Type Here to Get Search Results !

TNPSC 23rd JANUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த தினம் கொண்டாடம்
  • சுதந்திரப் போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கொல்கத்தாவில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். நேதாஜியின் நினைவாக நாணயம், தபால் தலையை அவர் வெளியிட்டார். 

மதுராந்தகம் ஏரியை சீரமைக்க ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு

  • செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி, 8 கிராம எல்லைகளில் 2,591.50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 
  • இந்த ஏரிக்கு வந்தவாசி வட்டத்தில் உற்பத்தியாகும் கிளியாற்றில் இருந்தும், உத்திரமேரூர் பகுதியில் உற்பத்தியாகும் நெல்வாய் மடுவு மூலமும் நீர் வருகிறது. மதுராந்தகம் ஏரியில் உள்ள 5 தலைப்பு மதகுகள் மூலம் 2,852.55 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பயன்பெறுகின்றன.
  • இந்த ஏரியில் இருந்து செல்லும் நீர், 30 ஏரிகளின் உயர்மட்ட கால்வாய்கள் மூலம் 4,751.90 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. மொத்தமாக மதுராந்தகம் ஏரி மூலம் 7604.45 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. 
  • விளகாம், முருகஞ்சேரி, முன்னூத்திகுப்பம், கத்திரிச்சேரி, விழுதமங்கலம், முள்ளி, வளர்பிறை, கடப்பேரி, மதுராந்தகம் ஆகிய கிராமங்கள் மதுராந்தகம் ஏரி மூலம் பாசன வசதி பெறுகின்றன.

இந்திய ரயில்வேயில் முதல்முறையாக 3.5 கி.மீ நீளமுள்ள சரக்கு ரயில் இயக்கம் தென்கிழக்கு மத்திய மண்டலம் சாதனை

  • நாடு முழுவதும் வழக்கமான பயணிகள் ரயில்கள் இயக்கப்படாத நிலையில், சரக்கு ரயில்போக்குவரத்தை ரயில்வே அமைச்சகம் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. 
  • மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதிலும், தனியார் நிறுவனங்களின்தயாரிப்பு பொருட்களை கொண்டுசெல்லவும் ரயில்வே துறை முக்கிய பணியை ஆற்றி வருகிறது.
  • இந்நிலையில், இந்திய ரயில்வேயின் தென்கிழக்கு மத்திய ரயில்வே மண்டலம் சார்பில் சரக்கு ரயில் போக்குவரத்தில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 5 சரக்கு ரயில்களை இணைத்து 3.5 கி.மீ. நீளம் கொண்ட சரக்கு ரயில் உருவாக்கப்பட்டது.
  • இந்த நீண்ட சரக்கு ரயில் மூலம் முதல்முறையாக பிலாஸ்பூர் ரயில் கோட்டத்தில் உள்ள பிலாய்-யில்இருந்து கோர்பாவுக்கு நேற்று முன்தினம் நிலக்கரி கொண்டு செல்லப்பட்டுள்ளது. 
  • மொத்தம் 224 கி.மீதொலைவை 7 மணி நேரத்தில் கடந்துள்ளது. `வாசுகி' என்று பெயர்வைக்கப்பட்டுள்ள இந்த சரக்குரயில் இயக்கம் தொடர்பான வீடியோக்களையும், புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.

5 மாவட்ட பழங்குடியினர் ஐடிஐ.க்களை மேம்படுத்த டைட்டன் நிறுவனத்துடன் வேலைவாய்ப்புத் துறை ஒப்பந்தம்: முதல்வர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது

  • முதல்வர் முன்னிலையில், கோவை - ஆனைகட்டி, திருவண்ணாமலை - ஜமுனாமரத்தூர், சேலம் - கருமந்துறை, நாமக்கல் -கொல்லிமலை, நீலகிரி - கூடலூர் ஆகிய இடங்களில் பழங்குடியினருக்காக அமைக்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்றுநர்களின் திறன், பயிற்சியாளர்களின் வேலைவாய்ப்புத் திறன், தொழிற்பயிற்சி நிலையங்களின் உட்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்த, தமிழக அரசின்வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை மற்றும் டைட்டன் நிறுவனம் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அச்சிடுவதற்கு பதில் மின்னணு ஆவணங்களாக தயாரிப்பு, மத்திய பட்ஜெட்டை மொபைலில் பார்க்க புதிய செயலி அறிமுகம் செய்தார் அமைச்சர்

  • வரும் நிதி ஆண்டுக்கான (2021-22) மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 
  • கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு பட்ஜெட் விவரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொது மக்களும் பார்ப்பதற்கு வசதியாக புதிய செய லியை (மொபைல் ஆப்) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்தார்.
  • இந்த செயலியில் 14 மத்திய பட்ஜெட் ஆவணங்கள் இடம்பெறும். ஆண்டு நிதி அறிக்கை, மானியக் கோரிக்கை மீதான ஒதுக்கீடு (டிஜி), நிதி மசோதா உள்ளிட்ட விவரங்களும் இதில் இடம்பெறும்.
  • எளிதில் பயன்படுத்தும் விதமாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் விவரங்களைப் பார்க்கலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனில் செயல்படும் வகை யில் உருவாக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு பட்ஜெட் ஆவணங்கள் இந்த செயலியில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • தேசிய தகவல் மையம் (என்ஐசி) இந்த செயலியை மத்திய பொருளாதார விவகாரத் துறை (டிஇஏ) வழிகாட்டுதலின்படி உருவாக்கியுள்ளது. இந்த செயலியை www.indiabudget.gov.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.
  • இந்த ஆண்டுதான் முதல்முறையாக பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடப்படவில்லை. மின்னணு ஆவணங்கள் மட்டுமே தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி பிரெஞ்சுப் பேராசிரியருக்கு சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான ரோமன் ரோலன் பரிசு

  • இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த பிரெஞ்சுப் படைப்பைத் தேர்வு செய்து வழங்கப்படும் இந்தப் பரிசுக்கான விழா கொல்கத்தாவில் நடைபெற்றது.
  • பிரான்ஸ் எழுத்தாளர் தஹர் பென் ஜெலூன் எழுதிய பிரெஞ்சு நாவலை 'உல்லாசத் திருமணம்' எனும் தலைப்பில், புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு ஆய்வு நிறுவனத்தின் பிரெஞ்சுத் துறைத் தலைவர் வெங்கட சுப்புராய நாயகர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
  • இதனைச் சிறந்த மொழியாக்க நூலாகத் தேர்வு செய்து, ரோமன் ரோலன் பரிசினைப் பிரெஞ்சுத் தூதரகப் பண்பாட்டுப் பிரிவு உயர் அதிகாரி எமானுவேல் லெபிரன் தமியேன்ஸ் வழங்கி வாழ்த்தினார்.
  • மேலும், மொழிபெயர்ப்பாளர் ஒரு மாதமும், பதிப்பாளர் ஒரு வாரமும் பிரான்ஸில் தங்கிவர பிரெஞ்சு அரசு ஏற்பாடு செய்துள்ளது. எழுத்தாளர் தஹர் பென் ஜெலூன் இணைய வழியில் கலந்துகொண்டு விழாவில் பேசினார். பாரீஸ் உலகப் புத்தகத் திருவிழாவில் இந்த ஆண்டின் சிறப்பு அழைப்பாளருக்கான நாடாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
  • பரிசு பெற்ற இந்த மொழியாக்க நூல், கேரளப் பல்கலைக்கழகத்தின் முதுகலைத் தமிழ்ப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பரிசு பெறும் பேராசிரியர் வெங்கட சுப்புராய நாயகரின் ஏனைய மொழிபெயர்ப்புகளான 'புக்குஷிமா', 'சூறாவளி', 'விரும்பத்தக்க உடல்' ஆகிய நூல்கள் கடந்த ஆண்டுகளில் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.
  • பேராசிரியர் வெங்கட சுப்புராய நாயகர், குறுந்தொகை, ஐங்குறுநூறு ஆகிய சங்க இலக்கிய நூல்களை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel