வேளச்சேரி வரையிலான திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையும் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 6,683 கோடியில், 44 கிலோமீட்டர் நீளமுள்ள கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
  • சென்னையில் ரூ.61,843 கோடி மதிப்பீட்டில், 118.90 கி.மீட்டர் நீளத்தில் 3 வழித்தடங்கள் அடங்கிய, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.6,683 கோடி மதிப்பீட்டில் 44 கி.மீட்டர் நீளமுள்ள கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
  • போக்குவரத்துக் கழகத்துக்கு அடுத்த சில ஆண்டுகளில் 12 ஆயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இதில், 2 ஆயிரம் மின்சாரப் பேருந்துகளும் அடங்கும். முதற்கட்டமாக, ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.1,580 கோடி செலவில் 2,200 பிஎஸ்-6 பேருந்துகளும், 500 மின்சாரப் பேருந்துகளும் கொள்முதல் செய்யப்படும். இதற்காக, 2021-22-ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.623.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கரோனா தொற்று காரணமாக, 2021 ஜனவரி மாதம் வரையில் மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.3,717.36 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு ஏற்பட்டுவரும் கடுமையான நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக, 2020-21ம் ஆண்டில் திருத்த மதிப்பீடுகளில் மின்கட்டண மானியமாக ரூ.8,413.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
  • மேலும், 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால வரவு-செலவு திட்டத்தில், மானியக் கட்டணங்களுக்காக ரூ.8,834.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. உதய் திட்டத்தின் கீழ், 5 ஆண்டு காலத்தில் தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கடன்களை மானியமாக மாற்றுவதற்கான 5-வது மற்றும் இறுதிக் கட்ட மானியமாக ரூ.4,536 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
  • அத்துடன், தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு ஏற்பட்டு உள்ள இழப்புகளை ஈடு செய்யும் விதமாக, உதய் திட்டத்தின் வழிமுறைகள் படி, ரூ.7,217.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்காக, பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் இருந்து ரூ.37,130.30 கோடி மதிப்பில் கடன்களைப் பெறுவதற்கான உத்தரவாதத்தை அரசு வழங்கி உள்ளது.
துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு விவரங்கள்:
  • வேளாண்துறைக்கு ரூ.11,982 கோடி
  • சுகாதாரத் துறைக்கு ரூ.19,420 கோடி
  • நீதித் துறைக்கு ரூ.1,417 கோடி
  • உயர்க் கல்வித் துறைக்கு ரூ.5,478 கோடி
  • மின்சாரத் துறைக்கு ரூ.7,217 கோடி
  • காவல்துறைக்கு ரூ. 9,657 கோடி
  • தீயணைப்பு மீட்புத் துறைக்கு ரூ.4,436 கோடி
  • ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.22,218 கோடி
  • இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.229.33 கோடி
  • கைத்தறி துறைக்கு ரூ.1,224 கோடி
  • மீன்வளத்துறைக்கு ரூ.580 கோடி
  • உள்ளாட்சி துறைகளுக்கு ரூ.22,218 கோடி
  • நெடுஞ்சாலை துறைக்கு ரூ.18,750 கோடி
  • சமூக நலத்துறைக்கு ரூ.1,953 கோடி
  • ஆதி திராவிடர் நலத்துறைக்கு ரூ.1,932 கோடி
  • பள்ளி கல்விதுறைக்கு ரூ.34,181 கோடி
  • நீர்வளத் துறைக்கு ரூ.6,453 கோடி
  • காவல்துறையை நவீனமயமாக்க ரூ.100 கோடி
திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு
  • பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்துக்கு ரூ.5000 கோடி
  • கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.6,683 கோடி
  • தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தை வலுப்படுத்த ரூ.300 கோடி
  • சென்னை நகரை மேம்படுத்த ரூ.3,140 கோடி
  • கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.3,352 கோடி
  • பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.3,700 கோடி
  • மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.1,953 கோடி
  • புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.2,470 கோடி
  • அம்மா மினி கிளினிக் திட்டத்துக்கு ரூ.144 கோடி நிதி ஒதுக்கீடு
  • மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.688.48 கோடி
  • தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்படுத்த ரூ.300 கோடி
  • நகர்ப்புற வடிகால் திட்டத்துக்கு ரூ.1,450 கோடி
  • ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.2,350 கோடி
  • சென்னையை தனித்தன்மை வாய்ந்த நகரமாக மாற்ற ரூ.3,410 கோடி
  • குடிநீர் குழாய் இணைப்புகளுக்கு ரூ.3,016 கோடி
  • சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு ரூ.44.33 கோடி
  • மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் பணிகளுக்கு ரூ.1374 கோடி
  • சத்துணவு திட்டங்களுக்கு ரூ.1953.98 கோடி
  • அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.1,02,049 கோடி
  • தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துக்கு ரூ.200 கோடி
  • சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.300 கோடி
  • விவசாயிகளின் பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்காக 1,738.31 கோடி
  • l ஒட்டுமொத்தக் கடனை பொறுத்தவரை 2021- மார்ச் 31-ம் தேதி ரூ.4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடியே 54 லட்சமாகவும், 2022 மார்ச் 31-ம் தேதி ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்து 189 கோடியே 29 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. செலவினங்களை தக்கவைக்க அதிக கடன் வாங்க வேண்டி வரும். மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் கடன் விகிதம் 24.98 சதவீதம் அதாவது விதிமுறைக்கு உட்பட்டே இருக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel