Type Here to Get Search Results !

TNPSC 2nd JANUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

20%க்கு மேல் யுரேனியம் செறிவூட்டல் ஈரான் அறிவிப்பு

  • ஈரான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவின் அடிப்படையில், 20 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருளை தனது ஃபோா்டோ செறிவூட்டு மையத்தில் தயாரிக்க ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளது.
  • அந்த நடவடிக்கை எப்போது தொடங்கப்படவுள்ளது என்பதை ஈரான் தெரிவிக்கவில்லை. ஃபோா்டோ செறிவூட்டு மையத்தில் எங்களது ஆய்வாளா்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம், சம்பல்பூர் பகுதியில் இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கு (ஐஐஎம்) அமைக்கப்பட உள்ள நிரந்தர கட்டிடத்தின் அடிக்கல் நாட்டினார் 
  • ஒடிசா மாநிலம், சம்பல்பூர் பகுதியில் இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கு (ஐஐஎம்) அமைக்கப்பட உள்ள நிரந்தர கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டார். 
உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர் குறித்த ஆய்வு
  • அமெரிக்காவின் மார்னிங் கன்சல்ட் என்ற சர்வே நிறுவனம் கடந்த டிசம்பரில், உலகின் இந்தியா, ஆஸி., அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரசேில், கனடா, ஜெர்மனி, இத்தாலி, மெக்சிகோ, தென்கொரியா, ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களின் செல்வாக்கு குறித்த ஆய்வு ஒன்றினை நடத்தியது. 
  • ஆய்வு முடிவில் இந்திய பிரதமர் மோடி அதிக பட்சமாக 55 ரேட்டிங் பெற்று முதலிடத்தில் உள்ளார்.மோடிக்கு அடுத்தபடியாக மெக்சிகோ அதிபர் லோபேஸ் ஒப்ரேடர் 29 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் மூன்றாம் இடத்தில் ஆஸி பிரதமர் ஸ்காட் மோரிசன் 27 புள்ளிகளுடன் உள்ளார்.
  • 24 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலா மெர்க்கல் உள்ளார். இத்தாலி பிரதமர் குலுசெப்பே கொன்டே 16 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் உள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மைனஸ் 18 புள்ளிகளுடன் 10 வது இடத்திலும், பிரான்ஸ் அதிபர் மைனஸ் 25 புள்ளிகளுடன் கடைசியாக 13வது இடத்திலும் உள்ளார்.கொரோனா பரவல் காலத்தில் பிரதமர் மோடியின் சிறந்த நிர்வாகத் திறனால் அவருக்கு அதிக ரேட்டிங் கிடைத்ததாக கருதப்படுகிறது. 
ஆர்டர் ஆப் தி பிரிட்டிஷ் எம்பயர் விருது
  • ஐதராபாத்தை சேர்ந்தவரும் கிம்ஸ் இயக்குனருமான மருத்துவர் ரகுராம் பில்லாரிசட்டி, உஷா லட்சுமி மார்பக புற்றுநோய் என்ற அறக்கட்டளையை நிறுவி, அதன் செயல் தலைவராகவும் இருக்கிறார். 
  • இந்த அறக்கட்டளையின் மூலம், அவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சேவையாற்றி வருகிறார். இந்தியா-இங்கிலாந்து இடையிலான நட்புறவு, இந்தியாவில் அறுவை சிகிச்சை கல்வி அளித்தல், மார்பக புற்றநோய் தொடர்பான அவரது தன்னிகரற்ற சேவைக்காக, இங்கிலாந்து அரச பரம்பரையின் மிக உயரிய `ஆர்டர் ஆப் தி பிரிட்டிஷ் எம்பயர்' விருது வழங்கப்பட உள்ளதாக `லண்டன் அரசிதழ்' என்ற அரண்மனையின் அதிகாரப்பூர்வ வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது.
  • இதன் மூலம், ரகுராம் இங்கிலாந்து அரசியின் 2வது மிக உயரிய விருதினை பெறும் இளம் வயது இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel