சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய நீதிபதியை வாபஸ் பெற்ற உச்சநீதிமன்றம்
- மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையின் நீதிபதியாக இருந்து வருபவர் புஷ்பா கணேடிவாலா. இவர் கடந்த 2019 -ம் ஆண்டு பிப்ரவரி 8 -ம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.
- போக்சோ வழக்கு ஒன்றில் அண்மையில் இவர் ஒரு தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அது என்னவெனில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 12 வயது சிறுமியின் உடலை சீண்டி, இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் நீதிபதி புஷ்பா முன்னிலையில் நடைபெற்றது.
- இந்த வழக்கில் கடந்த 19 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி புஷ்பா, குற்றம் சாட்டப்பட்ட நபர் சிறுமியின் ஆடைக்கு மேலே உடலை சீண்டினால், அது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையான போக்சோ சட்டத்தின்கீழ் குற்றமாகாது என சர்ச்சை தீர்ப்பு வழங்கினார்.
- மேலும், குற்றவாளிக்கும் தண்டனையை குறைத்து தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை கண்டு நாடே அதிர்ந்தது. இந்த தீர்ப்புக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
- ஜனவரி 20 -ம் தேதி இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே மற்றும் என்.வி.ரமணா மற்றும் ரோஹிண்டன் ஃபாலி நரிமன் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட கொலீஜியம், நீதிபதி புஷ்பா கணேடிவாலாவை நிரந்தர நீதிபதியாக மாற்ற மத்திய அரசுக்குபரிந்துரை செய்திருந்தனர்.
- இந்நிலையில், இந்த சர்ச்சைக்குரிய தீர்ப்பை அடுத்து அந்த பரிந்துரையை உச்ச நீதிமன்ற கொலீஜியம் திரும்ப பெற்றுள்ளது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரானார் ஜெய் ஷா
- அமித் ஷா மகனும் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளருமான ஜெய் ஷா ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
- ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடக்கும் இப்பதவிக்கான தேர்வில் இம்முறை ஜெய் ஷா போட்டியின்றி தேர்வாகி உள்ளார்.
- வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான நஜ்முல் ஹசன் பாபோனை, இதுவரை அப்பதவியில் இருந்து வந்தார்.