Friday, 8 January 2021

TNPSC 6th & 7th JANUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

உலகின் முதல் இரட்டை அடுக்கு பெட்டக ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

 • புதிய அட்டலி-புதிய கிஷன்கர்க் வரையிலான மின்சாரத்தால் இயங்கும் 1.5 கி.மீ நீள உலகின் முதல் இரட்டை அடுக்கு பெட்டக ரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 
 • இந்நிகழ்ச்சியில், ராஜஸ்தான், ஹரியாணா மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜோ பைடன் வெற்றிக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்

 • அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற அதிபா் தோதலில் ஜோ பைடன் மற்றும் துணை அதிபா் தோதலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதை முறைப்படி அறிவிப்பதற்கான நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது.
 • கீழவையான செனட் சபை மற்றும் மேலவையான பிரதிநிதிகள் சபையின் உறுப்பினா்கள் இதில் பங்கேற்றனா்.
 • மக்கள் பிரதிநிதிகளின் வாக்குகள் எண்ணப்பட்டு, தோதல் முடிவுகளை அதிகாரப்பூா்வமாக அறிவிப்பதில் ஜனநாயக கட்சி மற்றும் பெரும்பாலான குடியரசுக் கட்சி உறுப்பினா்கள் உறுதியாக இருந்தனா்.
 • அரிஸோனா மற்றும் பென்சில்வேனியா மாகாணங்களில் பதிவான வாக்குகள் குறித்து மட்டும் ஆட்சேபம் தெரிவிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
 • அந்த ஆட்சேபனைத் தீா்மானங்களின் மீது 2 மணி நேரம் விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், அந்த இரு தீா்மானங்களும் தோல்வியடைந்தன.
 • செனட் சபையில் அரிஸோனா தோதல் முடிவுகளை எதிா்க்கும் தீா்மானத்துக்கு எதிராக 93 உறுப்பினா்களும் ஆதரவாக 6 உறுப்பினா்களும் வாக்களித்தனா்.
 • பிரதிநிதிகள் சபையில் அந்தத் தீா்மானத்தை எதிா்த்து 303 உறுப்பினா்களும் ஆதரவாக 121 பேரும் வாக்களித்தனா்.
 • அதே போல், செனட் சபையில் பென்சில்வேனியா தோதல் முடிவுகளை எதிா்க்கும் தீா்மானத்துக்கு எதிராக 92 உறுப்பினா்களும் ஆதரவாக 7 உறுப்பினா்களும் வாக்களித்தனா்.
 • பிரதிநிதிகள் சபையில் அந்தத் தீா்மானத்தை எதிா்த்து 282 உறுப்பினா்களும் ஆதரவாக 138 பேரும் வாக்களித்தனா்.
 • இந்திய அமெரிக்க எம்.பிக்களான ரோஹித் கன்னா, அமரீஷ் பேரா, ராஜா கிருஷ்ணமூா்த்தி, பிரமீளா ஜெயபால் ஆகியோா் இந்தத் தீா்மானங்களை எதிா்த்து வாக்களித்தனா்.
 • இறுதியில், அதிபா் தோதலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை நாடாளுமன்றம் அதிகாரப்பூா்வமாக உறுதி செய்தது.

உலகின் முதல் பணக்காரர் ஆனார் எலான் மஸ்க்

 • மின்னல் வேக, 'ஹைப்பர் லுாப்' பயணம், செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் முயற்சி, அதிவேக எலக்ட்ரிக் சூப்பர் கார்களை தயாரிப்பது என, கனவு திட்டங்களின் கதாநாயகனாக திகழ்கிறார். 
 • எலான் மஸ்க். கடந்த சில வாரங்களாக, உலக பணக்காரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்திலிருந்த அவரது சொத்து மதிப்பு, நியூயார்க்கில் 188.5 பில்லியன் டாலராக இருந்தது.
 • இது அமேசான் நிறுவனர் ஜெப் பிசோசாவை விட, 1.5 பில்லியன் டாலர் அதிகமாக சேர்த்துள்ளார். கடந்த 2017 அக்டோபர் மாதம் முதல், உலக பணக்காரர் பட்டியலில், தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தவர் பிசோசா.

கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் ரூ. 1,200 கோடி திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

 • தமிழகத்தின் முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாக என்.எச். 209 உள்ளது. 456 கி.மீ., கொண்ட இந்த சாலையில் கோவை - சத்தி நெடுஞ்சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
 • கடந்த, 2019ல் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியார் நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, தனியார் நிறுவனம் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்தது. கோவில்பாளையத்துக்கு, மேற்கே 2 கி.மீ., தொலைவில் துவங்கி, அன்னுார், புளியம்பட்டி, சத்தி, பண்ணாரி வழியாக, கர்நாடக எல்லை வரை 98 கி.மீ.,க்கு புதிய சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
 • இதில், 60 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்கப்பட உள்ளது. சில இடங்களில் ஏற்கனவே உள்ள சாலையை அகலப்படுத்தியும், பெரும்பாலான இடங்களில் புதிய புறவழிச் சாலை அமைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
 • கோவை, ஈரோடு மாவட்டத்தில் இதற்காக, 731 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது. இதில் குரும்பபாளையம், அன்னுார், புளியம்பட்டி, சத்தி ஆகிய நான்கு இடங்களில் புறவழிச் சாலை அமைய உள்ளது. நிலம் கையகப்படுத்த 620 கோடி ரூபாய் செலவாகும்.
 • மொத்த மதிப்பீடு, 1,200 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.விரிவான திட்ட அறிக்கை, கடந்த மார்ச் மாதம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிலையில், மத்திய அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 

பிரத்யேக சரக்கு ரயில் தடச் சேவை: துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

 • ஹரியானா - ராஜஸ்தான் வரை, கிழக்கு சரக்கு ரயில் தடச் சேவை திட்டத்தின் கீழ், 'நியூ ரிவாரி - நியூ மடார்' ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே, 306 கி.மீ., துாரத்திற்கு, சரக்கு ரயில் போக்குவரத்து தடம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, இந்த பிரத்யேக சரக்கு ரயில் தடத்தை, நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் -7.7% ஆக சரியும்
 • கொரோனா ஊரடங்கால் நாட்டின் தொழில்துறைகள் அனைத்தும் முடங்கின. இதனால் நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத சரிவை சந்தித்தது. பொருளாதாரம் -23 சதவீதத்துக்கு மேல் சரிந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 • அதாவது நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதாரம் -23.9 சதவீதம், 2ம் காலாண்டில் -7.5 சதவீதம் சரிந்திருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிப்புகளால் பொருளாதாரம் ஓரளவு மீளத் தொடங்கியதாக கூறப்பட்டாலும், தொழில்துறைகள் பழைய நிலைக்கு வர ஓராண்டுக்கு மேல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 • இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி தொடர்பான முதலாவது முன்கூட்டிய மதிப்பீட்டை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதில், விவசாயம் தவிர அனைத்து துறைகளிலும் சரிவு காணப்படுகிறது. 
 • கடந்த 2011-12 நிதியாண்டின் அடிப்படையில் கணக்கிடும்போது, நடப்பு 2020-21 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 134.4 லட்சம் கோடியாக இருக்கும். முந்தைய ஆண்டில் இது 145.66 லட்சம் கோடியாக இருந்தது. 
 • இதன்படி நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) -7.7 சதவீதமாக இருக்கும். முந்தைய நிதியாண்டில் இது 4.2 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்தது. கொரோனா ஊரடங்குதான் இதற்கு முக்கிய காரணம்.
 • அதோடு நடப்பு நிதியாண்டில் உற்பத்தி துறை -9.4 சதவீதமாக சரியும். கடந்த நிதியாண்டில் இது 0.03 சதவீத வளர்ச்சியுடன் இருந்தது வர்த்தகம், ஓட்டல்கள், தொலைத்தொடர்பு சேவைகள், சுரங்கம் சார்ந்த துறைகளில் குறிப்பிடத்தக்க சரிவு காணப்படும். 
 • விவசாய துறை மட்டுமே இதில் விதிவிலக்காக அமைந்துள்ளது. இந்த துறை நடப்பு நிதியாண்டில் 3.4 சதவீத வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமானம் சுத்தம் செய்யும் ரோபோ: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிமுகம்
 • ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் டில்லி விமான நிலையத்தில் விமான உட்புறங்களை சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் செய்வதற்கான ரோபோ தொழில்நுட்பத்தை இன்று தொடங்கியுள்ளது. 
 • இந்தியாவில் முதல் முறையாக தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த ஐசாட்ஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. யு.வி.-சி கிருமிநாசினி அமைப்பு உலகளவில் கிருமிநாசினியின் மிகவும் பயனுள்ள வடிவங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
காஷ்மீர் தொழில் வளர்ச்சிக்கு ரூ.28,400 கோடி திட்டம்
 • காஷ்மீரில், முதன் முறையாக, குக்கிராமம் முதல் நகர்ப்புறம் வரை தொழில், வேலைவாய்ப்பு, முதலீடு ஆகியவற்றை ஊக்குவிக்க, 28 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் மதிப்பிலான, தொழில் வளர்ச்சி திட்டத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
 • இதன் வாயிலாக உள்ளூரைச் சேர்ந்த, 4.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அத்துடன், இந்த பகுதியில், சமத்துவ சமூக, பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அரசு வேலைகளை தாண்டி, தயாரிப்பு மற்றும் சேவைத் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
 • இத்திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில், தயாரிப்பு தொழில் துவங்குவோருக்கு, இயந்திர தளவாட முதலீடுகளில், 50 சதவீதம்; நகர்ப்புறங்களில், 30 சதவீதம் மானியம் வழங்கப்படும். 
உலக வர்த்தக அமைப்பு இந்தியாவுக்கு பாராட்டு
 • நேரடி துறைமுக வினியோகம் மற்றும் நேரடி துறைமுக நுழைவு வசதிகள், இடர் மேலாண்மை அமைப்பு, சுங்க நுழைவை மின்னணுமயமாக்கியது, ஒற்றைச் சாளர வசதிகள் என பல வர்த்தக வசதிகளை, 2015 முதல், இந்தியா அறிமுகம் செய்து வந்துள்ளது.
 • மேலும், இந்தியாவின் வர்த்தக கொள்கைகளில் பெரிய மாற்றங்கள் எதுவுமின்றி, அவை அப்படியே தொடர்ந்து வருகின்றன.
 • உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி ஆகிய இரண்டையும் ஊக்குவிக்கும் வகையில், நேரடி மானியங்கள், விலை ஆதரவு திட்டங்கள், கட்டண சலுகைகள், விருப்பமான வட்டி விகிதங்கள் என, பல சலுகைகளை தொடர்ந்து அளித்து வருகிறது.வளர்ந்த நாடுகள், இந்தியாவில் வேளாண் துறையில் அதிக தாராளமயமாக்கத்தை விரும்புகின்றன.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a comment