சென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தர் நியமனம்
- சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் முதல்முறை வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தரை சென்னை மாநகராட்சி நியமித்துள்ளது.
- ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்துக்கு பிறகு சொந்த ஊரான சென்னைக்கு திரும்பிய வாஷிங்டன் சுந்தர், தன்னை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.
32 குழந்தைகளுக்கு பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருதுகள்
- புதுமையான கண்டுபிடிப்புகள், கல்வித்திறன், விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம், பொதுசேவை, மற்றும் வீர தீர மிக்க துறைகளில் தலை சிறந்த சாதனைகளை படைத்துள்ள, அபரிமிதமான திறமைகள் கொண்ட குழந்தைகளுக்கு பிரதமரின் ராஷ்ட்ரிய பால சக்தி புரஸ்கார் எனப்படும் தேசிய குழந்தைகள் விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது.
- 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் 32 மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகள் இந்த விருதுகளை பெற்றுள்ளனர். கலை மற்றும் கலாச்சார துறையில் 7 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கல்வித் திறன் சாதனையில் 5 குழந்தைகளும், விளையாட்டு துறையில் 7 குழந்தைகளும் விருது பெற்றுள்ளன.
- 3 குழந்தைகள் வீரதீர செயல்களுக்கான விருதுகளையும், தமிழகத்தில் வசிக்கும் பிரசித்தி சிங்குக்கு சமூக சேவைக்கான விருதும் கிடைத்துள்ளது.
கற்பாறைகளில் மோதாமல் ரயிலை நிறுத்திய ஓட்டுநருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா விருது
- கொடைக்கானல் ரோடு-அம்பாத்துரை இடையே தண்டவாளத்தில் கிடந்த கற்பாறைகளில் மோதாமல் துரிதமாக செயல்பட்டு வைகை விரைவு ரயிலை நிறுத்தி பயணிகளை காப்பாற்றிய மதுரை ரயில் ஓட்டுநருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த விருதை குடியரசு தின விழாவில் ரயில் ஓட்டுநருக்கு தமிழக முதல்வா் அளிக்கவுள்ளாா்.
- இதன்மூலம், பாறைக் கற்களில் ரயில் மோதுவதை தவிா்த்தாா். மேலும், ரயில் தடம்புரள்வதும் தடுக்கப்பட்டது. உரிய நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு, 1,500 பயணிகளின் உயிா்களை ரயில் ஓட்டுநா் சுரேஷ் காப்பாற்றினாா்.
- இதையடுத்து, அவரது சிறந்த செயலை அங்கீகரிக்கும் வகையில், வீர தீர செயலுக்கான அண்ணா விருதுக்கு சுரேஷ் பெயரை தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை அமைச்சா் உதயகுமாா் பரிந்துரைத்தாா். இதைத்தொடா்ந்து, ரயில் ஓட்டுநா் சுரேஷுக்கு துணிச்சலுக்கான அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வரான கல்லூரி மாணவி
- உத்தரகண்டில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நாடு முழுதும், தேசிய பெண் குழந்தைகள் தினம், கடைப்பிடிக்கப்பட்டது.
- இதையொட்டி, பல மாநிலங்களில், பெண் குழந்தைகளை கவுரவிக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டத்தில், தவுலதாப்பூரை சேர்ந்தவர் ஷிருஷ்டி கோஸ்வாமி, 20.
- இவர், விவசாய கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த, 2018- முதல், உத்தரகண்ட் மாநிலத்தின் சிறுவர்களுக்கான சட்டசபையில் முதல்வராக, ஷிருஷ்டி இருந்து வருகிறார்.
- இந்நிலையில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக பணியாற்றும் வாய்ப்பை, ஷிருஷ்டிக்கு, முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் வழங்கினார்.
- இதையடுத்து, உத்தர கண்டின் முதல்வராக, ஷிருஷ்டி நேற்று பகல், 12:00 மணி முதல், மாலை, 3:00 மணி வரை செயல்பட்டார்.
ரூ.48,000 ஆயிரம் கோடியில் ராணுவத்துக்கு தேஜஸ் போர் விமானங்கள் விற்க ஒப்பந்தம்
- டெல்லியில் கடந்த 13ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்திய ராணுவத்தை வலுப்படுத்தும் வகையில் ரூ.48 ஆயிரம் கோடியில் தேஜஸ் எம்கே-1ஏ போர் விமானங்கள், 10 எம்கே 1 பயிற்சி விமானங்களை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
- சீனாவின் ஜேஎப் 17 விமானத்துடன் ஒப்பிடும்போது, தேஜஸ் மார்க் 1ஏ போர் விமானமானது சிறந்த செயல்திறனை கொண்டுள்ளது. இதற்கு, வானத்திலேயே எரிபொருள் நிரப்பும் வசதி உள்ளது. இந்திய விமானப்படைக்கு 83 தேஜஸ் விமானங்களை ரூ.48 ஆயிரம் கோடிக்கு விற்க, மத்திய அரசு ஒப்பந்தம் அளித்துள்ளது.
குடியரசு தின அணிவகுப்பில் அதிவேக விமானப்படையை வழிநடத்தும் முதல் பெண்மணி சுவாதி ரத்தோர்
- ஜனவரி 26ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பின் போது டெல்லியின் ராஜ்பாத்தில் நடைபெறவுள்ள ஃப்ளை பாஸ்ட் எனப்படும் அதிவேக விமானப்படை அணிவகுப்பை வழிநடத்திய முதல் பெண்மணி என்ற வரலாற்று சாதனையை, இந்திய விமானப்படையின் லெப்டினன்ட் சுவாதி ரத்தோர் விரைவில் படைக்கவுள்ளார்.
மூலதன திட்டங்களுக்கு மத்திய பிரதேசத்திற்கு கூடுதல் நிதி ரூ. 660 கோடி வழங்க நிதி அமைச்சகம் ஒப்புதல்
- பல்வேறு மக்கள் மைய சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயல்படுத்திய முதல் மாநிலமான மத்திய பிரதேசத்திற்கு மூலதன திட்டங்களுக்கான கூடுதல் நிதி கிடைக்கவிருக்கிறது.
- ஒரே நாடு-ஒரே ரேசன் அட்டை, எளிமையான வர்த்தகத்தை மேற்கொள்ளுதல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு ஆகிய மூன்று சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான மூலதன செலவிற்காக அந்த மாநிலத்திற்கு கூடுதலாக ரூ. 660 கோடியை வழங்குவதற்கு மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. நான்காவதாக எரிசக்தித் துறை சீர்திருத்தத்தின் ஒரு பகுதியையும் அந்த மாநிலம் செயல்படுத்தியுள்ளது.
- ரூ. 660 கோடி மதிப்பிலான மூலதன திட்டங்களுக்கு மத்திய செலவினத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. அனுமதி அளிக்கப்பட்ட திட்டங்களுக்கு முதல் தவணையாக 50 சதவீத தொகை (ரூ.330 கோடி) விடுவிக்கப்பட்டுள்ளது.
- மூலதன திட்டங்களுக்காக பகுதி இரண்டின்கீழ் ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ. 660 கோடிக்கும் கூடுதலாக தற்போது அதே அளவிலான தொகை வழங்கப்படவிருக்கிறது.
- கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட நெருக்கடியைக் கருத்தில் கொண்டு மாநில அரசுகளின் மூலதன செலவை ஊக்குவிக்கும் வகையில் 2020 அக்டோபர் 12-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் தற்சார்பு இந்தியா தொகுப்பின் ஒரு பகுதியாக மூலதன செலவிற்காக மாநிலங்களுக்கான சிறப்பு நிதி திட்டத்தை அறிவித்தார்.
- இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 27 மாநிலங்களில் ரூ.10,657 கோடி மதிப்பிலான மூலதன திட்டங்களை செயல்படுத்துவதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. முதல் தவணையாக மாநிலங்களுக்கு ரூ. 5,378 கோடி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தத் திட்டத்தின் பலன்களை தமிழகம் பெறவில்லை.