Tuesday, 26 January 2021

TNPSC 25th JANUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையங்களுக்கான விருதுகள் 2021

 • இந்திய நாட்டில் 72வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக தங்களது துறையில் சிறப்பாக செயல்பட்டவர்களை தேர்ந்தெடுத்து மத்திய, மாநில அரசுகள் விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது. 
 • அந்தவகையில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 • சேலம் நகர காவல் நிலையம்
 • திருவண்ணாமலை நகர காவல் நிலையம்
 • சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையம்

வீர் சக்ரா விருது 2021

 • கிழக்கு லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் சீன ராணுவத்துடன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதில் ராணுவப் படைக்கு தலைமை தாங்கி சீன ராணுவத்தை எதிர்த்து சண்டையிட்டு வீரமரணம் அடைந்த கர்னல் பிகுமலா சந்தோ பாபுவுக்கு ராணுவத்தின் 2-வது உயர்ந்த விருதான மகாவீர் சக்ரா விருது வழங்கப்பட உள்ளது.
 • வீரர்கள் நயிப் சுபேதார் நாதுராம் சோரன், ஹவில்தாரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான கே.பழனி, நாயக் தீபக் சிங், சிப்பாய் குர்தேஜ் சிங் ஆகியோர் சீன ராணுவத்துடனான மோதலில் உயிரிழந்தனர். இவர்கள் 4 பேருக்கும் வீர் சக்ரா விருதுகள் வழங்கப்பட உள்ளன. 3-மீடியம் ரெஜிமண்டைச் சேர்ந்த ஹவில்தார் திஜேந்தர் சிங்கிற்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட உள்ளது.

அண்ணா பதக்கம் 2021

 • 72வது குடியரசு தினத்தையொட்டி சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக்கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். 
 • அப்போது நாட்டின் பல்வேறு துறைகளில் சாதனைகளை விளக்கும் வாகன அணிவகுப்பு மெரினா கடற்கரையில் ஊர்வலமாக சென்றது. அத்துடன் குதிரைப்படை, வனத் துறை சிறைத்துறை வீரர்கள் அணிவகுத்து சென்றனர்.
 • இந்நிலையில் தமிழகத்தில் வீரதீர செயல்களை புரிந்த 4 பேருக்கு அண்ணா பதக்கங்களை முதல்வர் பழனிசாமி வழங்கினார். தருமபுரியில் கிணற்றில் விழுந்த யானையை மீட்டு சிறந்த சிகிச்சை வழங்கியமைக்காக கால்நடை மருத்துவர் பிரகாஷுக்கு அண்ணா பதக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
 • ரயில் விபத்தை தடுக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்ட ரயில் ஓட்டுநர் சுரேஷுக்கும், நீலகிரியில் காவலர் ஜெயராம் உயிரை காப்பற்றியதற்காக வாகன ஓட்டுநர் புகழேந்திரனுக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் புலிவலம் அரசு பள்ளி உதவி ஆசிரியர் முல்லைக்கும் அண்ணா விருது வழங்கப்ட்டது.
 • மத நல்லிணக்கத்தான கோட்டை அமீர் விருது கோயமுத்தூரைச் சேர்ந்த அப்துல் ஜபாருக்கு வழங்கப்பட்டது. கோவை குனியமுத்தூரில் மதநல்லிணக்கத்தை பேணும் வகையில் சிறப்பாக செயல்பட்டதால் கோட்டை அமீர் விருதுடன் ரூ.25ஆயிரம் காசோலை மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

குண்டு எறிதலில் அமெரிக்க வீரர் உலக சாதனை

 • அமெரிக்கன் லீக் போட்டி அமெரிக்காவில் வாஷிங்டனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்ற அமெரிக்க வீரர் ரியான் க்ரூசர் குண்டு எறிதலில், புதிய சாதனை படைத்துள்ளார். முந்தைய சாதனையான 22.66 மீட்டரை முறியடித்து 22.82 மீட்டர் எறிந்து புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். 
 • கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ரியானின் புதிய சாதனை வரும் ஒலிம்பிக் போட்டிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. உயா்நிலை பொருளாதார ஆலோசனைக் குழுவில் ஜெயதி கோஷ்

 • ஐ.நா. அமைப்பின் உயிா்நிலை சமூக, பொருளாதார ஆலோசனைக் குழுவில் இந்தியாவைச் சோந்த பொருளாதார நிபுணா் ஜெயதி கோஷ் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் தவிர 19 சா்வதேச பொருளாதார நிபுணா்களும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனா்.
 • கரோனாவுக்கு பிறகு ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார சவால்கள், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் உள்ளிட்டவை குறித்தும், அவற்றை சமாளிப்பது குறித்தும் ஐ.நா. பொது சபைக்கு இக்குழுவினா் ஆலோசனை வழங்க இருக்கின்றனா்.
 • 65 வயதாகும் ஜெயதி கோஷ் தில்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றாா். பின்னா் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உயா்கல்வி முடித்தாா்.
 • தொடா்ந்து அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டம் பெற்றாா். ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சுமாா் 35 ஆண்டு காலம் பணியாற்றிய அவா், இப்போது அமெரிக்காவின் ஆம்ஹா்ஸ்ட் நகரில் உள்ள மாஸசூசெட்ஸ் பல்கலைக்கழத்தில் பொருளாதாரப் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். பொருளாதாரம் தொடா்பான பல்வேறு புத்தகங்களையும் அவா் எழுதியுள்ளாா்.
 • தற்போதைய மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, பட்ஜெட் உள்ளிட்ட பொருளாதாரம் சாா்ந்த செயல்பாடுகளை ஜெயதி கோஷ் கடுமையாக விமா்சித்துள்ளாா். கடந்த ஆண்டு தில்லியில் நடைபெற்ற வன்முறை தொடா்பான போலீஸாரின் துணை குற்றப்பத்திரிகையில் ஜெயதி கோஷின் பெயா் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

 • ஒடிஸாவின் சண்டீபூா் கடற்கரைப் பகுதியில் இந்தப் புதிய ரக ஆகாஷ் ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனையின்போது செலுத்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணை தரையில் இருந்து வானில் உள்ள இலக்கைத் துல்லியமாக இடைமறித்து அழித்தது. 
 • அந்த ஏவுகணை அனைத்து பரிசோதனை இலக்குகளையும் சோதனையின்போது பூா்த்தி செய்தது. வான்வழி அச்சுறுத்தல்களை எதிா்கொள்ள இந்த ஏவுகணையை இந்திய விமானப் படை பயன்படுத்தவுள்ளது.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a comment