Type Here to Get Search Results !

TNPSC GROUP 1 PRELIMINARY EXAM 2021 ANSWER KEY RELEASED / குரூப்-1 தேர்வு 2021 உத்தேச விடைகள் வெளியீடு

  • தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் அடங்கிய 66 காலி பணியிடத்துக்கு முதல்நிலை தேர்வை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. 
  • இத்தேர்வை 1.31 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தனது இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் குரூப் 1 தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ-ஆன்சர்) வெளியிட்டுள்ளது. 
  • வினாத்தாளின் வினா எண்கள் 38, 80, 107, 139 ஆகியவற்றை தவிர, ஒவ்வொரு வினாவிற்கும், கொடுக்கப்பட்ட விடைகளுள் சரியான விடை குறியீடு மூலம் குறித்துக் காட்டப்பட்டுள்ளது.
  • தேர்வின்போது தேர்வர்களுக்கு எவ்வகையான குறியீட்டை கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போது தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பில் உள்ள கேள்விகளின் வரிசை எண் படியே தேர்வர்கள் தங்களது மறுப்பினை தெரிவிக்க வேண்டும்.
  • பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள 38, 80, 107, 139 ஆகிய 4 வினாக்களை தவிர இதர வினாக்களுக்கான விடைகளுக்கு தேர்வர்கள் தங்களது மறுப்பினை தெரிவிக்கலாம். வினா எண்கள் 38, 80, 107, 139 ஆகிய 4 வினாக்களை வல்லுநர் குழுவிற்கு பரிந்துரை செய்ய தேர்வாணையம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது. 
  • இருப்பினும், தேர்வர்கள் அந்த 4 வினாக்களுக்கும் அவர்களது கருத்துகளை தகுந்த ஆதாரத்துடன் தெரிவிக்கலாம். ஆதாரத்துடன் பெறப்படும் மறுப்புகள், கருத்துகள் ஆகியவை வல்லுநர் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டு விடைகள் இறுதி செய்யப்படும். 
  • உத்தேச விடைகளுக்கான மறுப்புகள், கருத்துகள் ஆகியவற்றை ஏழு நாட்களுக்குள் www.tnpsc.gov.in என்ற இணைய வழியில் மட்டுமே மூலமாக தெரிவிக்க வேண்டும். அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது. வருகிற 14ம் தேதி மாலை 5.45 மணிக்கு பிறகு இணையவழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட மாட்டாது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel