'ஆகாஷ்' நிறுவன இயக்குனருக்கு தொழில்முனைவோர் விருது
- பி.எச்.டி., சேம்பர் ஆபர் காமர்ஸ் நிறுவனம், 1977 முதல், தொழில் முனைவோர் மற்றும் தனி நபர்களுக்கு, அவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் புரிந்துள்ள சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது.
- இந்தாண்டிற்கான விருது வழங்கும், தேர்வு குழுவின் தலைவராக, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி, ஆர்.சி.லஹோதி இருந்தார்.
- அவருடன், கனரா வங்கியின், முன்னாள் தலைமை நிர்வாக இயக்குனர் ஸ்ரீ ராஜிவ் கே துபே, மூத்த தொழிலதிபர், டாக்டர் அருணா அபே ஓஸ்வால்ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
- இக்குழுவின் பரிந்துரைப்படி, போட்டித் தேர்வுகளுக்கு, மாணவர்களை தயார் செய்வதில், தேசிய அளவில் முன்னணியில் உள்ள, ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவன நிர்வாக இயக்குனரான, ஜே.சி.சவுத்ரிக்கு, 'புகழ்பெற்ற தொழில்முனைவோர் விருது - -2020' வழங்கப்பட்டது.
- இந்த விருதை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும், முன்னாள் ராணுவ ஜெனரலுமான, வி.கே.சிங் வழங்கினார்.
- கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி அமைந்துள்ளது.இங்குள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில், பிரசித்திபெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது.
- கேரளாவில் உள்ள பெரும்பாலான கோவில்கள், இந்த போர்டின் நிர்வாகத்தில் உள்ளன. இந்நிலையில், இந்த போர்டு வரலாற்றில் முதன் முறையாக, பகுதி நேர அடிப்படையில் ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த, 18 பேர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர், கோவில்களின் பூஜாரிகளாக நியமிக்கப்பட உள்ளனர்.
- தேவசம் போர்டு சார்பில் இதுவரை, 310 பகுதி நேர பூஜாரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான தேர்வுகள் நடந்தபோது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவுகளில் இருந்து தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கவில்லை.
- இதனால் அவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு வெளியிட்டு, புதிய தரவரிசை பட்டியில் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இதிலும், பழங்குடியினருக்கான நான்கு இடங்களுக்கு, ஒருவர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தார்.
இந்தியா இத்தாலி இடையே 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
- பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இத்தாலி பிரதமர் பேராசிரியர் கியுசெப் கோன்டே ஆகியோருக்கிடையே இருதரப்பு மெய்நிகர் மாநாடு 2020 நவம்பர் ஆறு அன்று நடைபெற்றது.
- பேராசிரியர் கியுசெப் கோன்டே 2018-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்ததை நினைவுகூர்ந்த மோடி, இந்தியா- இத்தாலிக்கு இடையேயான உறவு சமீபகாலங்களில் வேகமாக வலுவடைந்திருப்பதை சுட்டிக்காட்டினார். நிலைமை சீரானவுடன் இத்தாலிக்கு வருகை புரியுமாறு பிரதமர் மோடிக்கு பிரதமர் பேராசிரியர் கோன்டே அழைப்பு விடுத்தார்.
- இருதரப்பு உறவுகளுக்கான கட்டமைப்பை விரிவாக ஆய்வு செய்வதற்கான வாய்ப்பை இந்த மாநாடு இரு தலைவர்களுக்கும் வழங்கியது.
- கோவிட்-19 உட்பட பொதுவான உலக சவால்களை எதிர்த்துப் போராடுவதில் வலுவான ஒத்துழைப்புக்கான உறுதியை தலைவர்கள் உறுதிப்படுத்தினர்.
- அரசியல், பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட விரிவான விஷயங்களை தலைவர்கள் விவாதித்தனர். குறிப்பாக ஜி-20 உள்ளிட்ட பிராந்திய மற்றும் சர்வதேச தளங்களில் நெருங்கி பணிபுரிவது என இருதரப்பும் ஒத்துக்கொண்டன.
- டிசம்பர் 2021-இல் இத்தாலியும், 2022-இல் இந்தியாவும் ஜி-20 தலைமைப் பொறுப்பை ஏற்பார்கள். டிசம்பர் 2020-இல் இருந்து இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் இணைந்து ஜி-20 நிர்வாக அமைப்பில் இருப்பார்கள்.
- ஒப்புதல் நடவடிக்கை முடிந்தவுடன் சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் இணைய இத்தாலி முடிவெடுத்திருப்பதை இந்தியா வரவேற்றது.
- இந்த மாநாட்டில் இருதரப்பின் உறவை மேம்படுத்தவும், உலகளாவிய பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் இருநாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவை மேம்படுத்துதல், தொழில்நுட்பப் அறிவைப் பகிர்ந்து கொள்ளுதல் உள்ளிட்ட 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
குவஹாத்தி உயர்நீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம் குடியரசுத் தலைவர் உத்தரவு
- இந்திய அரசியலமைப்பு சட்டம் தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தைக் பயன்படுத்தி, குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளான, நீதிபதி சஞ்சய் குமார் மேதி, நீதிபதி நானி தாகியா மற்றும் நீதிபதி மனிஷ் சவுத்ரி ஆகியோரை கவுகாத்தி நீதிமன்றத்தின் நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
- இந்த மூன்று நீதிபதிகளும் பதவியேற்றுக் கொள்ளும் நாளில் இருந்து இவர்களது நியமனம் அமலுக்கு வரும். இது தொடர்பான அறிவிக்கைகளை மத்திய நீதி மற்றும் சட்டத்துறை 2020 நவம்பர் 5 அன்று வெளியிட்டுள்ளது.