12.69 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
- கரோனா தொற்று காலத்தில்தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிதியுதவி, நிவாரணப் பொருட்களை தமிழக அரசு வழங்கியது.
- அந்த வகையில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 2 முறைதலா ரூ.1,000, 15 கிலோ அரிசி, ஒரு கிலோ எண்ணெய், ஒரு கிலோ பருப்பு அடங்கிய சிறப்பு நிவாரணத் தொகுப்பும் வழங்கப்பட்டது.
- இந்நிலையில், கட்டுமானத் தொழிலாளர்கள் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், அவர்களுக்கு முதல்முறையாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
- அதன்படி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 5 லட்சத்து 94 ஆயிரத்து 147 ஆண் தொழிலாளர்களுக்கு வேட்டி, அங்கவஸ்திரம், 6 லட்சத்து 75 ஆயிரத்து 403 பெண் தொழிலாளர்களுக்கு புடவை, 2 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சிறுபருப்பு, 500 கிராம் எண்ணெய், 100 கிராம் நெய், ஒரு கிலோ வெல்லம், 5 கிராம் ஏலக்காய், தலா 25 கிராம் முந்திரி மற்றும் திராட்சை ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்க ரூ.94 கோடியே 40 லட்சம் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.
- வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகத்தின் நிகழ்ச்சியான வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு,வெளி நாடுகளில் வாழும் இந்தியர்களுடன் இணைப்பை ஏற்படுத்தும், அவர்களை ஈடுபடுத்தும் முக்கிய தளமாக விளங்குகிறது. தற்போதைய கொரோனா பெருந்தொற்றுக்கு இடையிலும், 16-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு இன்று நடத்தப்படுகிறது.
- மாநாட்டுக்கு முன் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூட்டங்களைப் போலவே, மெய்நிகர் முறையில் மாநாடும் நடத்தப்படும்.
- "தற்சார்பு இந்தியாவுக்கு பங்காற்றுதல்" என்பது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டின் மையக்கருவாக இருக்கும்.வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு மூன்று பிரிவுகளை கொண்டிருக்கும்.
உள்ளாட்சி அமைப்பு நடுவராக மாலிக் பெரோஸ்கான் பதவி ஏற்பு
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவராக முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் நியமிக்கப்படுவதாக தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை வெளியிட்டது.
- இதையடுத்து உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவராக மாலிக் பெரோஸ்கானுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியில் அவர் மூன்று ஆண்டுகள் பணியில் இருப்பார்.
அயோத்தி நகராட்சி நிர்வாகம் ஐ.ஐ.எம். உடன் ஒப்பந்தம்
- அயோத்தியை சர்வதேச சுற்றுலா தலமாக மாற்ற ஐ.ஐ.எம். எனப்படும் 'இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட்' உடன் நகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
- உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்தை முன்னிட்டு நகரை சர்வதேச சுற்றுலா மையமாக மாற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தொல்லியல் கள ஆய்வுகள், அகழாய்வுகள் மேற்கொள்ள ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு அரசாணை வெளியீடு
- தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சரின் அறிவிப்பினைச் செயல்படுத்தும் பொருட்டு, தமிழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு முறையான தொடர் தொல்லியல் கள ஆய்வுகள் மற்றும் அகழாய்வுகள் மேற்கொள்ள ஏதுவாக, ஆண்டுதோறும் தொடரும் செலவினமாக ஒதுக்கீடு செய்யப்படும் ரூ.2 கோடியினை ரூ.3 கோடியாக உயர்த்தி தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
ஐ.நா.,வின் மூன்று முக்கிய கமிட்டிகளுக்கு தலைமை வகிக்கும் இந்தியா
- இந்தியா கடந்த திங்களன்று ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் 8-வது முறையாக நிரந்தரமல்லாத உறுப்பினராக பொறுப்பேற்றது. பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் எழுப்புதல், வளரும் நாடுகளுக்காக பேசுவது, உலக அமைதி மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் மனிதனை மையமாக கொண்ட தீர்வுகள் ஆகியவற்றை இலக்காக வைத்து செயல்பட இருப்பதாக அறிவித்துள்ளது.தற்போது இந்தியா தலைமை வகிக்க உள்ள மூன்று கமிட்டிகளுமே முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
- தாலிபான் தடை குழு இந்தியாவுக்கு முன்னுரிமை வாய்ந்த ஒன்று. இது 1988 தடைக்குழு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் இந்த குழுவுக்கு தலைமை தாங்குவது பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்கள், ஆப்கானிஸ்தான் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை கவனிக்க உதவும்.லிபியா தடை குழுவும் ஐ.நா.,வின் முக்கியமான துணை அமைப்புகளில் ஒன்று.
- இது லிபியா மீதான இரு வழி ஆயுத வணிக தடை, சொத்து முடக்கம், பயணத் தடை, பெட்ரோலியத்தை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பொருளாதாரத் தடைகளை அமல்படுத்துகிறது.
- லிபியா மற்றும் அதன் அமைதி நடவடிக்கைகள் மீது சர்வதேச கவனம் குவிந்துள்ள நிலையில் இந்தியா அக்குழுவுக்கு தலைமை தாங்குகிறது.இறுதியாக பொருளாதார எதிர்ப்பு குழுவுக்கு 2022-ல் இந்தியா தலைமை வகிக்கும்.
- அது இந்தியா சுதந்திரம் பெற்ற 75-வது பவள விழா ஆண்டாகவும் அமைய இருப்பது தனிச்சிறப்பு. நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு 2001-ல் இந்த குழு அமைக்கப்பட்டது. முன்னதாக 2011 மற்றும் 2012 காலக்கட்டத்தில் இக்குழுவிற்கு இந்தியா தலைமை வகித்தது.