Type Here to Get Search Results !

TNPSC 14th DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

10 லட்சம் ஆலோசனைகளை வழங்கிய இ-சஞ்ஜீவனி: தமிழகம் தொடர்ந்து முதலிடம்

  • இணையதளம் மூலம் வழங்கப்படும் தொலை தொடர்பு மருத்துவ சேவை, சுகாதார சேவைகளின் அளவை மட்டும் விரிவுபடுத்தாமல், சுகாதார சேவைகளின் தரத்தையும் மேம்படுத்தி, பணத்தையும், நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. 
  • இ-சஞ்ஜீவனி என்ற பெயரில், இந்தியாவில் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் தொலை தொடர்பு மருத்துவ சேவை வழங்கப்பட்டது. கொவிட்-19 நேரத்தில், மக்கள் வெளியே செல்ல முடியாத நேரத்தில் இத்திட்டம், மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. டிஜிட்டல் சுகாதார சூழலையும் ஊக்குவித்துள்ளது.
  • சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இ-சஞ்ஜீவனி திட்டம் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பயன் அளிக்கிறது. இ-சஞ்சீவனி ஏபி-எச்டபிள்யூசி திட்டம் மருத்துவர்கள் இடையேயான ஆலோசனையை வழங்குகிறது. இதன் மூலம் 240 இடங்களில் உள்ள 6 ஆயிரம் மருத்துவமனைகளுக்கு, மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைகள் வழங்குகின்றனர்.
  • இ-சஞ்சீவனி ஓபிடி பிரிவு, வீட்டில் இருக்கும் நோயாளிகளுக்கு தொலை தொடர்பு மருத்து ஆலோசனைகளை வழங்குகிறது. இதில் ஆலோசனை வழங்க 8,000 மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 14,000 பேர் இ-சஞ்சீவனி மூலம் மருத்துவ ஆலோசனை பெறுகின்றனர்.
  • நாடு முழுவதும் 550க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் இ-சஞ்சீவனியை பயன்படுத்துகின்றனர். இவர்களில் 10 சதவீதம் பேர் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள். 4ல் ஒரு பங்கு நோயாளிகள், ஒன்றுக்கு மேற்பட்ட முறை, இச்சேவையை பயன்படுத்தியுள்ளனர். இது தொலை தொடர்பு மருத்துவ சேவையை, மக்கள் விரும்புவதை காட்டுகிறது.
  • கேரளாவில், பாலக்காடு சிறையில் உள்ள கைதிகளுக்கு சுகாதார சேவைகள் வழங்க இ-சஞ்சீவனி பயன்படுத்தப்படுகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள முதியோர் இல்லத்திலும் இந்த சேவை பயன்படுத்தப்படுகிறது.
  • நாட்டில் உள்ள 10 மாநிலங்கள் இ-சஞ்ஜீவனி ஓபிடி சேவையை அதிகம் பயன்படுத்துகின்றன. அதில் முதல் இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்திலிருந்து இதுவரை 3,19,507 மருத்துவ ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. 2வது இடத்தில் உள்ள உத்தரப் பிரதேசம் 2,68,889 ஆலோசனைகளை பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசம் 79,838 ஆலோசனைகளை பெற்றுள்ளது.
  • இ-சஞ்ஜீவனி தொலை தொடர்பு மருத்துவ சேவை, ஆலோசனை வழங்குவதில் 10 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது.

வெ.இண்டீசுக்கு மீண்டும் இன்னிங்ஸ் தோல்வி, டெஸ்ட் தொடரை கைப்பற்றியது நியூசி

  • வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டெஸ்டில், இன்னிங்ஸ் மற்றும் 12 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
  • ஹென்றி நிகோல்ஸ் ஆட்ட நாயகன் விருதும், கைல் ஜேமிசன் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். இத்தொடரில் தொடர்ச்சியாக 2 இன்னிங்ஸ் வெற்றிகளைப் பதிவு செய்த நியூசிலாந்து 120 புள்ளிகளை அள்ளியது. 
சிப்காட் நிறுவனத்தின் புவிசார் இணையதளத்தை, முதல்வர் இ.பி.எஸ்., துவக்கி வைத்தார்
  • சிப்காட் நிறுவனம், மிக நவீன, 'ட்ரோன்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தொழில் துறை வளாகங்களில் உள்ள நிலங்கள், மனை அடுக்குகளின் பரப்பளவு, ஒதுக்கப்பட்ட மற்றும் காலியாக உள்ள இடங்கள், கட்டமைப்பு வசதிகள் போன்ற விபரங்களை, அனைவரும் பார்வையிடும் வகையில், புதிய புவிசார் இணையதளத்தை உருவாக்கி உள்ளது.
  • இதன் வழியே, சிப்காட் தொழில் பூங்காவில் உள்ள நிலங்களை, இருக்கும் இடத்திலிருந்தே இணைய வழியில், முப்பரிமாண அமைப்பில் பார்வையிடும் சிறப்பான வசதி, இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தொழில் தொடங்க 18 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், ரூ.24,458 கோடி முதலீடு, முதல்வர் முன்னிலையில் கையெழுத்து

  • தமிழகத்தில் 18 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடுதல் என மொத்தம் 24 திட்டங்களுக்கு ரூ.24,458 கோடி முதலீட்டில், 54,218 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
  • இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், தமிழக தொழில் துறை சார்பில், ரூ.19,995 கோடி முதலீடு மற்றும் 26,509 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில், 18 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
  • மேலும், ரூ.4,456 கோடி முதலீடு மற்றும் 27,324 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கும் 5 நிறுவனங்களின் தொழிற்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். மேலும், ரூ.47 கோடி முதலீடு மற்றும் 385 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் ஒரு நிறுவனத்தின் திட்டத்தை துவக்கி வைத்தார்.

ஏழை, எளிய மக்களுக்காக தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்: முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்

  • தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் இருந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மூலம் 2,000 ஆயிரம் மினி கிளினிக்குள் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்தார். 
  • இதன்படி, சென்னை மாநகராட்சி ராயபுரம், சேக் மேஸ்திரி தெரு, வியாசர்பாடி எம்.பி.எம். தெரு மற்றும் மயிலாப்பூர், கச்சேரி சாலை ஆகிய இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று `முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்'' திட்டத்தை தொடங்கி வைத்தார். 

கொல்கத்தாவில் தயாரான 'ஹிம்கிரி' போர்க் கப்பல் தொடக்கம்

  • கடற்படை பயன்பாட்டுக்காக 17ஏ திட்டத்தின் கீழ் 7 நவீன போர்க்கப்பல்களை உள்நாட்டில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. 
  • இவற்றில் 4 கப்பல்களை மும்பை மசகான் கப்பல் கட்டும் தளத்திலும், 3 கப்பல்களை கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட் (ஜிஆர்எஸ்இ) கப்பல் கட்டும் தளத்திலும் தயாரிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டது.
  • எதிரிகளின் ரேடாரில் சிக்காத தொழில்நுட்பத்துடன் இந்த போர்க்கப்பல்கள் உருவாக்கப்படுகின்றன. கொல்கத்தா ஜிஎஸ்எஸ்இ கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்ட முதல் கப்பல், 'ஹிம்கிரி', ஹூக்ளி நதியில்  இறக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது.
  • இந்த கப்பல் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் 80 சதவீத உபகரணங்கள் உள்நாட்டு நிறுவனங்களிடம் வாங்கப்படுபவை. இதன் மூலம் 2,000-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உருவாகியுள்ளது.
  • தண்ணீரில் இறக்கப்பட்டுள்ள இந்த ஹிம்கிரி கப்பலில், உள் கட்டமைப்பு பணிகள், ஆயுதங்கள், நவீன கருவிகள் பொருத்தப்பட்டு 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெலிவரி செய்யப்படும். அதன்பின் இந்த போர்க்கப்பல் கடற்படையில் இணைக்கப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel