Type Here to Get Search Results !

TNPSC 26th JANUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை விதித்தது மத்திய அரசு

 • சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லைப்பிரச்சினை காரணமாக, இந்த செயலிகளுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய அரசு தற்காலிக தடைவிதித்தது. 
 • அதன் பிறகு தடைசெய்யப்பட்ட செயலிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் பயனாளர்களின் தகவல்கள் எப்படி சேகரிக்கப்படுகின்றன என்ற விவரங்களை அரசு கேட்டிருந்தது. இதுதொடர்பாக அந்நிறுவனங்கள் வழங்கிய அறிக்கைகள் திருப்திகரமாக இல்லை என அரசு நோட்டீஸ் பிறப்பித்தது.
 • இதன் காரணமாக 59 சீன செயலிகளும் நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டவையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின அணிவகுப்பு: முதல்முறையாக 2 பெண் பைலட்கள் பங்கேற்பு

 • குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் நமது ராணுவ பலத்தை விளக்கும் வகையில் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் முதல்முறையாக விமானப்படையைச் சேர்ந்த பாவனா காந்த், சுவாதி ரத்தோர் ஆகிய 2 பெண் பைலட்கள் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர். 
 • பாவனா காந்த் அணிவகுத்து வந்த வாகனத்தில் போர் விமானத்தின் மாதிரி வடிவம் இடம் பெற்றிருந்தது. பாவனா காந்த் 2016-ம்ஆண்டில் விமானப்படையில் அவனி சதுர்வேதி, மோகனா சிங்ஆகியோருடன் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்றார்.
 • 2019- மே மாதத்தில் போர் விமானத்தில் பகல்நேர தாக்குதல்களில் ஈடுபடத் தகுதியான பெண் விமானியாக தகுதி பெற்றார். பாவனா காந்த் மிக் 21, சுகோய் ரக போர் விமானங்களை இயக்குவதில் திறமைவாய்ந்தவர். தற்போது ராஜஸ்தானில் உள்ள விமானப்படை தளத்தில் பணியாற்றி வருகிறார்.
 • மற்றொரு பெண் விமானி சுவாதி ரத்தோர், குடியரசு தின அணிவகுப்பில் 'ஃப்ளைபாஸ்ட்' எனப்படும் அதிவேக விமானங்களுக்கு தலைமை தாங்கும் முதல்பெண் விமானி என்ற பெருமையை பெற்றார். நான்கு ஹெலிகாப்டர்களை வழிநடத்தும் வகையில் எம்ஐ 17 வி5 ரக ஹெலிகாப்டரில் சுவாதி ரத்தோர் பறந்தார். அப்போது, பார்வையாளர்கள் கைதட்டி தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
சிறை சுற்றுலா மஹா., முதல்வர் தொடங்கினார்
 • மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. 
 • இங்கு புனேவில், 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த எரவாடா சிறை அமைந்துள்ளது. சுதந்திர போராட்ட காலத்தில், மஹாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், சுபாஷ் சந்திரபோஸ், பாலகங்காதர திலகர், ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள், இச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். 
 • இவர்கள் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகள், சிறைகளின் பழமை குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அறிவதற்காக, மஹாராஷ்டிராவில் சிறை சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டது.
 • எரவாடா சிறையில் நடந்த விழாவில், 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக பங்கேற்ற முதல்வர் உத்தவ் தாக்கரே, சிறை சுற்றுலா திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பழைய வாகனங்களுக்கு பசுமை வரி: மத்திய அமைச்சர் ஒப்புதல்
 • பழைய வாகனங்கள், சுற்றுச்சூழலுக்கு, அதிக அளவில் மாசு ஏற்படுத்துவதால், அவற்றுக்கு பசுமை வரி விதிக்க, மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.இதற்கு, மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்து உள்ளார். 
 • இதன்படி, எட்டு ஆண்டுகள் பயன்பாட்டில் இருக்கும் சரக்கு வாகனங்களின் தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கும் நேரத்தில், பசுமை வரி செலுத்த வேண்டும். இது, அவர்கள் செலுத்தும் சாலை வரியில், 10 முதல், 25 சதவீதம் வரை இருக்கலாம் என, தெரிகிறது.
 • சொந்த வாகனங்களுக்கு, 15 ஆண்டுகளுக்குப் பின் பதிவுச்சான்று புதுப்பிக்கும்போது, பசுமை வரி செலுத்த நேரிடும்.வசூலிக்கப்படும் பசுமை வரி, சுற்றுச்சூழல் மாசுபாட்டினை நீக்கும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
 • மக்கள், பழைய வாகனங்கள் உபயோகிப்பதை தடுத்து, குறைந்த மாசு ஏற்படுத்தும் புதிய வாகனங்கள் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில், இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வர உள்ளது.
 • இதற்கிடையே, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், 15 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களின் பதிவுச்சான்று, மீண்டும் புதுப்பிக்கப்படாது.அவற்றை, 'ஸ்கிராப்' ஆக மாற்றும் திட்டம், அடுத்த ஆண்டு ஏப்., 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
இந்திய பொருளாதாரம் 7.3% வளா்ச்சி காணும்: ஐ.நா.
 • கரோனா பேரிடரால் உள்நாட்டு நுகா்வு சரிவடைந்துள்ளது. மேலும், கரோனா பரவலை கட்டுப்படுத்த அவ்வப்போது அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் பொருளாதாரம் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. 
 • இவற்றின் கரணமாக, இந்தியப் பொருளதாரம் 2020-இல் 9.6 சதவீதமாக பின்னடைவைச் சந்திக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2019-இல் இந்தியா 4.7 சதவீத பொருளாதார வளா்ச்சியைப் பெற்றிருந்தது.
 • பல்வேறு இடையூறுகளுக்கிடையிலும் பின்னடைவிலிருந்தும் விரைவில் மீண்டெழும் இந்தியப் பொருளாதாரம், நடப்பாண்டில் 7.3 சதவீத வளா்ச்சியை அடையும்.
 • உலக பொருளாதாரத்தைப் பொருத்தவரையில் அதன் வளா்ச்சி 4.3 சதவீதமாக சுருங்கியுள்ளது. இது, உலக அளவில் நிதி நெருக்கடி உருவான 2009-ஆம் ஆண்டில் காணப்பட்ட வளா்ச்சியைக் காட்டிலும் இரண்டரை மடங்கு அதிகம்.
 • 2021-இல் இந்த வளா்ச்சி 4.7 சதவீதமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வேகமாக வளா்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் உள்ள சீனாவின் பொருளாதார வளா்ச்சி 2021-இல் 7.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வளா்ச்சி 2021 சா்வதேச நிதியத்தின் கணிப்பு
 • கரோனா இடா்பாட்டுக்கிடையிலும் நடப்பாண்டில் இந்தியப் பொருளாதாரம் 11.5 சதவீதம் என்ற இரட்டை இலக்க வளா்ச்சியை எட்டும். உலக அளவில் 2021-இல் இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சியை எட்டுவது இந்தியாவில் மட்டுமே சாத்தியமாகும். இருப்பினும், கடந்த 2020-இல் இந்தியப் பொருளாதாரத்தில் 8 சதவீதம் அளவுக்கு பின்னடைவு ஏற்படும்.
 • வரும் 2022-ஆம் ஆண்டைப் பொருத்தவரையில் இந்தியப் பொருளாதாரத்தின் வளா்ச்சி 6.8 சதவீதமாகவும், சீனாவின் வளா்ச்சி 5.6 சதவீதமாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 • இந்தியாவைத் தொடா்ந்து சீனா நடப்பாண்டில் 8.1 சதவீத பொருளாதார வளா்ச்சியை பதிவு செய்யும். இவைகளுக்கு அடுத்தபடியாக ஸ்பெயின் (5.9%), பிரான்ஸ் (5.5%) ஆகிய நாடுகள் இருக்கும் என சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
குடியரசு தின விழாவில் வெள்ளியங்கிரி உழவன் நிறுவனத்துக்கு தமிழக அரசின் விருது
 • ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கி வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு (Velliangiri Uzhavan Producer Company Limited) தமிழக அரசு விருது வழங்கி கெளரவித்துள்ளது. 'சிறந்த நிர்வாக திறன் படைத்த எஃப்.பி.ஓ' என்ற பிரிவில் (Best Performing FPO under the category 'Governance') இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
 • சென்னையில் இன்று (ஜனவரி 26) நடந்த 72-வது குடியரசு தின விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் இவ்விருதினை வழங்கி வாழ்த்து கூறினார்.
 • அவ்விருதினை நிறுவனத்தின் தலைவரும் தொண்டாமுத்தூர் விவசாயியுமான திரு.குமார் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
 • வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனமானது ஈஷா அறக்கட்டளை (Isha Foundation) நிறுவனர் சத்குரு (Sadhguru) அவர்களின் ஆலோசனை படி கடந்த 2013-ம் ஆண்டு கோவையில் தொடங்கப்பட்டது. 
 • இதில் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 1,063 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அதில் 38 சதவீதம் பேர் பெண் விவசாயிகளாகவும், 70 சதவீதம் பேர் சிறு, குறு விவசாயிகளாகவும் உள்ளனர்.
 • இந்நிறுவனம் தேங்காய், பாக்கு மற்றும் காய்கறிகளை (Vegetables) நேரடியாக விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகிறது. கடந்த 2019-20-ம் நிதியாண்டில் மட்டும் ரூ.11.13 கோடி ஆண்டு வருவாய் (Annual Turnover) ஈட்டி சாதனை படைத்துள்ளது.
 • இதற்கு முன்பு இந்நிறுவனத்துக்கு அவுட்லுக் பத்திரிக்கையானது தேசிய அளவில் 'சிறந்த எஃப்.பி.ஓ' என தேர்வு செய்து விருது வழங்கியது. அவ்விருதை மத்திய வேளாண் அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான திரையிடலில் 'சூரரைப் போற்று'
 • கொரோனா காரணமாக, ஆன்லைன் ஸ்கிரீன் ரூமில் நடைபெறவுள்ள இந்த திரையிடலை உலகம் முழுக்க உள்ள நூற்றுக்கணக்கான ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர்கள் பார்வையிடுவார்கள். 
 • அதற்காக பொதுப்பிரிவில் தரமான 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இதில் திரையிடப்படும். அந்த திரையிடலுக்கு சூரரைப் போற்று தற்போது தேர்வாகியிருக்கிறது.
 • இந்த திரையிடலில் இருந்தே சிறந்தப் படம் உள்ளிட்ட பிரிவுகளுக்கு 6 முதல் 8 படங்கள் வரை இறுதி பரிந்துரைக்கு தேர்வு செய்யப்படும். அவற்றில் இருந்து சிறந்ததாக தேர்வு செய்யப்படும் படத்திற்கும், கலைஞர்களுக்குமே ஆஸ்கர் விருது வழங்கப்படும். 
 • கொரோனா காரணமாக இந்தாண்டு தள்ளி வைக்கப்பட்ட ஆஸ்கர் விருது விழா, ஏப்ரல் மாதம் 25-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel