Type Here to Get Search Results !

TNPSC 26th NOVEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?

  • ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் புயல்களுக்கு பெயரிடும் முறை உள்ளது. அந்த வகையில் வங்கக் கடல், அரபிக் கடல்களில் உருவாகும் வெப்பமண்டல புயல்களுக்கு வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏமன் ஆகிய 13 நாடுகள் பெயர் வைத்து வருகின்றன.
  • ஒவ்வொரு நாடும் 13 பெயர்கள் என மொத்தம் 169 பெயர்களை வழங்கும். 2000ஆம் ஆண்டு உலக வானிலை நிறுவனம் மற்றும் ஆசியா மற்றும் பசிபிக்கிற்கான ஐநாவின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் ஒப்புதல் கொடுத்துவிட்டது. அதன்படி கடி (வேகம்), தேஜ் (வேகம்), மரசு (தமிழ் இசைக் கருவி), ஆக் (நெருப்பு) ஆகிய பெயர்களை இந்தியா பரிந்துரைத்துள்ளது.
  • இதற்கான குழு, நாடுகளின் அகரவரிசைப்படி , அவை பரிந்துரைத்த பெயர்களை பட்டியலிடும். வங்கதேசம், ஈரான், மாலத்தீவுகள் என அகரவரிசை போய் கொண்டே இருக்கும். வடக்கு இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கான பெயர் பட்டியலில் 3ஆவது உள்ள பெயர்தான் நிவர்.
  • இந்த பெயரை ஈரான் பரிந்துரைத்தது. ஆம்பன் புயலுக்கு தாய்லாந்து வைத்தது. கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியிட்ட புயல் பெயர்களின் பட்டியலில் கடைசி பெயர் ஆம்பன். 
  • கடந்த ஜூன் மாதம் மகாராஷ்டிராவில் ராய்காட்டு மாவட்டத்தில் நிசர்கா புயல் தாக்கியது. நிசர்கா என்றால் இயற்கை என்று அர்த்தம். அந்த புயலுக்கு வங்கதேசம் பெயர் வைத்தது. 
  • சோமாலியாவில் கரையை கடந்த கடி புயலின் பெயர் இந்தியா பரிந்துரைத்ததாகும். அது போல் புதிதாக உருவாகும் புரேவி புயலுக்கு மாலத்தீவு பெயரிட்டுள்ளது. தாக்டே புயலுக்கு மியான்மரும், யாஸ் புயலுக்கு ஓமனும், குலாப் புயலுக்கு பாகிஸ்தானும் பெயரிட்டுள்ளது.
  • அரபிக் கடல், வங்கக் கடல், வடக்கு இந்திய பெருங்கடல் ஆகியன ஆண்டுக்கு 5 புயல்களை சந்திக்கின்றன. புதிதாக தயாரிக்கப்பட்ட புயல்களின் பெயர் பட்டிலை வைத்து அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஏற்படும் புயல்களுக்கு பெயர்களை வைத்து கொள்ளலாம்.

2025க்குள் விண்வெளி குப்பைகளை அகற்ற ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் ஒப்பந்தம்

  • விண்வெளியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்ய இந்த ஒப்பந்தம் இடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பல ஆண்டுகளாக மனிதர்கள் விண்வெளியில் ராக்கெட்டுகளை ஏவி வருகின்றனர். 
  • செயற்கைக்கோள்களை புவி வட்டப் பாதையில் செலுத்திவிட்டு ராக்கெட்டுகள் கழன்றுவிடும். இவை விண்வெளியில் மிதந்து வருகின்றன. இதேபோன்று பால்வீதியில் மனிதர்கள் பல விண்வெளி தொழில்நுட்ப குப்பைகளை விட்டு வருகின்றனர்.
  • சுவிட்சர்லாந்தை சேர்ந்த முதல்நிலை துவக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான கிளியர் ஸ்பேஸ் உடன் இந்த ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது.
  • கிளியர் ஸ்பேஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தோடு ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி 102 மில்லியன் டாலர் ஒப்பந்தம் இட்டுள்ளது. 
  • வரும் 2025 ஆம் ஆண்டு விண்வெளி குப்பைகளை அகற்ற இதற்காகவே பிரத்தியேகமாக ஓர் ஸ்பேஸ்கிராப்ட் தயாரிக்கப்பட உள்ளது. 
  • விண்வெளி குப்பைகளை விண்ணில் இருந்து பூமிக்கு கொண்டு வர இந்த ஸ்பேஸ்கிராப்ட் உதவும். விண்வெளி சென்ற விண்வெளி வீரர்களின் மூக்குக் கண்ணாடிகள் துவங்கி பெரிய செயற்கைக் கோள்கள்வரை பூமியை சுற்றி ஏகப்பட்ட விண்வெளிக் குப்பைகள் சுழன்று கொண்டிருக்கின்றன. 
  • இது குறித்து விஞ்ஞானிகள் காலகாலமாக எச்சரிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்த குப்பைகளை வெஸ்பா பேலோட் அடாப்டர் என்கிற கருவி பூமிக்கு தனது காந்த சக்தி மூலம் ஈர்த்து கொண்டு வரும்.
  • இதனால் புவி வட்டப் பாதை சுத்தமாகும் என நம்பப்படுகிறது. உலகிலேயே முதன்முறையாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம் இந்த முயற்சியை மேற்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவை வியப்பிற்கு உள்ளாக்கி உள்ளது.

வரும் கல்வி ஆண்டு முதல் தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வி: மத்திய கல்வி அமைச்சகம் முடிவு

  • தாய்மொழியில் கல்வி கற்பதே ஒருவரின் சிந்தனை வளத்துக்கும், உள சமூக வளர்ச்சிக்கும் சிறந்தது என்று கூறப்படுகிறது. எனினும், பல்வேறு அரசியல் பொருளாதாரச் சூழ்நிலைகளால் தற்போது வரை அதற்கு தடையாக இருந்து வருகிறது. 
  • குறிப்பாக, தமிழகத்தில் தாய்மொழி கல்வியை அமல்படுத்தும்படி மத்திய அரசை அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில், கல்வி அமைச்சக கூட்டம் நடந்தது.
  • இதில், வரும் கல்வி ஆண்டு முதல் பொறியியல் உட்பட தொழில்நுட்பம் அதாவது ஐ.ஐ.டி மற்று சில அமைப்பு ஆகிய படிப்புகளை மாணவர்கள் அவர்களின் மாநில தாய்மொழியில் பயிலும் நடைமுறையை கொண்டு வருவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. 
  • மேலும், திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரும்போது ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பது பற்றிய முடிவுகளை எடுக்கும்படி தேசிய தேர்வு முகமையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
அகில இந்திய சபாநாயகர்கள் 80வது மாநாடு
  • குஜராத் மாநிலம், கெவடியாவில் உள்ள ஒற்றுமை சிலையின் அருகே 'அகில இந்திய சபாநாயகர்கள் 80வது மாநாடு' தொடங்கியது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.
  • 2ம் நாளான நேற்று, இதில் காணொலி மூலமாக கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது: மக்களவை, சட்டப்பேரவை, பஞ்சாயத்து தேர்தல் என ஒவ்வொரு தேர்தலுக்கும் தனித்தனி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுவதால் வீண் செலவு ஏற்படுகிறது.
  • நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசு, நீதித்துறை, நாடாளுமன்றம் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 
  • ஒவ்வொரு முறையும் சில மாதங்கள் இடைவெளியில், பல்வேறு மாநிலங்களில் தேர்தல்கள் நடத்தப்படுகிறது. இதனால், நாட்டின் வளர்ச்சி பணிகள் மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே, ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவது விவாதத்துக்குரிய விஷயமே அல்ல. இந்தியாவின் ஒரே தேவையாகும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
3வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டு மாநாடு
  • 3-வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டு மாநாடு நடைபெற்றது. இதில் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
  • தொடர்ந்து அவர் கூறுகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் இந்தியா 4-வதுஇடத்தை வகிக்கிறது . அதனுடைய திறன் 136 ஜிகா வாட் ஆக உள்ளது. நாட்டின் மொத்த திறனில் 36 சதவீதம் ஆகும். 
  • கடந்த ஆறு ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் இரண்டரை மடங்காக அதிகரித்துள்ளோம். நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் வழங்கும் நோக்கத்தை தனது அரசாங்கம் இடைவிடாமல் தொடர்ந்து செய்து வருகிறது.
  • கடந்த 2017 ம் ஆண்டில் இருந்து நிலக்கரி பயன்பாட்டில் இருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனிற்கு மாறி வருகிறோம். இது அதிக செலவு கொண்டதாக இருந்தபோதிலும் நாங்கள் அதில் முதலீடு செய்தோம். தற்போது அதன் செலவு குறைக்கிறது. இவ்வாறு பிரதமர் கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel