- வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஒரே இடத்தில் தீர்வு காண மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நல அமைச்சகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் 'ஒன் ஸ்டாப் சென்டர்'களை உருவாக்கியது.
- தமிழகத்தில் காஞ்சிபுரம், கோயம்புத்தூர், சேலம், மது
ரை,திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தலா ஒரு 'ஒன் ஸ்டாப் சென்டர்' செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களின் மூலம் குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஒரே இடத்தில் உதவிகள் வழங்கப்படுகின்றன. - இதற்காக ஒவ்வொரு மையத்திலும் வழக்கறிஞர், மனநல ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப வல்லுநர், சமையலர் உள்ளிட்டோர் பணியில் உள்ளனர்.
- இந்நிலையில், தமிழகத்தில் காஞ்சிபுரம், வேலூர், நெல்லை, விழுப்புரம் மாவட்டங்களைப் பிரித்து கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5புதிய மாவட்டங்கள் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டன.
- இவற்றில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரத்தில் ஏற்கெனவே 'ஒன் ஸ்டாப் சென்டர்'இயங்கி வருகிறது. எனவே, செங்கல்பட்டு மாவட்டம் தவிர மற்ற 4 மாவட்டங்களில் புதிதாக 'ஒன் ஸ்டாப் சென்டர்' திறக்க அனுமதி கேட்டு சமூக நலத் துறையின் சார்பில் மத்திய அரசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பப்பட்டது.
- இந்த சூழலில், புதிய மாவட்டங்களில் 'ஒன் ஸ்டாப் சென்டர்'களைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஒன் ஸ்டாப் சென்டர் / ONE STOP CENTER
November 08, 2020
0