உலகின் வலுவான பிராண்டுகள் 5வது இடத்தில், 'ஜியோ'
- 'பிராண்டு பைனான்ஸ்' நிறுவனம், உலகளவிலான, 500 வலுவான பிராண்டுகளின் பட்டியலை தொகுத்து வழங்கி உள்ளது. துவங்கிய நான்கு ஆண்டுகளில், ஜியோ தன்னை வலுவாக நிலை நிறுத்தி உள்ளதாகவும், உலகின் மூன்றாவது மிகப் பெரிய மொபல் நெட்வொர்க் நிறுவனமாகவும், 40 கோடி வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாகவும் அது வளர்ச்சி பெற்றிருப்பதாக, பிராண்டு பைனான்ஸ் தெரிவித்துள்ளது.
- மேலும், சகாயமான கட்டண திட்டங்களுடன், லட்சக்கணக்கானவர்களுக்கு, 4ஜி சேவையை வழங்கி, இந்தியர்களை, இன்டர்நெட் பயன்பாட்டாளர்களாக மாற்றியிருக்கிறது, ஜியோ என்றும் தெரிவித்துள்ளது.
- இந்த பட்டியலில், முதலிடத்தில், சீனாவை சேர்ந்த மொபைல் செயலியான, 'விசாட்' உள்ளது. வாகன தயாரிப்பு நிறுவனமான, 'பெராரி' இரண்டாவது இடத்தையும்; ரஷ்ய வங்கியான, 'ஸ்பெர்' மூன்றாவது இடத்தையும்; கோக கோலா, நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.
'நம்ம சென்னை' சுயப்பட மேடை முதல்வா் திறந்து வைத்தாா்
- சென்னையில் உள்ளூா் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாக மெரீனா கடற்கரை உள்ளது. இந்தக் கடற்கரை அதிக அளவில் இளம் தலைமுறையினரை கவா்ந்து வருகிறது.
- இன்றைய இளைய தலைமுறையினா் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்துவதிலும், அதில் சுயப்படம் (செல்ஃபி) எடுப்பதிலும் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.
- இவா்களின் ஆா்வத்தைப் பூா்த்தி செய்யும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில், சென்னையின் அடையாளமாகவும் இளைஞா்களைக் கவரும் வகையில் ஓா் இடத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது.
- அதன் அடிப்படையில் ரூ.24 லட்சம் செலவில் மெரீனா கடற்கரையில், ராணி மேரி கல்லூரிக்கு எதிரே 'நம்ம சென்னை' சுயப்பட மேடை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றன. தற்போது இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளன.
- இந்நிலையில், சுயப்பட மேடையை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை திறந்து வைத்தாா். பெருநகரங்களான புதுதில்லி, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ள சிற்பங்களின் தொடா்ச்சியாக சென்னையிலும் தற்போது 'நம்ம சென்னை' என்னும் அடையாள சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முன் பொதுமக்கள் சுயப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
- அதோடு, மாநகராட்சியின் சீா்மிகு திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட எலெக்ட்ரிக் மிதிவண்டி திட்டத்தையும் முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா். இந்தத் திட்டத்தின் மூலம், சென்னையின் பல்வேறு இடங்களில் கூடுதலாக 1000 எலக்ட்ரிக் மிதிவண்டிகள் கொண்டு வரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெப்கோ வங்கியின் நிா்வாக இயக்குநருக்கு சிறந்த பெண் தலைவருக்கான விருது
- தேசிய கூட்டுறவு வங்கிகளின் உச்சிமாநாடு ஜனவரி 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில், ரெப்கோ வங்கிக்கு மூன்று பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்பட்டது. அதன்படி, ரெப்கோ வங்கியின் நிா்வாக இயக்குநா் ஆா்.எஸ். இஸபெல்லாவுக்கு சிறந்த பெண் தலைவருக்கான விருது கிடைத்துள்ளது.
- இது தவிர, சிறந்த டிஜிட்டல் வங்கி மற்றும் மோசடிகளை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த முறையில் முன்முயற்சிகளை மேற்கொண்டது ஆகிய பிரிவுகளின் கீழ் மேலும் இரண்டு விருதுகளை ரெப்கோ வங்கி பெற்றுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக பொருளாதார அமைப்பின் டாவோஸ் மாநாடு 2021
- கடந்த 12 நாட்களில், இந்தியா 2.3 மில்லியனுக்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக பொருளாதார அமைப்பின் டாவோஸ் மாநாடு கடந்த 24-ம் தேதி தொடங்கியது. இதில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.
- '4வது தொழில் புரட்சி- மனிதகுலத்தின் நன்மைக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல்' என்ற தலைப்பில் காணொலி காட்சி வழியாக உரையாற்றினார். உலகம் முழுவதும் 400க்கும் அதிகமான மிகப்பெரிய தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு, சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடக்கிறது. இந்த மாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 25ம் தேதி உரையாற்றினார்.
- இந்நிலையில், காணொலி காட்சி வழியாக பேசிய பிரதமர் மோடி; தற்போது, இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் வந்துள்ளன. இந்தியாவில் இருந்து இன்னும் சில தடுப்பூசிகள் வர உள்ளதை உலக பொருளாதார மையத்திற்கு தெரியவந்துள்ளது.
- இந்த கடுமையான நேரத்தில், ஆரம்பம் முதலே, சர்வதேச கடமையை இந்தியா கையில் எடுத்து கொண்டது. பெரும்பாலான நாடுகள் மூடப்பட்ட நிலையில், ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட குடிமக்களை அழைத்து வந்துள்ளோம்.
- 150 நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை அனுப்பி வைத்துள்ளோம். கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்து, பல நாடுகளில் லட்சகணக்கான உயிர்களை இந்தியா காத்துள்ளது.
- நாட்டில் கடந்த 12 நாட்களில், இந்தியா 2.3 மில்லியனுக்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் டாவோஸ் நிகழ்ச்சியில் உரையாற்றி வரும் பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த சில மாதங்களில், 300 மில்லியன் முதியவர்கள் மற்றும் நோய்க உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான எங்கள் இலக்கை அடைவோம் என்றார்.
- அச்சங்களுக்கிடையில், 1.3 பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் சார்பாக உலகத்தின் மீதான நம்பிக்கை, நேர்மறை மற்றும் நம்பிக்கையின் செய்தியுடன் நான் உங்கள் முன் வந்துள்ளேன்.
- நேரடி பணப்பரிமாற்ற திட்டம் மூலம் 760 மில்லியன் மக்கள் இந்தியாவில் பயன்பெற்றுள்ளனர். பொது மக்களின் பங்களிப்பு மூலம், கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் உருப்பெற்றது.
- கொரோனா காலகட்டத்தில் அனைத்து இடையூறுகள் மற்றும் பிரச்னைகளை இந்தியா திறம்பட சமாளித்தது. இந்தியா பெறுகின்ற ஒவ்வொரு வெற்றியும், உலகம் வெற்றி பெற உதவியாக இருக்கும் என கூறினார்.