- இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவமும் உடலியங்கியலும், அமைதி, பொருளியல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவோருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
- இந்த பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர்.
- இந்த நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி முதன்முதலாக வழங்கப்பட்டது. வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895-ல் தொடங்கப்பட்ட இந்த விருது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு இதுவாகும்.
- வருடந்தோறும் நோபல் அவர்களின் நினைவு தினமான டிசம்பர் மாதம் பத்தாம் நாள் அன்று, அமைதிக்கான நோபல் பரிசு தவிர மற்ற அனைத்து நோபல் பரிசுகளும், சுவீடனில் உள்ள ஸ்டோக்ஹோம் நகரத்தில் வழங்கப்படுகின்றன. பரிசு பெறுவோரின் சொற்பொழிவு, இந்நிகழ்ச்சியின் முன்தினம் நடைபெறுவது வழக்கம்.
- நோபல் பரிசினை இதுவரை மூன்று தமிழர்கள் பெற்றுள்ளனர். இந்தப் பெருமைக்குரியோர் ச.வெ. இராமன் (இயற்பியர்-1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (இயற்பியல்-1983), வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (வேதியியல்-2009) ஆவர்.