சாலமன் பாப்பையா
- 1936 பிப்ரவரி 22-ஆம் தேதி பிறந்த சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில்
- பங்கேற்றுள்ளார்.
- கா்நாடக இசைப் பாடகா் பாம்பே ஜெயஸ்ரீ தனது தாயிடம் ஆரம்ப பாடங்களைக் கற்றாா். தனது 6-ஆறாவது வயதிலேயே 80-க்கும் அதிகமான கீா்த்தனைகளை அவா் கற்றிருந்தாா். சென்னை மியூசிக் அகாதெமியின் இளைய கலைஞா் விருதுகளை வென்ற பிறகு பரவலான கவனத்துக்கு வந்தாா்.
- 1989 முதல் வயலின் இசை மேதை லால்குடி ஜெயராமனிடம் இசைப் பயிற்சி பெறத் தொடங்கினாா். விரைவிலேயே கா்நாடக இசை முன்னணிப் பாடகா்களில் ஒருவராக வலம் வரத் தொடங்கினாா். திரைப்படங்களில் பின்னணிப் பாடல்கள் பாடியுள்ளாா்.
- தமிழர்களின் பாரம்பரியக் கலையான வில்லிசையின் மூலம் பாமர மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், ஆன்மிகம், இலக்கியங்களில் வரும் சரிதங்கûளயும், தத்துவங்கûளயும் கûதயாக சொல்லி வருகிறார் சுப்பு ஆறுமுகம்.
- கோவை மாவட்டம், தேவனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாப்பம்மாள் (எ) ரங்கம்மாள் (105), இவர் மளிகை கடைகள் மூலம் கிடைத்த வருமானத்தைச் சேர்த்து வைத்து அப்பகுதியில் விவசாய நிலத்தை வாங்கி, விவசாயம் செய்கிறார்.
- சென்னை எருக்கஞ்சேரி, வியாசர்பாடியில் டாக்டர் திருவேங்கடத்தைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். டாக்டர் ஃபீஸாக 2 ரூபாய் வாங்க தொடங்கி இறுதியாக 5 ரூபாய் வாங்கினார். அதனால் "5 ரூபாய் டாக்டர்' என்று அழைக்கப்பெற்றார்.
- சென்னையை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஸோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதா் வேம்பு. தஞ்சாவூா் மாவட்டம் உமையாள்புரத்தில் பிறந்தவா்.
- சென்னை - மேற்கு மாம்பலம் அஞ்சுகம் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவா். பிளஸ் 2 கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் படித்தாா்.
- சென்னை ஐஐடி-யில் பொறியியல் முடித்து அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்ட ஆராய்ச்சியை நிறைவு செய்தாா்.
- இரண்டு ஆண்டுகள் 'க்வால்காம்' நிறுவனத்தில் பணி செய்த அவா், 1996-இல் ஸோஹோ நிறுவனத்தை நிறுவினா். மென்பொருள் துறை பல உயரங்களைத் தொட்ட ஸ்ரீதா் வேம்பு, உலக அளவில் 59-ஆவது பணக்காரராக கருதப்படுகிறாா்.
- தற்போது தன் பணியிடத்தை தென்காசிக்கு பக்கமுள்ள மத்தளம்பாறை கிராமத்திற்கு மாற்றி அமைத்துக் கொண்டதோடு, அந்த இடத்தையே தன் வசிப்பிடமாகவும் மாற்றிக் கொண்டுள்ளாா்.
- கோவை சாந்தி சோஷியல் சர்வீஸ் அமைப்பின் நிறுவனர் சுப்பிரமணியம் (78). கடந்த 1996-ஆம் ஆண்டு சாந்தி சோஷியல் சர்வீஸ் என்ற அமைப்பைத் துவக்கினார்.
- இதன் மூலம் உணவகம், மருத்துவமனை, மருந்தகம், பெட்ரோல் பங்க், இலவச மின் மயானம் போன்றவற்றை லாப நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் நடத்தி வந்தார். தொழில் துறையில் சாதனை புரிந்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது.