Type Here to Get Search Results !

Global Pravasi Rishta / குளோபல் பிரவாசி ரிஷ்தா

  • இந்திய அரசு வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான சேவைகளை அளிக்க தகவல் தொடர்பு தளமாக இந்த ‘செயலி’ இருக்கும். இதன் மூலம் முக்கிய அறிவிப்புகள், அவசரகால நடவடிக்கைகள் மற்றும் அறிவுரைகள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அவ்வப்போது அளிக்கப்படும்.
  • குறிப்பாக நெருக்கடி காலங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கு உதவும் வகையில் இந்த ‘செயலி’ செயல்படும். 
  • வளைகுடா நாடுகளில் வசிப்பவர்கள் http://pravasirishta.gov.in/ என்ற இணையதள முகவரியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பதிவிறக்கம் செய்து கொண்டு அவர் வசிக்கும் நாட்டை குறிப்பிட வேண்டும்.
  • உலகம் முழுவதும் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களை இணைக்க இதுவரை எந்த தளமும் இல்லை. அதற்கான முயற்சியாக இந்த குளோபல் பிரவாசி ரிஷ்தா என்ற ‘செயலி’ உருவாக்கப்பட்டுள்ளது.
  • Global Pravasi Rishta என்ற இந்த செயலி மூலம் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அந்நாட்டு தூதரகத்தை எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.
  • வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் சில சமயம் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளும்போது இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது.
  • எனவே வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்த செயலியை தங்கள் ஸ்மார்ட் போன்களில் இன்ஸ்டால் செய்து தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியும்.
  • மேலும் அவசர செய்திகள், அரசின் அறிவுறுத்தல்களை Global Pravasi Rishta என்ற இந்த செயலி மூலம் எளிதில் பெற முடியும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel