TNPSC 11th DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

மத்தியபிரதேச மாநிலத்தில் அமைகிறது சம்பல் கொள்ளையர்கள் பற்றிய அருங்காட்சியகம்

 • மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களின் எல்லையில் சம்பல் பள்ளத்தாக்குகள் உள்ளன. இவற்றை மறைவிடமாகக் கொண்டு 1960-ம்ஆண்டு முதல் 2012 வரை கொள்ளையர்கள் வாழ்ந்தனர். இவர்கள் சம்பல் கொள்ளையர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
 • இவர்களில் பெரும்பாலானோர் உயர் சமூகத்தினரால்பாதிக்கப்பட்டு ஆயுதம் ஏந்தியவர்கள் ஆவர். இவர்களில் மொஹர்சிங், பூலான் தேவி, பான்சிங் தோமர், நிரூபய்சிங் குஜ்ஜர், தத்துவா உள்ளிட்ட பலரும் பிரபலமாக விளங்கினர்.
 • செல்வந்தர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு வாரி வழங்கும் வழக்கமுடைய இவர்களுக்கு பொதுமக்களின் ஆதரவும், பாதுகாப்பும் கிடைத்தது. இதனால், மத்திய, மாநில அரசுகளுக்கு இவர்கள் சவாலாக விளங்கினர்.
 • உ.பி.யில் போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட தத்துவா என்ற கொள்ளையனுக்கு அம்மாநிலத்தின் பாந்தாவில் ஒரு கோயிலும் கட்டப்பட்டுள்ளது. 
 • ஒருகாலத்தில் உ.பி., ம.பி. மற்றும் ராஜஸ்தானில் நடைபெறும் தேர்தல்களில் சம்பல் கொள்ளையர்கள் சுட்டிக்காட்டும் வேட்பாளர்களே வெற்றி பெறும் சூழல் நிலவியது. பிறகு அரசியலிலும் குதித்த பலரில் பூலான் தேவி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளாகவும் பலர் தேர்வு செய்யப்பட்டனர்.
 • எனவே இவர்களில் முக்கிய மான 80 கொள்ளையர் கும் பலின் உண்மைக் கதைகள் தொடர்பான புகைப்படங்களுடன் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. 
 • இதில், அக்கொள்ளையர்கள் பயன்படுத்திய துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும், உடைகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளன. ம.பி.யில்சம்பல் பகுதியின் குவாலியர் அருகே பிந்த் நகரில் பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டப்பட்ட ஒருகட்டிடத்தில் இந்த அருங்காட்சியகம் அமைகிறது.

ஈரான் - ஆப்கானிஸ்தான் இடையே முதல் ரயில் சேவை தொடக்கம்

 • கிழக்கு ஈரானில் இருந்து மேற்கு ஆப்கானிஸ்தான் வரை 140 கிலோமீட்டர் தூரம் வரை இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு 75 மில்லியன் டாலர் செலவில் இந்த தொடங்கப்பட்டது. ஆப்கானிஸ்தானின் வளர்ச்சியில், ஒரு பகுதியாக எல்லையின் இருபுறமும் கட்டுமானத்திற்கு ஈரான் நிதியளித்தது.
 • ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டுத் தலைவர்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் சரக்கு ரயில் இணைப்பை திறந்து வைத்தனர். இது இரு நாட்டின் வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.

அவசர கால நிதியில் இருந்து 73.7 பில்லியனை பயன்படுத்த ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல்

 • உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு, அணைத்து நாடுகளில் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 • அந்த வகையில், ஜப்பானிலையில், கொரோனா வைரஸ் காரணமாக நலிவடைந்த பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சுற்றுலா துறையை மேம்படுத்தவும் மேலும் பல சீரமைப்புகளை மேற்கொள்ளவும், வசர கால நிதியில் இருந்து 73.7 பில்லியனை பயன்படுத்த ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 • மேலும், குறைந்த வருமானம் கொண்ட பெற்றோருக்கு அதிக நிதி உதவியை வழங்க அரசாங்கம் 73.69 பில்லியன் யென் பயன்படுத்தும். தொற்றுநோயால் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் பொருளாதார விளைவுகளில் நேரடியாக கவனம் செலுத்துவதற்காக மொத்தம் 11.5 டிரில்லியன் யென் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் ஆலை அமைக்க `லூலூ' திட்டம்

 • ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த லூலூ குழுமம், இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நகரில் உணவு பதப்படுத்தும் ஆலை அமைக்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை லூலூ குழுமத்தின் தலைவர் யூசுப் அலி வெளியிட்டார்.
 • ஜம்மு காஷ்மீரில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் உணவு பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள காஷ்மீர் முதன்மைச் செயலர் நவீன் குமார் சவுத்ரி தலைமையிலான குழுவிடம் அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
 • காஷ்மீரில் இருந்து ஆப்பிள், குங்குமப்பூ உள்ளிட்டவற்றை லூலூ குழுமம் இறக்குமதி செய்கிறது. இவற்றை அடுத்து வரும் காலங்களில் மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். லூலூ குழுமம் இதுவரையில் 400 டன் ஆப்பிளை இறக்குமதி செய்துள்ளது. கரோனா வைரஸ் ஊரடங்கு காலத்திலும் பல்வேறு சிரமங்களுக்கு இடையே இறக்குமதி தொடர்ந்தது.

இந்தியா - உஸ்பெகிஸ்தான் இடையே 9 ஒப்பந்தங்கள் கையெழுத்து
 • இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையே காணொலி வாயிலான மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டை பிரதமா் மோடியும், உஸ்பெகிஸ்தான் அதிபா் ஷவ்கத் மிா்ஸியோயெவும் தொடக்கி வைத்தனா். அப்போது பிரதமா் மோடி பேசியதாவது:
 • மத்திய ஆசியாவில் முக்கிய நாடாக உஸ்பெகிஸ்தான் திகழ்கிறது. அந்நாட்டை அண்டை நாடுகளின் நீட்சியாகவே இந்தியா கருதுகிறது. பாதுகாப்பு, வா்த்தகம், முதலீடு, எரிசக்தி, வேளாண்மை, கல்வி, அறிவியல்-தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவும் உஸ்பெகிஸ்தானும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றன.
 • இந்திய கடனுதவியுடன் பல்வேறு திட்டங்களை உஸ்பெகிஸ்தானில் செயல்படுத்துவதற்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இரு நாட்டு ராணுவங்களும் இணைந்து முதல் முறையாகக் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன. விண்வெளி, அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவு வலுவடைந்து வருகிறது.
 • இந்தியாவும் உஸ்பெகிஸ்தானும் பயங்கரவாதத்தைக் கடுமையாக எதிா்த்து வருகின்றன. தீவிரவாதம், அடிப்படைவாதம், பிரிவினைவாதம் உள்ளிட்டவற்றுக்கு எதிராகவும் இரு நாடுகளும் குரல் கொடுத்து வருகின்றன. பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்வதில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளன.
 • ஆப்கானிஸ்தான் அரசின் தலைமையில், அதன் கட்டுப்பாட்டுக்கு உள்பட்டு அந்நாட்டில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று இந்தியாவும் உஸ்பெகிஸ்தானும் ஒப்புக் கொள்கின்றன. 
 • அந்நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்குக் கடந்த 2 தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் பலன்கள் தொடா்ந்து நீடிக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது.
 • கரோனா நோய்த்தொற்று பரவல் காலத்தில் இந்தியாவும் உஸ்பெகிஸ்தானும் ஒத்துழைப்புடன் செயல்பட்டன. இரு நாடுகளுக்கிடையே வேளாண் பொருள்கள் வா்த்தகத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் பிரதமா் மோடி.
 • மாநாட்டின்போது பிரதமா் மோடியும், அதிபா் மிா்ஸியோயெவும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, மரபுசாரா எரிசக்தி, இணையவழிக் குற்றங்கள் தடுப்பு, சரக்குப் போக்குவரத்து தொடா்பான தகவல் பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் நிலவும் நல்லுறவை மேம்படுத்துவது தொடா்பாக 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 
 • இந்தியாவுக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே வா்த்தக முன்னுரிமை ஒப்பந்தம், இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் உள்ளிட்டவை கையெழுத்தாவது தொடா்பான பேச்சுவாா்த்தையை விரைவுபடுத்துவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. 
 • உஸ்பெகிஸ்தானில் சாலைக் கட்டமைப்பு, கழிவுநீா் சுத்திகரிப்பு உள்ளிட்டவை தொடா்பான திட்டங்களை நிறைவேற்றுவதற்காக ரூ.33,050 கோடி கடனுதவியை வழங்குவதற்கு இந்தியத் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
 • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளில் சீா்திருத்தங்களைப் புகுத்துவதற்கும், உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் தலைவா்கள் ஆதரவு தெரிவித்தனா். 
 • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக இந்தியா தோந்தெடுக்கப்படுவதற்கு உஸ்பெகிஸ்தான் ஆதரவு தெரிவித்தது என்று கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments