என்.ஆர்.ஐ.,க்களுக்கு தபால் ஓட்டு வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல்
- நம் நாட்டில் நடக்கும் தேர்தல்களின்போது, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், தபால் ஓட்டுகள் அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- அதேபோல், 'வெளிநாடுகளில் வேலை பார்க்கும், படிக்கும் மாணவர்கள், தங்கள் மாநிலத்தில் நடக்கும் தேர்தலில், மின்னணு முறை வசதியை பயன்படுத்தி, தபால் ஓட்டுகள் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.
- என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடு வாழ் இந்தியர்கள், தேர்தல்களில், மின்னணு முறையில் தபால் ஓட்டுகள் பதிவு செய்ய அனுமதிக்கும், தேர்தல் கமிஷனின் பரிந்துரைக்கு, வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
கத்தாா் மீதான வா்த்தகத் தடைகள் நீக்கம் சவூதி அரேபியா அறிவிப்பு
- எண்ணெய் வளம் மிக்க மிகவும் சிறிய வவளைகுடா நாடான கத்தாா், ஈரான், துருக்கி உள்ளிட்ட நாடுகளுடன் நெருக்கமான உறவைப் பேணி வருகிறது. இதன் மூலம், சில பயங்கரவாத அமைப்புகளுக்கு கத்தாா் ஆதரவு அளிப்பதாக சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
- இதனால் கத்தாருக்கும் அந்த நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், கத்தாா் மீது வா்த்தகத் தடை விதிப்பதாக சவூதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகள் கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவித்தன.
- பண்ணைப் பொருள்கள், கட்டுமானப் பொருள்கள் மற்றும் பிற பொருள்களை இறக்குமதி செய்வதற்காக கத்தாா் பெரிதும் நம்பியுள்ள எல்லையை சவூதி அரேபியா மூடியது
- கத்தாரைச் சோந்த புனிதப் பயணிகள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு மட்டும் சவூதி அரேபியா எல்லைகளைத் திறந்து வந்தது. இந்த நிலையில், இரு தரப்புக்கும் நட்பு நாடான அமெரிக்கா, இந்தப் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வர விரும்பியது.
- அதற்காக, கத்தாா் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுடன் டிரம்ப் தலைமையிலான அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வந்தது. தற்போது டிரம்ப்பின் பதவிக் காலம் விரைவில் முடிவடையவுள்ள சூழலில், இந்த சமாதான முயற்சி மேலும் தீவிரப்படுத்தப்பட்டது.
- இந்த நிலையில், கத்தாா் மீதான வா்த்தகத் தடை நீக்கப்பட்டு, அந்த நாட்டுடான எல்லை திறக்கப்படும் என்று சவூதி அரேபிய அறிவித்துள்ளது.
- யேமன் போா் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் புதிதாக அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஜோ பைடன் தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ள, கத்தாருடனான நட்புறவு விவகாரத்தை சவூதி அரேபியா பயன்படுத்திக் கொள்ளும்.
குழாய் வழியாக 'காஸ்'வினியோக திட்டம் துவக்கினார் மோடி
- 'ஒரே நாடு; ஒரே எரிவாயு' கட்டமைப்பு திட்டத்தின் கீழ், 3,000 கோடி ரூபாய் செலவில், கேரள மாநிலம் கொச்சியிலிருந்து, கர்நாடக மாநிலம் மங்களூருக்கு, 450 கி.மீ., துாரத்துக்கு, குழாய் வழியாக, 'காஸ்' எனப்படும், இயற்கை எரிவாயுவை வினியோகிக்கும் திட்டத்தை, 'கெயில்' நிறுவனம் செயல்படுத்தியுள்ளது.
- கொச்சியிலிருந்து, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணுார் மற்றும் காசர்கோடு மாவட்டங்களை கடந்து செல்லும்.
- இத்திட்டத்தின் துவக்க விழா, 2009ம் ஆண்டில் நடந்தது. எனினும், 2014ம் ஆண்டில், மோடி பிரதமரான பின் தான் வேகமெடுத்தது. பாதுகாப்பாக செயல்படுத்துவது, வர்த்தக ரீதியாக வெற்றி பெற முடியமா என்ற சந்தேகம், கூடுதல் விலை கொடுத்து, நிலம் கொள்முதல் உட்பட பல்வேறு பிரச்னைகள், எதிர்ப்புகளை கடந்து, இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
- கெயில் நிறுவனத்தின் கொச்சி - மங்களூரு குழாய் வழி இயற்கை எரிவாயு திட்டம் அர்ப்பணிக்கப்பட்டிருப்பது, ஒரே நாடு; ஒரே எரிவாயு தொகுப்பு என்ற குறிக்கோளை நோக்கிய பயணத்தின் ஒரு பகுதி.
- எரிசக்தி ஆதாரங்களை வலுப்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. குஜராத்தில், உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
- கர்நாடகா, கேரளா போன்ற கடலோர மாநிலங்களிலும், பிற தென் மாநிலங்களிலும், நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்த, விரிவான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்சார்பு இந்தியாவிற்கான முக்கிய ஆதாரமாக, நீலப் பொருளாதாரம் அமையும்.
மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்புக்கு 'பிஎம்கேர்' நிதியில் ஒதுக்கீடு
- கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தபோது, அவசர மருத்துவ உதவி திட்டங்களுக்கு உதவுவதற்காக, 'பிஎம்கேர்' என்ற நிதித் தொகுப்பு உருவாக்கப்பட்டது. பிரதமர் தலைமையிலான இந்த நிதி அறக்கட்டளையில், ராணுவ, உள்துறை மற்றும் நிதி அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
- நாட்டின், 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 162 இடங்களில், மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பு நிலையங்கள் அமைக்க, பிஎம்கேர் நிதியில் இருந்து, 201.58 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
- இந்த வசதி அமைய உள்ள, அரசு மருத்துவமனைகள் உள்ளிட்டவை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன.மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழுள்ள, மத்திய மருந்து விநியோக அமைப்பின் மூலம், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.கொரோனா வைரஸ் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளோருக்கு, ஆக்சிஜன் தேவைப்படுகிறது.
- அதுபோல, பல தீவிர நோயாளிகளுக்கும், ஆக்சிஜன் தேவை அதிகமாக உள்ளது. தடையில்லாமல், மருத்துவ ஆக்சிஜன் கிடைக்கும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.