முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்: புதிய தொழில் கொள்கைக்கு அனுமதி; ரூ.52,257 கோடி முதலீட்டில் 34 புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல்
- முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.52,257 கோடியில் 34 புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதுடன், 'தமிழ்நாடு தொழில் கொள்கை - 2021' வெளியிடவும் அனுமதியளிக்கப்பட்டது.
- வரும் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இதற்கிடையில், ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் வரும் பிப்ரவரி 2-ம் தேதி தொடங்குகிறது.
- இந்நிலையில், முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், இடைக்கால பட்ஜெட் மற்றும் ஆளுநர் உரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- அத்துடன், பொருளாதாரத்தை சீரமைக்க அமைக்கப்பட்ட ரங்கராஜன் குழுவின் பரிந்துரைகள், கரோனா காரணமாக வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
- டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ரூ.5,763 கோடி முதலீட்டில் 18,250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க கிருஷ்ணகிரியில் கைபேசி உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டம்.
- தைவானின் பெகாட்ரான் கார்ப்பரேஷன் ரூ.1,100 கோடி முதலீட்டில் 14,079 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் செங்கல்பட்டில் கைபேசிகள் உற்பத்தி திட்டம்.
- தைவான் நாட்டின் லக்ஸ்ஷேர் நிறுவனம் ரூ.745 கோடியில் 4,000 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் காஞ்சிபுரம், பெரும்புதூரில் மின்னணு வன்பொருள் உற்பத்தி திட்டம்.
- சன் எடிசன் நிறுவனம் ரூ.4,629 கோடி முதலீட்டில் 5,397 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் சூரிய ஒளி மின்னணுத் தொகுதி உற்பத்தி திட்டம்.
- ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சார்பில் ரூ.2,354 கோடியில் 2,182 பேருக்கு வேலை அளிக்க கிருஷ்ணகிரி பர்கூர் சிப்காட் தொழிற்பூங்காவில் மின் வாகனங்கள், மின்னேற்றிகள் உற்பத்தி திட்டம்.
- ஜெர்மனியை சேர்ந்த எய்க்காப் விண்டு நிறுவனம் சார்பில் ரூ.621 கோடியில் 319 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் சென்னை அருகே காற்றாலை மின்சக்தி திட்டம்.
- ஜெர்மனியின் பிஏஎஸ்எப் நிறுவனம் சார்பில் ரூ.345 கோடியில் 235 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் செங்கல்பட்டில் மோட்டார் வாகன உமிழ்வு வினையூக்கிகள் உற்பத்தி திட்டம்.
- லூகாஸ் டிவிஎஸ் சார்பில் ரூ.2,500 கோடி முதலீட்டில் 3,500 பேருக்கு வேலை அளிக்கும் விதமாக திருவள்ளூரில் லித்தியம் அயன் மின்னேற்றிகள் உற்பத்தி திட்டம்.
- ஜப்பானை சேர்ந்த டெய்செல் கார்ப்பரேஷன், காற்றுப் பைகளில் காற்றடைக்கும் கருவி உற்பத்தி திட்டத்தை, செங்கல்பட்டு மாவட்டம் ஒன் ஹப் சென்னை தொழிற்பூங்காவில் ரூ.358 கோடி முதலீட்டில் 180 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் நிறுவுகிறது.
- கொரியாவின் எல்.எஸ்.ஆட்டோமோட்டிவ் நிறுவனம் சார்பில் ரூ.250 கோடியில் 200 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் திருவள்ளூரில் வாகன ஸ்விட்ச்கள் உற்பத்தி திட்டம்.
- அமெரிக்காவின் ஆட்டோலிவ் கார்ப்பரேஷன் சார்பில் ரூ.100 கோடியில் 400 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் திருவண்ணாமலை சிப்காட் செய்யாறு தொழிற்பூங்காவில் வாகன பயணிகளின் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி திட்டம்.
- டேட்டா பேட்டன்ஸ் நிறுவனம் ரூ.303 கோடியில், 703 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் தமிழக பாதுகாப்பு தொழில் பெருவழிச்சாலை, சென்னை முனையத்தில், பாதுகாப்பு, விண்வெளி தொடர்பான தயாரிப்புகள் திட்டம்.
சுற்றுச்சூழல், நீர் ஆதாரங்களை கண்டறியும் செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு மையம் திறப்பு: இஸ்ரோ தலைவர் சிவன் தொடங்கி வைத்தார்
- ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆதாரங்களை கண்டறிய உதவும் வகையில் செயற்கைக்கோள் தரைதள கட்டுப்பாட்டு மையத்தை இஸ்ரோ தலைவர் கே.சிவன் இணைய வழியாக தொடங்கி வைத்தார்.
- கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட யூனிட்டி சாட் ஜேஐடி சாட் என பெயரிடப்பட்டுள்ள செயற்கைக்கோள் ராக்கெட் மூலம் ஹரிகோட்டாவில் இருந்து வரும் பிப்ரவரி 28ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- இதை தொடர்ந்து, புதிய செயற்கைக்கோள் ஒன்றை நாங்கள் உருவாக்கினோம். எங்கள் கல்லூரியில் உள்ள பல்வேறு துறை சார்ந்த 12 மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து, நானோ செயற்கைக்கோளை உருவாக்கினோம்.
- எங்கள் செயற்கைக்கோள் 460 கிராம் மட்டுமே எடை கொண்டது. முக்கியமான இணையதள அமைப்புகளை கட்டுப்படுத்துவதற்கு இந்த செயற்கைக்கோளை பயன்படுத்தலாம்.
- உதாரணமாக, இணையம் சார்ந்த விஷயங்களையும், செயல்பாடுகளையும் கண்காணிக்க இந்த செயற்கைக்கோளை பயன்படுத்தலாம். இதற்காக தரைதள கட்டுப்பாட்டு மையம் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
- டாக்டர் கல்பனா சால்வா நானோ செயற்கைக்கோள் ஆராய்ச்சி நிலையம் என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வகம் மூலம் செயற்கைக்கோள் தரவை கண்காணிக்கப்பட உள்ளது என்றார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு ரூ. 1,751 கோடி ஒதுக்கீடு
- நாட்டில் கடந்த தென்மேற்கு பருவமழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை படையின் நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- தேசிய பேரிடர் மேலாண்மை படையின் நிதியிலிருந்து, 2020ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு ரூ.
- 1,751.05 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு உயர்நிலைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் அசாம் மாநிலத்திற்கு ரூ. 437.15 கோடி, அருணாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.75.86 கோடி, ஒடிசாவிற்கு ரூ. 320.94 கோடி, தெலங்கானாவிற்கு ரூ. 245.96 கோடி மற்றும் உத்தரப் பிரதேசத்திற்கு ரூ. 386.06 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.