Type Here to Get Search Results !

TNPSC 28th & 29th NOVEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ஸ்ரீபெரும்புதூர் அருகே 2வது சிப்காட் தொழிற்பூங்காவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி
  • ஸ்ரீபெரும்புதூரில் அருகே வல்லம் வடகல் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா - IIஐ அமைப்பதற்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் (சிஐஏஏஏ) இருந்து தமிழ்நாடு மாநில தொழிற்துறை மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுள்ளது.
  • 325.36 ஏக்கர் நிலப்பரப்பு உள்ள இடத்தில் 360 கோடி டாலர் செலவில் மேம்படுத்தப்பட்ட இந்த திட்டம் சுமார் 10,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க முதலீடுகளை ஈர்க்கும் என்று சிப்காட் அதிகாரிகல் கூறுகின்றனர். 
  • இந்த இடத்தில் ஆட்டோமொபைல் பாகங்கள், பொறியியல் மற்றும் ஃபேப்ரிகேஷன், மின்னணு பொருட்கள் உள்ளிட்ட பிற தொழில்கள் முன்மொழியப்பட்டுள்ளது .
அகமதாபாத், ஹைதராபாத், புனே ஆகிய இடங்களில் உள்ள கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் பிரதமர் மோடி ஆய்வு
  • சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று, உலகம் முழு வதும் பரவி, லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்துள்ளது. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இந்த வைரஸால் லட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த 2 நாடுகளில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
  • இதையடுத்து, கரோனா வைர ஸுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் பணியில் உலக நாடு கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இஸ்ரேல், ரஷ்யா, பிரிட்டன் உள் ளிட்ட நாடுகள் கரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. 
  • சில நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள், முதல் 2 கட்ட பரிசோதனைகளை நிறைவு செய் துள்ளன. தற்போது இறுதிகட்ட பரிசோதனை தீவிரமாக நடந்து வருகிறது. 
  • இதனால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த மருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்று நம்பப் படுகிறது. குறிப்பாக ரஷ்யா தயாரித்து வரும் மருந்துதான் முதலில் பொதுமக்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்நிலையில், இந்தியாவிலும் கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், அகமதாபாத்தைச் சேர்ந்த ஜைடஸ் பயோடெக் பார்க், புனேவில் உள்ள சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா (எஸ்ஐஐ) ஆகிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
  • இந்த 3 நிறுவனங்களின் மருந்து களும் 2 மற்றும் 3-வது கட்ட பரிசோதனையில் இருக்கும் நிலையில், மருந்து தயாரிப்பு பணிகளை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டிருந்தார். அதன்படி, 3 நிறுவனங்களுக்கும் அவர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
இந்தியா - இலங்கை - மாலத்தீவு முத்தரப்பு பேச்சுவார்த்தை
  • கடல், பிராந்திய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்து இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை கடைசியாக டெல்லியில் கடந்த 2014ல் நடந்தது. 
  • அதன் பிறகு, இந்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. தற்போது, 6 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் இப்பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. 
  • இதில், வங்கதேசம், மொரீஷியஸ் மற்றும் செசல்ஸ் நாடுகளும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டன. இந்திய அரசு சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இலங்கையின் சார்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே, மாலத்தீவு பாதகாப்பு துறை அமைச்சர் மரியா திதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel