தற்சார்பு இந்தியா நலத் தொகுப்பு திட்டத்தின் கீழ் மூலதன செலவினங்களுக்கு ரூ9,879.61 கோடி ஒதுக்கீடு
- நாடு முழுவதும் மாநிலங்களின் மூலதன செலவினங்களுக்கான சிறப்புத் திட்டத்தை 'தற்சார்பு இந்தியா' நலத் தொகுப்பின் ஒரு பகுதியாக மத்திய நிதியமைச்சர் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்திருந்தார்.
- கொரோனா பெருந்தொற்றால் வரி வருவாயில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு மாநிலங்களின் மூலதன செலவினங்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தத் திட்டத்திற்கு மாநிலங்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 27 மாநிலங்களுக்கு மூலதன செலவினங்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் ரூ.9,879.61 கோடி ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே முதல் தவணையாக ரூ.4,939.81 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சுகாதாரம், ஊரக மேம்பாடு, தண்ணீர் விநியோகம், நீர்ப்பாசனம், எரிசக்தி, போக்குவரத்து, கல்வி, நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மூலதன செலவினங்களுக்கான திட்டங்களுக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
- மாநிலங்களின் மூலதன செலவினங்களுக்கான சிறப்புத் திட்டத்தின் பயன்களை தமிழகம் தவிர நாட்டிலுள்ள மற்ற அனைத்து மாநிலங்களும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
புராதன சின்னத்தில் இடம் பெற்ற அழகர்மலை யானை & சிற்பக்குளம்
- தமிழக தொல்லியல் துறை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, 92 புராதன சின்னங்களை பாதுகாக்கப்பட்டவையாக அறிவித்து அதனை பழமை மாறாமல் பராமரித்து வருகிறது.
- இந்த வருடம் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்ராவந்தவாடி கிராமத்தில் உள்ள சிற்பக்குளம், அரியலுார் மாவட்டம், அழகர்மலை கிராமத்தில் உள்ள யானை சிற்பமும் சேர்க்கப்பட்டுள்ளன.
- கீழ்ராவந்தவாடி கிராமத்தில் உள்ள சிற்பக்குளம் 16-ம் நுாற்றாண்டை சேர்ந்த சின்னம நாயக்கரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், ராமாயணம், மகாபாரதம், பெரியபுராண காட்சிகள், புடைப்பு சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.
- இதன் நான்கு வழிகளிலும், நந்தி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சோழர்ர்களுக்கு பின்னர், தமிழகத்தை ஆண்ட விஜய நகர மற்றும் நாயக்கர் காலமான, 16, 17 ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.
- அதேபோல, அழகர் மலை யானை சிற்பம், 80 அடி உயரம், 41 அடி நீளம், 12 அடி அகலத்துடன் பிரமாண்டமாக காட்சி தருகிறது. யானையின் கழுத்து மேல்பகுதியில் மணிகளும், கால்களுக்கு இருபுறங்களிலும் தாளமிடும் சிற்பமும், யானையின் தும்பிக்கையின் முடிவில் வீரன் என, கம்பீரமாக காட்சி தருகிறது யானை சிற்பம்.