Type Here to Get Search Results !

பிரதமரின் ஏழைகள் நலத் தொகுப்பின் கீழ் ரூ.68,903 கோடி நிதியுதவி

  • பிரதமரின் ஏழைகள் நலத் தொகுப்பின் கீழ், 42 கோடிக்கும் மேற்பட்ட ஏழைகள், ரூ.68,903 கோடி (04.12.2020 வரை) நிதியுதவி பெற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,

  • 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஜூலை மாதத்துக்கான 186.8 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை, 2020 நவம்பர் வரை பெற்றுள்ளன. ஜூலை மாதத்துக்கான 9.18 லட்சம் மெட்ரிக் டன் பருப்புகள் பல மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு நவம்பர் வரை அனுப்பப்பட்டுள்ளன.
  • 27.6 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் 55.21 கோடி பயனாளிகளுக்கு 2020 நவம்பர் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன. 37.03 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் 74.61 கோடி பயனாளிகளுக்கு 2020 அக்டோபர் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன. 
  • 37.89 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் 75.77 கோடி பயனாளிகளுக்கு 2020 செப்டம்பர் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன. 37.54 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் 75.07 கோடி பயனாளிகளுக்கு 2020 ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன.
  • 37.25 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் 74.51 கோடி பயனாளிகளுக்கு 2020 ஜூலை மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன. 36.62 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் 73.24 கோடி பயனாளிகளுக்கு 2020 ஜூன் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன. 
  • 37.46 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் 74.91 கோடி பயனாளிகளுக்கு 2020 மே மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன. 37.51 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் 75.04 கோடி பயனாளிகளுக்கு 2020 ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன.
  • பிரதமரின் ஏழைகள் நலத் தொகுப்பு திட்டத்தின் கீழ், இபிஎப்ஓ கணக்கிலிருந்து 44.56 லட்சம் தொழிலாளர்கள், ஆன்லைன் மூலம் ரூ.11,528 கோடி (8.12.2020 வரை) திருப்பிச் செலுத்த தேவையில்லாத முன்பணம் எடுத்துள்ளனர்.
  • பெருந்தொற்றை கருத்தில் கொண்டு திரும்ப எடுக்க முடியாத முன்பணமான 75% தொகையில் அல்லது மூன்று மாத ஊதியத்தில் எது குறைவானதோ அதை தங்களது கணக்குகளில் இருந்து தொழிலாளர்கள் பெற ஏதுவாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி விதிமுறையில் மாற்றம் செய்யப்படும்.
  • இதனால், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் பதிவு செய்து கொண்டுள்ள 4 கோடி தொழிலாளர்கள் குடும்பங்கள் இந்த பலனை பெறலாம்.
  • பிரதரின் ஏழைகள் நலத் தொகுப்பு உதவிகளின் கீழ் 2020 ஏப்ரல் 1 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான ஊழியம் ரூ.20 வரை உயர்த்தப்படவுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ஒரு தொழிலாளிக்கு ரூ.2000 கூடுதலாக கிடைக்கும். சுமார் 14.64 கோடி குடும்பங்கள் இதனால் பயனடையும்.
  • பெருமானமுள்ள நபரின் மனித உழைப்பு நாட்கள் நடப்பு நிதியாண்டில் 8.12.2020 வரை, 273 கோடி பேருக்கான வேலை நாட்கள் உருவாக்கப்பட்டன. ரூ.78,534 கோடி நிலுவையில் உள்ள ஊழியம் மற்றும் பொருட்களை ஈடுகட்ட மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • கொரோனா தொற்றை தடுப்பதற்கான பரிசோதனைகள் மற்றும் இதர தேவைகளுக்கும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் மாவட்ட கனிம வள நிதியை பயன்படுத்தி கொள்ளுபடி மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்படும்.
  • மாவட்ட கனிமவள நிதியில், 30% செலவு செய்யும்படி மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. ரூ.4,150 கோடி மதிப்பிலான இந்த நிதியில், (6.12.2020 வரை) ரூ.487.35 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
  • பிரதமரின் ஏழைகள் நலத் தொகுப்பின் ஒரு பகுதியாக #MNREGA திட்டத்தின் கீழ் நிலுவை ஊதியம் மற்றும் பொருட்களுக்கான பணம் வழங்க மாநிலங்களுக்கு ரூ.78,534 கோடி வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel