Type Here to Get Search Results !

TNPSC 12th DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

வாருடாந்திர காலநிலை மாநாடு 2020
  • பாரீஸ் காலநிைல மாறுபாட்டு ஒப்பந்தம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி 196 நாடுகளுக்கு இடையே ஒப்பந்தமானது. 2016-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதியிலிருந்து இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. 
  • இந்த ஒப்பந்தத்தின்படி உலக வெப்பமயமாக்கலை 2 டிகிரி செல்சியஸுக்கும் கீழ் குறைப்பது அதிலும் 1.5 டிகிரி செல்சியஸுக்கும் கீழாக குறைக்க வேண்டும். அதாவது தொழிற்மயமாக்கலுக்கு முன்பிருந்த நிலைக்கு செல்ல இலக்குநிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பரில் பாரீஸ் காலநிலை மாறுபாடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் நிறைவேறி 5 ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து, வாருடாந்திர காலநிலை மாநாட்டை ஐ.நா.சபையுடன் சேர்ந்து பிரிட்டன், பிரான்ஸ், சிலி, இத்தாலி ஆகிய நாடுகள் சேர்ந்து இந்த ஆண்டு நடத்தின.
  • காணொலி மூலம் நேற்று நடந்த இந்த மாநாட்டில், உலகத் நாடுகளின் தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் பங்கேற்றனர்.
  • இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:
  • காலநிலை மாறுபாட்டுக்கான பரரீஸ் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு 5 ஆண்டு நிறைவடைகிறது. காலநிலை மாற்றுத்துக்கு எதிரான நமது போரில் முக்கியமான இலக்குகளை நோக்கி நாம் வைத்த அடியாகும். 
  • இன்று நமது இலக்குகளையும், பார்வைகளையும் உயர்வாக வைத்திருக்கிறோம், கடந்த காலத்தில் கடந்த வந்த பாதைகளையும் நாம் மறந்துவிடக்கூடாது.
  • நாம் நம்முடைய இலக்குகளை கண்டிப்பாக புதுப்பிக்க வேண்டும். இலக்குகள் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளதால் சாதனைகளையும் புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் எதிர்காலத் தலைமுறையினருக்கு நாம் குரல் கொடுக்க முடியும்.
  • பாரீஸ் காலநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தின் இலக்குகளை அடையும் பாதையில் செல்வதோடு மட்டுமல்லாமல், அந்த இலக்குகளையும் தாண்டி எதிர்பார்ப்புகளையும் கடந்து இந்தியா பயணிக்கும்.
  • இந்தியா இதுவரை கடந்த 5 ஆண்டுகளில் காற்றுமாசுவை 21 சதவீதம் குறைத்து, 2005-ம் ஆண்டு இருந்த அளவில் கொண்டுவந்துள்ளது. எங்களின் சூரியமின் உற்பத்தி திறன் கடந்த 2014ல் 2.63 ஜிகாவாட்ஸ் இருந்த நிலையில் 2020ல் 36 ஜிகாவாட்ஸாக உயர்ந்துள்ளது.
  • உலகளவில் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அளவு 4-வது இடத்தில் இருக்கிறது. 2022ம் ஆண்டுக்குள் 175ஜிகாவாட்ஸாக உயர்த்துவோம். 2030-ம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட்ஸ்ஸை எட்டுவோம்.
  • எங்களின் காடுவளர்ப்புத் திட்டமும், காட்டை பாதுகாப்பு உயிர்ச்சூழலை பாதுகாப்பதும் வெற்றிகரமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உலகளவில் இந்தியா இரு முக்கிய விஷயங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது. 
  • சர்வதேச சோலார் கூட்டமைப்பு மற்றும் பேரிடர் மீள் உள்கட்டமைப்புக்கு முன்னோடியாக இந்தியா இருந்து வருகிறது. 2047-ம் ஆண்டில் இந்தியா நவீன, சுந்திரதினத்தை அதாவது 100-வது ஆண்டு சுதந்திரதினத்தைக் கொண்டாடும். 
  • இந்த பூமியில் உள்ள அனைத்து இந்திய மக்களுக்கும் நான் அளிக்கும் வாக்குறுதி, நூற்றாண்டு இந்தியா இலக்குகளை அடைவதோடு மட்டுமல்லாமல், இலக்குகளைக் கடந்தும் எதிர்பார்ப்புகளை கடந்தும் பயணிக்கும்.
இந்திய தொழில் துறை கூட்டு சம்மேளனத்தின் 93வது ஆண்டு நிறைவு விழா மாநாடு
  • இந்திய தொழில் துறை கூட்டு சம்மேளனத்தின் 93வது ஆண்டு நிறைவு விழா மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ' இந்தப் புதிய சட்டத்தின் மூலம், விவசாயிகள் இடைத்தரகர்களை தவிர்த்து தங்களது பொருட்களை நேரடியாக விற்கலாம். 
  • மேலும், விவசாயிகள், தங்கள் வேளாண் பொருட்களை உள்ளூர் சந்தைகளைத்தவிர இதர இடங்களிலும் விற்கலாம்' என்று குறிபிட்டார்.
  • கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் மூலம் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. சமீபத்திய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய சந்தைகளை விரிவாக்கம் செய்யும்.தொழில்நுட்பத்திற்கான அணுகல் மற்றும் விவசாயத்தில் முதலீடுகளை கொண்டு வர உதவும், 'என்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel