Type Here to Get Search Results !

TNPSC 9th DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

'நிவர்' புயல் நிவாரண பணிகளுக்காக ரூ.74 கோடி நிதி ஒதுக்கீடு- தமிழக அரசு அரசாணை வெளியீடு

 • வங்கக்கடலில் கடந்த நவ.22-ம்தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, 'நிவர்' தீவிர புயலாக வலுப்பெற்று, புதுச்சேரி அருகில் நவ.25-ம் தேதி இரவு 11.30 மணியில் இருந்து 26-ம் தேதிஅதிகாலை 2.30 மணி வரை கரையைக் கடந்தது.
 • இதனால், கடலோர மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, பாதிப்புகளுக்கான நிவாரணத்துக்காக ரூ.74 கோடியே 24 லட்சம் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து விடுவிக்க வருவாய்த் துறை கூறியதைதொடர்ந்து அந்தத் தொகை விடுவிக்கப்படுகிறது.
 • அதன்படி, புயலால் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.24 லட்சம்,கால்நடைகளுக்கு இழப்பீடாக ரூ.41 லட்சம், ஓட்டு வீடுகள், குடிசைகள் சேதத்துக்கு ரூ.59 லட்சம், பொதுப்பணித் துறைக்கு ரூ.20 கோடி, வேளாண் துறைக்கு ரூ.5 கோடி, தோட்டக்கலைத் துறைக்கு ரூ.1 கோடி, நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.10 கோடியும்,
 • மேலும், சென்னை மாநகராட்சிக்கு ரூ.10 கோடி, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்துக்கு ரூ.10 கோடி, ஊரகவளர்ச்சித் துறைக்கு ரூ.5 கோடி,பொது சுகாதார இயக்ககத்துக்கு ரூ.2 கோடி, மீனவளத்துக்கு ரூ.1 கோடி, சென்னை குடிநீர் வாரியத்துக்கு ரூ.2 கோடி, வனத்துறைக்கு ரூ.2 கோடி, நகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.5 கோடி என ரூ.74 கோடியே 24 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.335 கோடி

 • டெல்லியில் கடந்தமுறை நடந்த ஜி.எஸ்டி கூட்டத்தில், வரி வருவாய் இழப்பை சரிகட்ட மாநிலங்கள் வெளிச்சந்தையில் கடன் வாங்க மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. 
 • இதைத் தொடர்ந்து தமிழகம் உட்பட 16 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களுக்கு சுமார் ரூ.6ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை விடுவித்து கடந்த மாதம் 2ம் தேதி நிதி அமைச்சகத்தின் தரப்பில் அறிவிக்கப்பட்டது. 
 • இந்நிலையில், 'தமிழகம் உட்பட மொத்தம் 13 மாநிலங்களுக்கு 15வது நிதிக்குழு பரிந்துரையின்படி தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ரூ.335 கோடியே 41 லட்சத்து 66 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பசுவை கொன்றால் 5 ஆண்டுகள் சிறை: கர்நாடகா அரசு நிறைவேற்றிய புதிய சட்டம்

 • கர்நாடகாவில் பசு வதை தடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம், பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அம்மாநில சட்டமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.
 • இதன்படி கர்நாடகாவில் இனி பசுக்களை சட்டவிரோதமாக விற்பதோ, வேறு இடத்துக்கு கொண்டு செல்வதோ, கொலை செய்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும். 
 • ஒருவேளை ஒரு பசுவுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு அது மற்ற பசுக்களுக்கு பரவும் என தெரிய வந்தால், அந்த கட்டத்தில் மட்டுமே அது வெட்டப்படலாம் என்று புதிய சட்டம் கூறுகிறது.
இந்தியா முழுவதும் பொது வைஃபை வசதி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 • இந்தியா முழுவதும் PM WANI என்ற பெயரில் பொது வைஃபை சேவை வழங்கும் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
 • பிடிஓ எனப்படும் பொது தரவு அலுவலகங்களில் இந்த ஒய்-ஃபை தொடர்கள் நிறுவப்பட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் வைஃபை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • இந்த பொது தரவு அலுவலகங்கள், வைஃபை சேவையை இணைக்கும் செயலிகளின் பணிக்கு உரிமக்கட்டணமோ பதிவுக்கட்டணமோ கிடையாது. 
 • இந்த பிடிஓ அலுவலகங்கள், சிறு கடைகளாக இருக்கலாம் அல்லது பொது சேவை மையங்களாக இருக்கலாம் என்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
 • பொது தரவு அலுவலகம்: இந்த திட்டத்தின்படி பிடிஓ எனப்படும் பொது தரவு அலுவலகங்கள் வைஃபை சாதனங்களை தங்களுடைய இடத்தில் நிறுவி தங்களுடைய சந்தாதாரர்களுக்கு சேவையை வழங்கலாம்.
 • பொது தரவு அலுவலக ஒங்கிணைப்பு: இது ஒவ்வொரு பிடிஓ சேவையாளர்களையும் ஒருங்கிணைப்பது. வைஃபை சேவையை வழங்குவதற்கான அங்கீகாரம், எவ்ளவு தரவுகளை பயன்பாட்டாளர் உபயோகிக்கிறார் போன்ற கணக்குகளை இது மேற்கொள்ளும்.
 • வைஃபை சேவை எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் இன்டர்நெட் சேவையை பெற்றுத்தரும் பணியை இந்த செயலி மேற்கொள்ளும்.
 • சென்ட்ரல் ரெஜிஸ்டரி எனப்படும் இந்த பதிவகத்தில் செயலி வழங்குநர்கள், பிடிஓஏக்கள் எனப்படும் ஒருங்கிணைப்பாளர்கள், பிடிஓக்கள் ஆகியவற்றின் தரவுகளும் சேவைகளும் பராமரிக்கப்படும். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel