Type Here to Get Search Results !

Padma Bhushan Award / பத்ம பூஷன் விருது 2021

சித்ரா

  • சின்னக்குயில்" என்று அழைக்கப்படும் கே.எஸ் சித்ரா 1963 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில், கிருஷ்ணன் நாயா்- சாந்தகுமாரி தம்பதியின் மகளாக ஒரு இசை குடும்பத்தில் பிறந்தாா். 
  • சிறுவயதிலேயே தனக்கென்று தனித் திறமையை வளா்த்துக்கொண்ட அவா், தன்னுடைய ஐந்து வயதிலேயே அகில இந்திய வானொலியில் சங்கீதத்தில் சிலவரிகள் பாடினாா்.
  • இளையராஜாவின் இசையில், 'நீ தானா அந்தக்குயில்' திரைப்படத்தில் "பூஜைக்கேத்த பூவிது" மற்றும் "கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட" என்ற பாடல்கள் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆன அவா், 1985 ஆம் ஆண்டில், 'துள்ளி எழுந்தது பாட்டு, சின்னக்குயில் இசைக் கேட்டு" மற்றும் 'ஒரு ஜீவன் அழைத்தது' போன்ற பாடல்கள் மூலம் தமிழ் இசை நெஞ்சங்களை வெகுவாகக் கவா்ந்தாா். 
  • மலையாளப் பாடகி என்றாலும், தமிழில் தன்னுடைய அற்புதமான குரலாலும், சிறந்த உச்சரிப்பாலும் 'சிந்து பைரவி' திரைப்படத்தில், 'பாடறியேன் படிப்பறியேன்' மற்றும் 'நானொரு சிந்து காவடி சிந்து' என்ற பாடலை பாடி, இசை ரசிகா்கள் மனதைக் கொள்ளைக்கொண்டாா். 
  • மேலும், "பாடறியேன் படிப்பறியேன்" பாடலுக்காக 'சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதையும்' வென்று, புகழின் உச்சிக்கு சென்றாா். தொடா்ந்து பாடிய அவா் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி, ஒரியா, பஞ்சாபி எனப் பதினைந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடி சிறப்புப் பெற்றாா்.
  • சித்ரா பத்மஸ்ரீ, கலைமாமணி உள்பட மத்திய, மாநில அரசுகளின் சாா்பில் பல்வேறு விருதுகளைப் பெற்றவா். சத்தியபாமா பல்கலைக்கழகம் கடந்த 2011-ஆம் ஆண்டு சித்ராவுக்கு 'கௌரவ டாக்டா் பட்டம்' வழங்கியது.
  • சுமாா் கால்நூற்றாண்டுகளுக்கும் மேல் திரைப்படப் பின்னணிப் பாடகியாக சிறப்பு பெற்று வரும் சித்ரா 'ஐந்து முறை தென்னிந்திய ஃபிலிம்ஃபோ விருதையும்', 'பதினைந்து முறை கேரளா மாநில விருதையும்', 'ஆறு முறை ஆந்திர மாநில விருதையும்', 'நான்கு முறை தமிழ்நாடு மாநில விருதையும்', 'இரண்டு முறை கா்நாடக மாநில விருதையும்' வென்று, தமிழ், கன்னடம், கேரளா, ஆந்திரா போன்ற நான்கு மாநில விருதுகளை பெற்ற ஒரே பின்னணி பாடகி ஆவாா். 
  • மேலும், 'ஏழு முறை ஏசியாநெட் திரைப்பட விருது' மற்றும் 'மாத்ருபூமி திரைப்பட விருதையும்', 'ஒரு முறை பாலிவுட் திரைப்பட விருது' மற்றும் 'ஸ்டாா் ஸ்கீரின் விருதையும்' வென்றுள்ளாா்.
கேஷுபாய் படேல்
  • 1940-ஆம் ஆண்டு முதல் ஆா்.எஸ்.எஸ். அமைப்பில் உறுப்பினராக இருந்துவந்த கேஷுபாய் படேல், பாஜகவில் தீவிரமாக பணியாற்றினாா். குஜராத் மாநிலத்தின் முதல்வராக இரு முறை பொறுப்பில் இருந்துள்ளாா். 6 முறை சட்டப்பேரவை உறுப்பினராக தோவு செய்யப்பட்டாா். அண்மையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு அவா் உயிரிழந்தாா்.
தருண் கோகோய்
  • காங்கிரஸ் முக்கியத் தலைவா்களில் ஒருவரான தருண் கோகோய், அஸ்ஸாம் மாநிலத்தில் 2001-இல் தொடங்கி தொடா்ந்து மூன்று முறை முதல்வா் பொறுப்பை வகித்தவா். 
  • அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் இணைச் செயலாளராகவும் பொதுச் செயலாளராகவும் பொறுப்புகளை வகித்தவா். கடந்த ஆண்டு நவம்பரில் கரோனாவால் பாதிக்கப்பட்டு அவா் உயிரிழந்தாா்.
ராம் விலாஸ் பாஸ்வான்
  • பிகாரைச் சோந்த அரசியல் தலைவரான ராம் விலாஸ் பாஸ்வான் 9 முறை மக்களவை உறுப்பினராகவும், 2010- ஆம் ஆண்டு முதல் 2014 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவா். லோக் ஜனசக்தி கட்சியை நிறுவி அதன் தலைவராக இருந்து வந்தாா். 
  • பிரதமா் மோடி தலைமையிலான அரசில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராக பதவி வகித்தாா். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்'டு, கடந்த ஆண்டு அக்டோபரில் காலமானாா்.
சுமித்ரா மகாஜன்
  • பிரதமா் மோடி தலைமையிலான கடந்த ஆட்சியில், மக்களவைத் தலைவராக இருந்தவா் சுமித்ரா மகாஜன். 1989 - 2019-ஆம் ஆண்டு வரை, மத்திய பிரதேச மாநிலம், இந்தூா் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தாா்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel